திராவிட என்ற சொல்லை முற்றிலும் ஒழித்துக் கட்டப் போராடி வரும் போராளிகள் பார்வைக்கு- மணி மணிவண்ணன்

Estimated read time 0 min read

கால்டுவெல்லையும் மொழியியலையும் கரித்துக் கொட்டித் திராவிட மொழிக்குடும்பத்தின் பெயரைச் சமக்கிருத மொழிக்குடும்பம் என்றோ, தமிழிய மொழிக்குடும்பம் என்றோ மாற்றுவதற்குப் பிற உடன்பிறப்பு மொழி வல்லுநர்களின் ஒப்புதலும், பன்னாட்டு மொழியியல் வல்லுநர் ஏற்பும் தேவை. அது மிகக் கடினம். மிக எளிதாக நீங்கள் செய்யக்கூடிய மாற்றங்கள் தமிழ்நாட்டுக்குள்ளேயே, இந்தியாவுக்குள்ளேயே இருக்கின்றன.

தமிழ்த்தாய் வாழ்த்தில் “தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நற்திருநாடும்” என்ற வரி மிகத்தெளிவாகத் தமிழ்நாட்டைத்தான் குறிப்பிடுகிறது. தெக்கணம் என்பதும் வடசொல். எனவே, அதைத் “தென்மேடும் அதிற்சிறந்த நற்றமிழ்நாடும்” என்று மாற்றுங்கள். தளை தட்டாமல் இருக்க, மானே, தேனே என்று எதையாவது போட்டு நிரப்புங்கள்.

அடுத்தது, இந்திய நாட்டுப்பண்.

அதிலிருந்தும் திராவிட என்ற சொல்லை நீக்கலாம். அதில் திராவிடம் என்ற சொல்லைத் தாகூர் தமிழ்நாட்டை மட்டும் குறிக்க எடுத்தாண்டிருக்க வாய்ப்பில்லை. அது அன்றைய சென்னை மாகாணம் முழுவதையும் குறித்திருக்கலாம். அல்லது தென்னக மேட்டுநிலமான தெக்கணத்தைக் குறித்திருக்கலாம். எனவே “திராவிட உத்கல வங்கா” என்பதை (இங்கே ஒற்று மிகாது) “தக்‌ஷண உத்கல வங்கா” என்று மாற்றலாம்.

இரண்டையும் மாற்றுவது எளிது. நாட்டுப்பண்ணிலிருந்து திராவிடத்தை ஒழிக்கச் சங்கிகளும் ஆர்வம் காட்டுவார்கள். தமிழ்த்தாய் வாழ்த்திலிருந்து திராவிடத்தை ஒழிப்பது சற்றுக் கடினம். திராவிடக் கட்சிகள் மாற்றி மாற்றி அரசாளும்போது அவர்கள் இதை மாற்ற ஏற்க மாட்டார்கள். எனவே இதை மாற்றுவோம் என்று வாக்குறுதி கொடுக்கும் கட்சியை மாநிலத்திலும் ஒன்றியத்திலும் தேர்ந்தெடுத்து விட்டால், மாற்றம் வரும்.

மணி மணிவண்ணன்

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours