FARHA- திரைப்பட விமர்சனம்- சுமதி விஜயகுமார்

Estimated read time 1 min read

Farha. இஸ்ரேலால் தடை செய்யப்பட்ட திரைப்படம். படம் netflix ல் வெளியானதை தொடர்ந்து இஸ்ரேலியர்கள் பலர் தங்கள் எதிரிப்பை வெளிக்காட்ட netflix ஐ unsubscribe செய்துள்ளார்கள். இந்த செய்தி ஒன்று மட்டுமே இந்த படத்தை பார்க்க தூண்டியது.

அப்பாவிடம் அடம்பிடித்து பக்கத்தில் இருக்கும் நகருக்கு மேல்நிலைப்பள்ளிக்கு செல்ல விண்ணப்பத் தாளை தயாராய் வைத்திருக்கும் நேரம், இஸ்ரேல் அவளது கிராமத்தை ஆக்கிரமிக்கிறது. அப்பா அவளை வீட்டின் சமையல் அறையில் வைத்து வெளியில் பூட்டிவிட்டு போர் களம் செல்கிறார். அந்த அறையில் தனியாக 4 இரவுகள் தங்குகிறாள். பின்பு தப்பித்து சிரியா சென்று சேர்கிறாள். அவளது தந்தைக்கு என்ன ஆனது என்று கடைசி வரைக்கும் தெரியவில்லை.

உண்மையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படம். மிக சாதாரண கதை தான்.கதையின் நடுவே ஒரு 10 நிமிட காட்சிக்காகத்தான் இஸ்ரேல் தடைவிதித்திருக்கிறது.

பூட்டிய சமையலறையில் இருக்கும் Farha, சத்தம் கேட்டு கதவின் இடுக்கு வழியே பார்க்கிறாள். ஒரு கர்ப்பிணி பெண், கணவன், இரண்டு சிறிய பெண் குழந்தைகள் வருகிறார்கள். அந்த பெண்ணிற்கு அவள் கணவனே பிரசவம் பார்க்கிறான். அதிர்ஷ்டதவசமாக (!) தாயும் குழந்தையும் நன்றாக இருக்கிறார்கள். வீட்டின் வெளியே சத்தம் கேட்க பிறந்த ஆண் குழந்தையை அந்த சிறுமிகளிடம் கொடுத்து அவர்களை ஓர் இடத்திலும், மனைவியை ஓர் இடத்திலும் ஒளிய வைக்கிறான்.

இஸ்ரேல் படை அவர்கள் ஐவரையும் கண்டுபிடித்து நிற்க வைத்து சுட்டுக்கொள்கிறது. கடைசியில் கைக்குழந்தை மட்டும் உயிருடன் இருக்க, அதை ஒரு இளைய இஸ்ரேலியிடம் கொள்ள சொல்லிவிட்டு, ‘புல்லட்டை வீணாடித்துவிடாதே ‘ என்று கூறிக்கொண்டே மேல் அதிகாரி வெளியேறுகிறான். இஸ்ரேல் இளைஞன் அழுது கொண்டே காலை ஓங்குகிறான். மனம் இல்லாமல் ஒரு சிறிய துணியை எடுத்து அந்த குழந்தையின் மேல் போட்டு விட்டு அழுது கொண்டே வெளியேறுகிறான்.

Farha அந்த குழந்தையை காப்பாற்ற வெளியே வர முயலும் முயற்சியில் முதல் மாதவிடாய் அடைகிறாள். அவள் வெளியில் வரும் வேளையில் குழந்தை இறந்து போய், ஊரே மயான அமைதியில் இருக்கிறது.

உலக சினிமாவில் வெற்றிபெற்ற பல திரைப்படங்களும் யூதர்களுக்கு நிகழ்ந்த படுகொலைகளை அடிப்படையாக கொண்டதே. இனிமேல் வரும் திரைப்படங்களும் யூதர்களை அடிப்படையாக கொண்டே வரும் என்று எதிர்பார்க்கலாம். இந்த முறை இஸ்ரேலிய யூதர்கள் உலகின் கண்களுக்கு வேறு போல தெரிவார்கள்.

பாலஸ்தீனிய கண்ணீர் கதையை வரலாறு என்றைக்கும் மறக்காது.

திரைப்படத்தை இயக்கியது ஒரு பெண் என்பது மேலும் ஒரு சிறப்பு.

சுமதி விஜயகுமார்

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours