கச்சத்தீவும், ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டமும்

Estimated read time 1 min read

சர்வாதிகாரமான போராட்டம், எல்லை தாண்டி இலங்கை வடக்கு மீனவர்களின் வயிற்றில் அடித்து எமது கடல்வளத்தை அழித்து எமது பொருளாதாரத்தை சூரையாடிவிட்டு ஐந்து மீனவர்களுக்காக போராடுவது கச்சதீவுக்கு பக்தர்களை போகவிடாது தடுப்பது சர்வாதிகாரமான நியாயங்களற்ற போராட்டமே இராமேஸ்வர விசைப்படகு மீனவர்களது போராட்டம்!

2010ம் ஆண்டுகளின் பின் இந்திய இழுவைப் படகுகளினால் அழிக்கப்பட்ட பல கோடி பொறுமதியான எமது சொத்துக்களுக்கு நட்ட ஈட்டை கோருவோம் அதை செலுத்தாத வரை கைது செய்யும் மீனவரை விடுதலை செய்யக்கூடாது என நாமும் நீதிமன்றத்தில் வாதிடுவோம்.

இவ்வாறு கூறுகிறார் யாழ்ப்பாணம்- வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் உப தலைவர் நாகராசா வர்ணகுலசிங்கம்:- அவர் இன்று(24) யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது இராமேஸ்வர்ம் முதல் காரைக்கால் , நாகபட்டிணம் வரையான இந்திய இழுவைப் படகுகள் நாளாந்தம் எல்லை தாண்டி எமது கடல் இறையாண்மைக்குள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றது.

வடக்கு மீனவர்களது வயிற்றில் அடித்து எமது வாழ்வாதாரத்தை அழித்து எமது மீன்வளங்களை அள்ளிச் செல்கின்றனர்.

இதன் போது கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை, மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யுமாறு வடக்கு மீனவர்கள் நாம் தான் கோரிக்கை விடுத்தோம் அரசுக்கு அழுத்தம் கொடுத்தோம். அதனடிப்படையில் மீனவர்கள் மனிதாபிமான அடிபரபடையில் நீதிமன்ற நடவடிக்கையூடாக விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.

ஆனால் இராமேஸ்வரம் விசைப்படகு சங்கத்தினர் அராஜகத்திற்குப் போராட்ம் நடத்தி வருகின்றனர்.

கைதாகி சிறையில் உள்ள ஐவரும் யார்? கடற்படையினரால் கைதாகி நீதிமன்றினால் எச்சரிக்கை செய்யப்பட்டு நிபந்தனை அடிபரபடையில் விடுவிக்கப்பட்ட இருவர் இரண்டாவது தடவையாக நீதிமன்றின் எச்சரிக்கையை உதாசீனம் செய்து மீளவும் இரண்டாவது தடவையாக இலங்கையின் இறையாண்மை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட போது கைதானவர்கள்.

மற்றைய மூவரும் GPS கருவியை கையாண்டும் எல்லையைத் தாண்டி படகைச்செலுத்திய படகோட்டிகள் (படகுச் சாரதி) இவர்களைத் தான் நீதிமன்றம் குற்றவாளிகளாக கருதி ஆறு மாத கால சிறைத் தண்டணை வழங்கியுள்ளது.

ஆறு கோடி மக்களில் 2500 விசைப்படகு உரிமையாளர்களையும் அவர்களின் சட்டவிரோத மீன் பிடி முறையையும் தான் நாங்கள் எதிர்க்கிறோம்.

நீங்கள் அராஜகமான போராட்டம் நடாத்தி கச்சதீவு திருவிழாவிலும் அரசிலைப்புகுத்தியுள்ளீர்கள். பல பக்தர்களை கச்சச்தீவு வரவிடாமல் தடுத்தீர்கள், கடலோர காவற்படையினரை குவித்து தடுத்தீர்கள், இதன் பின்னால் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் மோடி அரசின் அரசியல் உள்ளது வடிவாக தெரிகிறது.

நீங்கள் அராஜகமான போராட்டங்களை நடாத்தினால் நாமும் கடலில் படகுகளை இறக்கி போராட்டத்தை தொடங்குவோம். இனி வரும் காலங்களில் கைது செய்யும் மீனவர்களை விடுதலை செய்யவிடாது நாமும் சட்டத்தரணி ஒருவரை நீதிமன்றத்தில் நிறுத்துவோம்.

2010ம் ஆண்டுகளின் பின் இந்திய இழுவைப் படகுகளினால் அழிக்கப்பட்ட பல கோடி பொறுமதியான எமது சொத்துக்களுக்கு நட்ட ஈட்டை கோருவோம் அதை செலுத்தாத வரை கைது செய்யும் மீனவரை விடுதலை செய்யக்கூடாது என நாமும் நீதிமன்றில் வாதிடுவோம்.

யாழ்ப்பாணம்- வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம்

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours