ஏமாற்றிய அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளால் நோட்டாவுக்கு வாக்களிக்க கீரப்பாக்கம் கிராம மக்கள் முடிவு

Estimated read time 0 min read

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீரப்பாக்கம் ஊராட்சியில், கடந்த 2018 ஆம் ஆண்டு இலவச வீட்டுமனை பட்டா வழங்குவற்காக அனைத்து கோப்புகளும் தயாரிக்கப்பட்டு தயார் நிலையில் இருந்தது. ஆனால் இதுவரை இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லை. இதேபோல் வீடு மற்றும் இடம் இல்லாத 70 ஏழை, எளிய குடும்பத்தினருக்கு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள முருகமங்கலம் மற்றும் கீரப்பாக்கம் திட்ட பகுதியில் வீடுகள் வழங்கக்கோரியும், மேலும் கீரப்பாக்கத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியை உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்த கோரியும், விநாயகபுரம் பகுதியில் விளையாட்டு திடல் அமைத்து தரக்கோரியும், குறைந்த மின்னழுத்த பிரச்சனையை தீர்க்க வலியுறுத்தியும், கீரப்பாக்கம் மற்றும் முருகமங்கலம் ஆகிய கிராமங்களை கிளாம்பாக்கம் காவல் நிலைய கட்டுப்பாட்டில் சேர்க்க கோரியும், கிடப்பில் போடப்பட்ட கீரப்பாக்கம் பிரதான சாலையை சீரமைக்க கோரியும், விநாயகபுரம் பகுதியில் சமுதாயக்கூடம், சிறுவர் பூங்கா, உடற்பயிற்சியகம், சாலை, கால்வாய் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் கடந்த பல ஆண்டுகளாக மனு கொடுத்து வலியுறுத்தியும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கும்போதெல்லாம் பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த அதிகாரிகள் மக்களை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டனர். மேலும் அரசியல்வாதிகளை நம்பி மக்கள் ஓட்டு போட்டு, ஓட்டு போட்டு ஏமார்ந்ததுதான் மிச்சம். இதில் ஆட்சி மாறினாலும், காட்சி மாறவில்லை. இனிமேல் தேர்தலை புறக்கணிக்கப்போவதில்லை. அதற்கு மாறாக நோட்டாவுக்கு வாக்களிப்பதே கீரப்பாக்கம் ஊராட்சி பொதுமக்களின் இறுதியான, உறுதியான முடிவாக இருக்கிறது.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours