August 20, 2026
I find the latest episode involving Kerala University Vice-Chancellor Mohanan Kunnummal deeply disturbing, not because of the word “cockroach” alone, but because it exposes something much larger: the growing politicisation of a university office that should stand above ideological battles. At a programme honouring meritorious students, Kunnummal asked them whether they were “cockroaches” and then urged them to shout that they were not.  He repeated the question when the hall remained silent. Hundreds of students were there. Almost nobody responded. Eventually, one or two voices said no. He then told them they were “lions” and the embodiment of Durga.  That silence was magnificent. He wanted a slogan. The students gave him silence. He wanted a chorus. They gave him their refusal. He wanted to turn a hall full of young minds into an audience for his political theatre. They simply did not participate. For me, this is not an isolated lapse of judgement. It comes days after Kunnummal appeared at an RSS-organised youth programme and declared that those who oppose saying Vande Mataram do not know who their mother is.  I have no problem with Kunnummal having his own political beliefs. He is entitled to them as a citizen. But a Vice-Chancellor is not an ordinary citizen when he occupies the university chair. That chair carries a responsibility to protect intellectual freedom, dissent, pluralism and the right of students to disagree. A university is not a political stage. A Vice-Chancellor is not a party propagandist. Students are not a captive audience to be instructed what to shout. What I see in Kunnummal’s recent conduct is an unhealthy hunger for political visibility and proximity to the Sangh Parivar. Every appearance, every loaded phrase, every dramatic intervention seems to push the academic office further into the political spotlight. It is attention seeking at the cost of academic dignity. And ultimately, it is an insult to Kerala. Kerala has a long and proud tradition of questioning authority. Our campuses have produced generations who challenged governments, religious institutions, political parties and even their own teachers. The strength of Kerala’s higher education tradition has never been obedience. It has been argument, dissent and the courage to ask uncomfortable questions. That tradition is now being dragged into a crude contest of slogans and ideological signalling. I worry about what this does to our universities. Higher education should teach a young person to ask why, not tell them what they must believe. It should teach them to disagree without fear. It should make them uncomfortable with easy answers. It should produce citizens capable of resisting every form of authoritarianism, whether it comes from the Left, Right, religious institutions, governments or university authorities themselves. Instead, we are witnessing a Vice-Chancellor seemingly desperate to prove his ideological credentials outside the university and then carrying that language back into a student gathering. That is where the line must be drawn. I do not think those students were weak because they remained silent. I think they were stronger than the man standing before them. They understood that they did not have to shout merely because someone in authority demanded a response. Their silence was not cowardice. It was dissent without a slogan.  And perhaps that is the most Kerala thing they could have done....
சென்ற வாரம் ஒரு வகுப்பில், சென்னை தான் ஆசியாவின் டெட்ராய்ட் – Asia’s Detroit – என்று அழைக்கப்படுகிறது தெரியுமா என்று மாணவர்களிடம் கேட்டேன்.  உடனே ஒரு மாணவன் எழுந்து ‘போர்ட் (Ford) கம்பெனி தான் இங்கிருந்து போய்விட்டதே” என்றான். இது தான் தமிழர்களின் தாழ்வு மனப்பான்மை. ஆசியாவின் டெட்ராய்ட் என்றால் என்ன பொருள்? ஏன் சென்னை அவ்வாறு அழைக்கப்படுகிறது? அப்படி என்ன சென்னை சாதித்தது என்று கேட்காமல், ஒரு கம்பெனி போய்விட்டதே என்று அங்கலாய்ப்பது ஏன்? (அமெரிக்கவில் உள்ள டெட்ராய்ட் நகரம் உலகின் மோட்டார் நகரம் என்று அழைக்கப்படுகிறது. போர்டு, ஜெனரல் மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்கள் இங்கு தான் தொடங்கப்பட்டன. அந்த அளவிற்கு சென்னையிலும் வாகன உற்பத்தி நடைபெறுவதால், அது ஆசியாவின் டெட்ராய்ட் என்று அழைக்கப்படுகிறது) இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் வாகனங்கள் மூன்றில் ஒரு பங்கு சென்னையில் தான் உருவாகின்றன. இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் 60 சதவீத வாகனங்கள் சென்னையிலிருந்து தான் வெளியேறுகின்றன. ஒரகடம் முதல் ஶ்ரீபெரும்புதூர் வரை உள்ள அறுபது கிமீ வாகன உற்பத்தி பிராந்தியத்தில் ஆயிரக்கணக்கான சிறு, பெரும் நிறுவனங்களும், லட்சக்கணக்கான தொழிலாளர்களும் நேரடியாகவோ மறைமுகமாகவோ பயன்பெறுகின்றனர். இதை ஒரு சென்னைவாசியாகவோ, தமிழராகவோ பெருமையாக எண்ணுவதா அல்லது ஒரு நிறுவனம் அது நொடித்துப் போனதால் வெளியேறிதைப் பேசுவதா? இப்போதும் ஹ்யூண்டாய், நிசான், ரெனே, பி.எம்.டபிள்யூ, அசோக் லைலாண்ட், டிவிஎஸ், ராயல் என்பீல்ட், எம்ஆர்எப் ஆகிய நிறுவனங்கள் இயங்குகின்றன. இந்தச் செய்திகள் ஜெமினை / ஏ.ஐ.மூலமாக எளிதாகக் கிடக்கின்றன. ஆனாலும் நாம் விமர்சிக்கிறோம் (critical) என்ற பெயரில் அவநம்பிக்கையோடு (cynical) அனைத்தையும் தட்டிக்கழிக்கிறோம், எள்ளி நகையாடுகிறோம், எட்டி உதைக்கிறோம். இது 1967ல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அக்கட்சியால் பதவி இழந்த காங்கிரஸ் கட்சியினரும், கம்யூனிஸ்ட் கட்சியினரும் திட்டமிட்டு உருவாக்கிய மனநிலையாகும். மூத்த திருச்சி வேலுச்சாமியிடமும், இளைய ஜி செல்வாவிடமும் இந்த ஒற்றுமையைக் காணலாம்.  இப்போதும் அவர்கள் இருவரும் திமுகவைத் தான் திட்டுகிறார்கள் என்பது இதற்குச் சாட்சி! விமர்சனம் செய்வோர், நாம் இதுவரை சாதித்தது என்ன என்று எப்போதாவது சொல்லியிருக்கிறார்களா? சென்னை தான் இந்தியாவின் மருத்துவத்தின் தலைநகரம் என்று நம்மில் யாருக்குத் தெரியும்?...
அன்பார்ந்த உழைக்கும் மக்களே! த.வெ.க. ஆட்சியமைத்து ஆகஸ்ட் 17-உடன் 100 நாட்கள் நிறைவடைகின்றன. இந்நாளையொட்டி, சாதனைகள் என்ற பெயரில் ஒரு போலிப் பட்டியலைத்...
காவிரி எல்லைப் பகுதிகளில் கர்நாடக வனத்துறையினரால் அந்தோணிசாமி, பீட்டர் மற்றும் குமார் ஆகிய மூன்று தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட கொடூரச் சம்பவம் சொல்லொணா அதிர்ச்சியையும் மிகுந்த வேதனையையும் அளிக்கிறது.  எல்லைப் பகுதிக்கு வேலை நிமித்தமாகவும், தங்களின் வாழ்வாதாரத்திற்காகவும் செல்லும் அப்பாவித் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை “வேட்டையாடுபவர்கள்” என்ற முத்திரைக் குத்தி, எவ்வித விசாரணையுமின்றித் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்வது கர்நாடக வனத்துறையினருக்குப் வழக்கமாகிவிட்டது. கர்நாடக அரசின் இந்த அராஜகப் போக்கிற்கும் மனித உரிமையற்றச் செயலுக்கும் எனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு அரசு உடனடியாக இச்சம்பவத்தில் தலையிட்டு, கர்நாடக அரசிடம் தனது பலமான கண்டனத்தைப் பதிவு செய்ய வேண்டும். இப்படுகொலையில் தொடர்புடைய வனத்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். படுகொலை செய்யப்பட்ட அந்தோணிசாமி, பீட்டர், குமார் ஆகியோரின் குடும்பத்தினருக்குக் கர்நாடக அரசும், தமிழ்நாடு அரசும் தலா ஒரு கோடி நிவாரண உதவி வழங்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு உடனடியாக அரசு வேலை வழங்கப்பட வேண்டும். இச்சம்பவம் குறித்து ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நடுநிலையான விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு, குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம்
கோயிலுக்கு சொந்தமான இடத்தில் பெரியார் சிலையை வைக்கக்கூடாது என்று பேசிய ராம ரவிக்குமாருக்கு, அர்ச்சகர் மாணவர்கள் சங்கம் கடும் கண்டனம்! தஞ்சாவூா் மாவட்டம், கண்டியூரில் பிரம்மசிரக்கண்டீசுவரா் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் உள்ள தந்தை பெரியாா் சிலையை அகற்றக் கோரி, திருப்பரங்குன்றத்தில் மதக் கலவரத்துக்கு முயற்சித்த ராம ரவிக் குமார் தாக்கல் செய்த வழக்கு தொடா்பாக தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது. மதுரை மாவட்டம், எழுமலையைச் சோ்ந்த ராம ரவிக்குமாா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தஞ்சாவூா் மாவட்டம், கண்டியூா் பிரம்மசிரக்கண்டீசுவரா் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் இந்து சமய அறநிலையத் துறை அனுமதியின்றி நிறுவப்பட்டதாக சொல்லப்படும், தந்தை பெரியாா்  சிலையை அகற்றி, மாற்று இடத்தில் வைக்க உத்தரவிட வேண்டும் எனக்கோரி உள்ளார்.  இந்த மதுரை உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி.காா்த்திகேயன், ஆா்.சக்திவேல் அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, கோயில் நிா்வாகம் தரப்பில் முன்னிலையான தவெக அரசின்  வழக்குரைஞா், தஞ்சாவூா் மாவட்டம், கண்டியூரில் உள்ள பிரம்மசிரக்கண்டீசுவரா் கோயில் நிலத்தில் உள்ள தந்தை பெரியாா் சிலையை அகற்றி மாற்று இடத்தில் வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பி உள்ளோம். இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவித்தார். அதன் பின் மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள், கோயிலுக்குச் சொந்தமான இடத்தில்தான் தந்தை பெரியாா்  சிலை வைக்கப்பட்டுள்ளதா என திருவையாறு வட்டாட்சியா் நேரில் ஆய்வு செய்ய வேண்டும். இதுகுறித்து தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் உரிய விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனக்கூறி  வழக்கு  செப்.9-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என அறிவித்துள்ளனர். கோயில் நிலத்திலோ அல்லது பொதுநிலத்திலோ, யார் சிலை இருக்க வேண்டும் என்பதை ராம ரவிக்குமார் தீர்மானிக்க முடியாது. தமிழ்நாட்டின் கோயில்களில், பெரும்பான்மை இந்து மக்கள் நுழைய முடியாமல் தடுக்கப்பட்டபோது, அதற்கு எதிராக போராடி ஆலய சமத்துவத்திற்காக அரும்பாடுபட்டவர் தந்தை பெரியார். ராம ரவிக்குமார் இருக்கும் சங்பரிவார் அமைப்பினர் எவரும் போராட்ட வில்லை.  கோயில்களில் அனைத்து சாதி இந்துக்களும் அர்ச்சகராக வேண்டும், நம் தாய் மொழியாம் அன்னை தமிழில் அர்ச்சனை  நடத்த வேண்டும் என்பதற்காக களமாடியவர் தந்தை பெரியார். அவரின் சிலையை கோயில் நிலத்தில் வைக்காமல் வேறு யார் சிலையை வைப்பது? இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் சனாதான கொடுமையால், கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு, உழன்று கொண்டிருந்த போது, அதற்கு எதிராக போராடி நம் மக்களின் வாழ்வுரிமையை மீட்க, எல்லாம் வல்ல இறைவனால் அனுப்பி வைக்கப்பட்டவர் தான் தந்தை பெரியார். இவ்வுலகில் நடக்கும் அனைத்தும் இறைவன்  செயல் தானே? அவன் இன்றி அணுவும் அசையுமோ?    கோயில் நிலங்கள் அனைத்தும் மக்கள் நிலங்கள் தான். மக்களின் உரிமைக்காக போராடிய தலைவரின் சிலையை அங்கு வைக்காமல் எங்கு வைப்பது? தஞ்சை மாவட்டம் கண்டியூர், பிரம்மசிரக் கண்டீஸ்வரர், கோயில் நிலத்தில் தந்தை பெரியாரின் சிலை இருக்க, இந்த சமய அறநிலைத்துறை உரிய அனுமதி வழங்க வேண்டும். வழக்கை தொடுத்த, ராம ரவிக்குமார்,  மதுரை மாவட்டம் எழுமலை உத்தப்புரத்தில், வாழும் தேவேந்திரர், அருந்ததியர் மக்களை கோயிலில் பொங்கல் வைக்க விடாமல் தடுக்கும் சாதி, தீண்டாமைக்கு துணை போவதை முதலில் நிறுத்தட்டும். பிறகு பேசலாம் தந்தை பெரியார் பற்றி!  2008முதல், இன்று வரை படித்து முடித்து, அர்ச்சகர் பணிக்காக காத்து நிற்கும், 500க்கும் மேலான அனைத்து சாதி இந்து மாணவர்களின், வாழ்வுரிமைக்காக என்றாவது பேசியிருக்கிறாரா ராம ரவிக்குமார்?  கருவறை தீண்டாமையை இன்று வரை அமுல்படுத்துவது அவரின் அமைப்பு தானே? கோயில்பற்றியும், இந்துக்கள் பற்றியும் பேசுவதற்கு இவருக்கு என்ன தகுதி இருக்கிறது? வர்ணாசிரம சனாதனத்தின், அடையாள செயல்படும் ராம் ரவிகுமாரை தமிழக மக்கள் பொருட்படுத்த வேண்டியதில்லை. எனவே,தந்தை பெரியார் சிலை குறித்த பிரச்சனையில் தவெக அரசு,  கோயில் நிலத்தில் சிலை வைக்க உரிய அனுமதி கொடுப்பதுடன், நீதிமன்றத்தில் சரியான வாதங்களை முன்வைத்து வழக்கை தள்ளுபடி செய்ய வைக்க வேண்டும் என்று கோருகிறோம். வா.ரங்கநாதன், தலைவர்,...
தமிழ்நாட்டு அரசியலில் இப்படி நேரடியாகவே தம் மத நம்பிக்கையைப் பரப்பிய எவரும் அமைச்சரவையிலோ, பேரவைத் தலைமைப் பொறுப்பிலோ இருந்ததாக எனக்கு நினைவில்லை.  குன்றக்குடி அடிகளார் போன்ற காவியுடை அணிந்த ஆதீனத்தலைவர்களைக் கூடத் தமிழ்நாடு சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுத்ததில்லை.  உத்தரப்பிரதேசம் ஒரு சாமியாரை முதலமைச்சராகத் தேர்ந்தெடுத்ததையெல்லாம் கிண்டலாகப் பார்ப்பவர்கள்தாம் தமிழர்கள். ஆனால், நடிகர் விசய் எழுப்பிய தேர்தல் ஆழிப்பேரலையில் யாரைத் தேர்ந்தெடுக்கிறோம் என்ற அக்கறையே இல்லாமல் தமிழ்நாடு கண்னை மூடி விசில் சின்னத்துக்குக் குத்திப் பலரைத் தேர்ந்தெடுத்திருக்கிறது. சட்டப்பேரவைத் தலைவர் பிரபாகர் ஏற்கனவே அண்ணா திமுகவின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தவர்தான் என்றாலும், அப்போதெல்லாம் அவர் தம் மதப்பரப்புரையை மேற்கொண்டிருந்தது பற்றி அரசியலர் யாரும் குரலெழுப்பவில்லை.  அவர் அப்போதும் பரப்புரை மேற்கொண்டிருப்பார் என்றுதான் நான் நினைக்கிறேன்.  ஆனால், இப்போது, தான் அவைத்தலைவர் என்று வெளிப்படையாகத் தன் பொறுப்பைப் பகிர்ந்து கொண்டே மதப்பரப்புரை செய்கிறார் பிரபாகர்.  இது கண்டிக்கத்தக்கது. மதச்சார்பற்ற அரசு என்பது அரசின் எல்லாப் பொறுப்புகளில் இருப்பவர்களுக்கும் பொருந்தும்.  அது உத்தரப்பிரதேச முதலமைச்சராக இருந்தாலும் சரி, தமிழ்நாட்டு அமைச்சராகவோ சட்டப்பேரவைத் தலைவராகவோ இருந்தாலும் சரி. பிரபாகர் பற்றிய கூகிள் தரும் தரவுகள் கீழே.  இவர் அண்மையில் கத்தோலிக்க ஆயர்கள் மாநாடு ஒன்றில் கலந்து கொண்டு கருக்கலைப்புத் தடைக்கு ஆதரவாகப் பேசியிருக்கிறார்.  அது அவருடைய தனிப்பட்ட நம்பிக்கையாக இருக்கலாம்.  ஆனால், அது குறித்து முதலமைச்சரிடம் சொல்லி ஆவன செய்கிறேன் என்று உறுதியளித்திருக்கிறார்.  இப்போது அது அவருடைய நம்பிக்கை மட்டுமல்ல, அரசியலாகவும் ஆகிறது.  அவரும் அவரை நியமித்த முதலமைச்சரும் இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.  நம்பிக்கையா அரசியலா? தான் சட்டப்பேரவைத் தலைமைப் பொறுப்பில் உள்ளவரை மதப்புரப்புரையில் கலந்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும்.  அவர் விலகவில்லையென்றால், அவரை நியமித்த முதலமைச்சர் யோச்சுப்பு விசய் அவரைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும்.  இல்லையேல், அவரும் இந்தப் பரப்புரையில் பங்கேற்கிறார் என்றுதான் பொருள். சமயச்சார்பற்ற அரசுகளில் ஆளுமைப்பொறுப்புகளில் இருப்பவர்கள் தத்தம் சமயங்களுக்குச் சார்பாக முடிவெடுப்பவர்கள் என்ற ஐயம் இருப்பது நல்லதல்ல. பிரபாகர் மட்டுமல்ல, சட்டப்பேரவையில் அமைச்சர் பொறுப்பில் இருக்கும் எவராக இருந்தாலும் அவர்கள் தத்தம் மதங்களின் சார்பில் பரப்புரை நிகழ்த்துபவர்களாக இருந்தால், அவர்கள் பதவி விலக வேண்டும்.  இல்லையேல், அவர்களும் சங்கிகள்தாம். John Christian Devavaram Prabhakar (JCD Prabhakar) is a veteran Indian politician and the Speaker of the Tamil Nadu Legislative Assembly, as well as an active lay evangelist. He has run a personal Bible distribution ministry in Tamil Nadu for over two decades. [1, 2] Background and Political Career Began his political career in 1980, initially serving with the AIADMK before joining TVK in January 2026. Unanimously elected as Speaker of the Tamil Nadu Legislative Assembly on May 12, 2026. Noted for openly integrating his Christian faith into his public role, famously quoting biblical passages (Job 9:10, Proverbs 3:27, and Mark 12:31) during his address from the Assembly chair. [1, 2] Evangelism and Public Stances...
‘ஏன்டா இதத்தான் நைட் full ஆ முழிச்சிருந்து ஓட்டிட்டு இருந்தியா?’ என்று காலால் எட்டி உதைக்கும் பறவை முனியம்மா போல, தவெக விடிய விடிய, திமுக திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி இருப்பதை, எதிர் கட்சிகள் மட்டுமின்றி, கூட்டணி கட்சிகளே விமர்சிப்பது ஒருபுறம் வேடிக்கையாக இருந்தாலும், ஒரு டிரில்லியன் டாலர் என்ற இலக்கை நோக்கி போய் கொண்டிருந்த மாநிலத்தை, 1.5 டிரில்லியன் டாலர் என்று தலைப்பிட்ட நிதிநிலை அறிக்கையை காணும் பொழுது எவ்வளவு பெரிய பேரிழப்பை தமிழ்நாடு சந்திக்க இருக்கிறது என்பதை நினைத்து வருந்தாமல் இருக்க முடியவில்லை. ஆட்சி பொறுப்பை ஏற்று கொண்டதும், வெள்ளை அறிக்கை என்று நிதித்துறை அமைச்சர் வெளியிட்டதை அடுத்து, அதுகுறித்து பேசிய தங்கம் தென்னரசும், ptr ம் என்ன சொல்லி இருந்தார்களோ, அது தான் உண்மை என்பதை தான் இந்த நிதிநிலை அறிக்கை நிரூபித்திருக்கிறது. ஆனால் அதனால் எல்லாம் தவெகவிற்கு எந்த பாதிப்புமில்லை. ஒரு அரசின் நிதி/கஜானா எப்படி வேலை செய்யும் என்பதை அறியாத பாமர மக்களுக்கு, ‘திமுக அரசு கஜானாவை சுரண்டி எடுத்துக் கொண்டு போய்விட்டது’ என்ற ரீல் நன்றாக சென்று சேர்ந்திருக்கிறது. அவர்கள் சரி, இணையதள தவெக ஆதரவாளர்கள் கருத்து என்னவென்று பார்க்க போனால், இன்னமும் உதயநிதி பேசியது, கைது, தலைவர் ஸ்டாலின் நடு இரவில் தன் வீட்டில் கைலியுடன் அமர்ந்திருப்பதை போட்டு நகைச்சுவை செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். இது தான் தவெக கொண்டு வந்த மாற்றம். இதற்கு முன்பு வரையில் நிதிநிலை அறிக்கை வந்தால், அதை ஆதரித்து அல்லது எதிர்த்து பதிவுகளை காண முடியும். இப்பொழுது உதயநிதி பேசியதில் இரட்டை அர்த்தம் இருக்கிறதா இல்லையா என்பது தான் பேசு பொருள். இந்த அறிக்கை குறித்து பேசுகையில் தோழர் கனகராஜ் ஒரு முக்கியமான புள்ளியை விளக்கினார். ‘இது வரை நிதிதுறை அமைச்சர், நிதித்துறை செயலாளர் பேட்டிகளில், மற்ற அறிக்கையில் சொன்னவற்றையும், இந்த நிதிநிலை அறிக்கையையும் சேர்த்து வைத்துப் பார்த்தால், இந்த அரசு தனியார் துறையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.’ 60 ஆண்டு கால ஊழலை நாங்கள் ஒழிக்க போகிறோம் என்று ஆட்சிக்கு வந்த பாஜக, காங்கிரஸ் நிறுவிய பொதுத்துறை நிறுவனங்களை எப்படி தனியார் மாயம் ஆக்கி கொண்டிருக்கிறதோ, அது போல, 60 ஆண்டு கால திராவிட கட்சிகள் கட்டி வைத்திருக்கும் கோட்டையை தவிடு பொடியாக்கும் வேலையை தான் தவெக அரசு செய்ய துவங்கி இருக்கிறது. மின்சார துறை , போக்குவரத்துக்கு துறை, கலைஞர் கனவு இல்ல திட்டம், சுற்றுலாத்துறைக்கான உட்கட்டமைப்பு மற்றும் திறன் பயிற்சி ஆகிய துறைகளில் தனியார் பங்களிப்பை உட்புகுத்தி இருக்கிறது தவெக அரசு. அதற்கு ஒத்து ஊதும் வகையில் நிதித்துறை செயலாளர், தனியார்மயத்தினால் இன்னும் சிறப்பாக செயல்பட முடியும் என்று வலியுறுத்தி இருக்கிறார். இதில் கூடுதலாக கலைஞர் கனவு இல்ல திட்டதிற்கு புதிய பெயரிட்டு, ஆண்டுக்கு 30,000 பயணாளிகளை குறைந்திருக்கிறது தவெக அரசு. தனியார் வங்கிகள் வருவதற்கு முன்பு, அரசுடைமை வங்கிகளில் அதிக கூட்டமிருக்கும். வங்கிக்கு சென்றால், நேர விரையம் இருக்கும். இப்போதெல்லாம், வங்கிகள் காற்று வாங்குகிறது. அனைத்தும் online ல் செய்து முடித்து விடலாம். உடன் குறைந்த அளவு பண இருக்கை என்று ஒன்று இருக்காது. வட்டி கூடுதலாக இருந்தது. இப்பொது அதெல்லாம் இல்லை. வங்கியில் பணிபுரியும் ஆட்களின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது. இது தான் தனியார்மயத்தின் லட்சணம். இதை தான் தவெக அரசு ஊக்கப்படுத்தி கொண்டிருக்கிறது. தங்கள் வெள்ளை அறிக்கையில் எதையெல்லாம் குற்றமாக முன்னிறுத்தினார்களோ, அதை முன்பிருந்ததை விட இன்னும் அதிகப்படுத்தி இருப்பது தான், இந்த பட்ஜெட்டில் தவெக செய்திருக்கும் சாதனை. வருவாய் பற்றாக்குறை திமுக ஆட்சியை விட ரூ 7000 கோடி அதிகரிப்பு. மூலதனத்திற்கான செலவு திமுக ஆட்சியை விட ரூ 3000 கோடி குறைப்பு. தமிழ்நாடு அரசு வசூலிக்கும் வரி வருவாய் திமுக ஆட்சியை விட ரூ 3000 கோடி குறைப்பு. வருவாய்க்கான செலவினங்கள் திமுக ஆட்சியை விட ரூ 12000 கோடி அதிகரிப்பு. பள்ளிக்கல்வி துறைக்கு திமுக ஆட்சியை விட ரூ 4000 கோடி குறைப்பு. தமிழ் எங்கள் உயிருக்கு சமம் என்று சொன்ன தவெக தமிழ் வளர்ச்சித்துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கி இருக்கிறது என்று சொல்லவேயில்லை என்றிருக்கிறார் தங்கம் தென்னரசு. எந்த வித புதிய திட்டங்களையும் அறிவிக்காமல், ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் 14 திட்டங்களுக்கு பெயர் மாற்றி அதன் பயனாளிகளை குறைத்து, தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பயன் தரும் திட்டங்களை விடுத்தது, பெண்களை அடிமைப்படுத்தும் திருமணம் மற்றும் பிள்ளைபேறுக்கு நிதியை ஒதுக்கி இருக்கும் தவெக அரசு, தமிழ்நாட்டின் சாபக்கேடு. சுமதி விஜயகுமார்
முக்கியமானத் தலைவர்கள் எல்லோரும் சினிமாவிலிருந்து வந்தால், சினிமாக் கலாச்சாரமே அரசியல் கலாச்சாரமாக மாறிப் போனால், இதுவும் நடக்கும், இன்னமும் நடக்கும். நம்முடைய எதிர்க்கட்சித்...