மாணவர்களிடையே சாதிய மோதல்களை தடுக்க முடியுமா?- ம.கி. எட்வின் பிரபாகரன்

Estimated read time 1 min read

“பள்ளிக்கூடங்களில் மாணவர்களிடையே ஜாதிய மத பாலின வர்க்க மோதல்களைத் தடுக்க பரிந்துரைகள்:

 1. அனைத்து பள்ளிக்கூடங்களிலும், ஆசிரியர்கள் உள்ளிட்ட பணியாளர்களின் நியமனங்களில் 69% இட ஒதுக்கீடு, முறையாக பின்பற்றப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.
 2. எல்லா பள்ளிகளிலும் SC/ST, மதச் சிறுபான்மை, மொழிச் சிறுபான்மை பணியாளர்கள் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
 3. பள்ளிக்கூட பணியாளர்கள் அனைவருக்கும் ஆண்டுக்கு ஒருமுறை, பக்கச்சார்பற்ற முறையில் மாணவர்களை நடத்துவதன் அவசியத்தைக் குறித்து, கருத்தரங்கங்களை அனைத்து பள்ளிகளிலும் நடத்துவதை கட்டாயமாக்க வேண்டும்
 4. பள்ளி வளாகத்துக்குள் எந்த ஜாதி மத நிறுவனங்களின் (இயக்கங்களின்) நிகழ்வுகளும் நடக்க அனுமதி வழங்கக் கூடாது.
 5. மாணவர்கள் ஜாதி, மதங்களை குறிக்கும் குறியீடுகளை அணிந்து கொள்வதை‌ தடை செய்ய வேண்டும்.
 6. பெயருக்கு பின்னால் ஜாதிப் பெயரைக் கொண்ட மாணவர்களை, தங்கள் பிறப்பு சான்றிதழிலேயே பெயரை மாற்றிக் கொள்ள ஆசிரியர்கள் அறிவுறுத்துவதை கட்டாயமாக்க வேண்டும். மாற்றினால் மட்டுமே, அடுத்தடுத்த வகுப்புகளுக்குச் செல்ல முடியும் என்கிற நிலையை உருவாக்க வேண்டும்.
 7. ஒவ்வொரு கல்வியாண்டு தொடக்கத்திலும், சமூக நீதி, சமத்துவம் குறித்து பாடம் நடத்தி, தேர்வு வைத்து, அதில் தேர்ச்சி பெறுபவர்களை மட்டுமே வகுப்பறைக்குள் நுழைய அனுமதிக்க வேண்டும்
 8. ஒவ்வொரு நாளும், காலையில் பள்ளிக்கு மாணவர்கள் வந்த உடன், பள்ளி மைதானத்தில் வரிசையாக நின்று, “ஜாதி மத பாலின வர்க்க வேறுபாடுகளை கடைபிடிக்க மாட்டேன்; எவ்வித வெறுப்பு பிரச்சாரத்துக்கும் இரையாக மாட்டேன் ” என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டு, வகுப்புகளுக்குச் செல்வதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும்.
 9. போலிச்செய்திகள் பரவி, மாணவர்களின் மனங்கள் பாழ்படுவதை தடுக்க, fact checking பயிற்சியும் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
 10. ஜாதி மோதல்களுக்கு வித்திட்ட தலைவர்களைப் பற்றிய பாடங்களை பாடப் புத்தகங்களில் இருந்து நீக்க வேண்டும்.
 11. மாணவர்களின் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதிலும் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்பட வேண்டும்
 12. மாணவர்கள் பள்ளி வளாகத்துக்குள் சக மாணவர்களிடம் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதை கண்காணிப்பதற்கே ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு பணியிடத்தை பிரத்யேகமாக உருவாக்க வேண்டும்
 13. ஆசிரியர்- மாணவர் உறவில் ஜனநாயகம் இருந்தால் தான், மாணவர் – மாணவர் உறவும் ஜனநாயகபூர்வமாக இருக்கும். “ஆண்டான் – அடிமை” அணுகுமுறை ஆசிரியர் – மாணவர் இடையே இருக்கக்கூடாது. Students Imitate teachers
 14. காலிப் பணியிடங்களை தாமதிக்காமல் உடனுக்குடன் நிரப்பி, ஆசிரியர்களின் பணிச்சுமையை குறைத்தால் தான், மாணவர்கள் மீது ஆசிரியர்களால் போதிய கவனம் செலுத்த முடியும்
 15. செய்த தவற்றுக்கு, பாதிக்கப்பட்டவரிடம் பாதிப்பை ஏற்படுத்தியவர் மன்னிப்பு கேட்கும் (எழுதும்) பழக்கத்தை சின்னஞ்சிறுவயதில் இருந்தே ஊட்ட வேண்டும். தான் செய்த தவற்றுக்கு தானே பொறுப்பேற்கும் accountability தான் திருந்துவதற்கான முதல் படி.
 16. வயது ஏற ஏற வெறும் மன்னிப்பு மட்டும் போதாது. தண்டனைகள் தந்து திருத்த வேண்டியது அவசியம்
 17. பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான moral supportஐ வழங்க ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு குழு இயங்க வேண்டும். அந்த குழு தன் பணியைச் செய்யத் தவறினால், மாணவர்கள் தொடர்பு கொள்ள ஒரு பொதுவான helpline number அவசியம் தேவை”
 • ம. கி. எட்வின் பிரபாகரன்

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours