மோடியின் வழியில் தனியாருக்கு தாரை வார்க்கும் தவெக அரசு.
திமுக ஆட்சியில் தூய்மை பணியாளர்கள், பேருந்து நிலைய ஒப்பந்ததாரர்கள், போக்குவரத்து துறை என்று ஒப்பந்த முறையில் தனியார் லாபம் ஈட்டக் கூடிய வகையில் செயல்பட்டது இதனால் தனியார் மாயமாக்கலை திமுக அரசு திட்டமிட்டு செய்து வருகிறது கம்யூனிஸ்ட்கள் பேசி வந்தார்கள் போராடினார்கள். ஆனால் திமுக ஆட்சியில் இது குறிப்பிட்ட சதவீதம் தான் தனியாரிடம் ஒப்பந்தம் போட்டு வேலை நடந்தது அதற்கு அரசு தரப்பில் ஒரு காரணம் சொல்லப்பட்டது.
மோடியின் தாராளமையமாதல் 100% தனியாருக்கு தாரை வார்ப்பது என்ற கொள்கை வகுத்து நாட்டை முதலாளிகளின் கையில் கொடுத்தது. அதன் தொடர்ச்சியாக இன்று கார்ப்பரேட் அமைச்சர்களை கொண்ட தவெக அரசு மோடி வழியில் தனியாருக்கு 100% வாய்ப்பை தமிழ்நாட்டில் தற்காலிக அனுமதி என்ற பெயரில் திறந்து வைத்திருக்கிறது. திமுக கடைநிலை ஊழியர்களின் வேளைகளில் தனியார் மையமாக்கல் செய்ததே தவறு என்போர் இதில் கவனம் செலுத்தாமல் இருப்பது ஏன்? இவ்வளவு அவரசம் ஏன்?
திமுக ஓரிரு துறைகளில் கடைநிலை பணிகளை தனியாருக்கு கொடுத்து அல்லது தனியாருடன் இணைந்து வேலை நடந்தது, அதில் மக்களை காக்கும் மருத்துவத்துறை போன்ற வற்றில் கனத்தோடு அணுகியாதால் தான் கொரோனா இரண்டாம் அலையில் திமுக அரசால் மக்கள் உயிரிழப்பு தடுக்கப்பட்டது என்பது நினைவில் வைக்க. அந்த சமயத்தில் தனியார் மருத்துவமனைகள் எப்படி நடந்துக்கொண்டன, அவ் மருத்துவமனைகள் மீது திமுக அரசின் கடும் நடவடிக்கை என்று சரியாக மருத்துவ துறை கையாளாய்பட்டது. ஆனால் இன்று அனைத்து தாராளமாயம் என்ற இடத்தில் தமிழ்நாடு நிற்பது பெரும் ஆபத்து. அதிலும் குறிப்பாக மருத்துவதுறை, அனுமதி பெற முடியாத மருத்துவ மணைகளுக்கு அனுமதி கொடுத்தார் என்று அன்புமணி மீது வழக்கே உள்ளது. இப்படி தனியாரை ஒரே அறிவிப்பில் அவசரமாக உள்ளே நுழைப்பது திட்டமிட்டு செய்யப்படுவதாகவே நினைக்கிறேன். இதில் பாதிக்கப்படுவதும் அடித்தட்டு மக்கள் தானே, பொதுவுடைமையார்கள் பார்வையில் தனியாருக்கு கொடுதற்கு அரசு செலவு செய்து அரசே நடத்தலாமே என்று எப்போதும் ஒலிக்கும் குரல் இன்னும் இங்கு ஒலிக்கவில்லை. இந்த நிலை மேலும் அனைத்து துறைகளிலும் விரிவடையும் – நிச்சயம் விரிவாடையாமல் போகாது. அப்போ களத்திற்கு வந்து கம்யூனிஸ்ட் போராட்டதில் காவல் துறையோடு மல்லு கட்டுவது போல் நான்கு ரீல்ஸ் வேலை முடிந்தது அடுத்த போராட்டத்தில் சந்திப்போம் என்று காலம் கடத்தாமல் ஆட்சியில் பங்கு உள்ளது என்பதை உணர்ந்து செயல்படுதல் நல்லது.
கூட்டணி அமைச்சரவை அதிகார பங்கீட்டில் கவனம் செலுத்தி வருவதால் தவெக வின் தனியாருக்கு தாராள கொள்கையை கண்டுகொள்ளவில்லையா? ஒரே சமயத்தில் இத்துணை மருத்துவமனைகளுக்கு அனுமதி என்பது புரட்சியாக தெரிகிறதா என்று தெரியவில்லை. அல்ல திமுக இல்லை என்பதால் வாய் திறக்கவில்லையா என்பது தெரியவில்லை. திமுகவாக இருந்திருந்தால் எத்துணை எதிர்ப்பு குரல்கள் வந்திருக்கும் ஏன் தவெக விற்கனா எதிர் குரல் எங்கும் இல்லை?
கொலை கொள்ளை என்று எப்போதும் நடப்பது போல் நடந்தால் கூட அது திமுக ஆட்சியாக இருந்தால் கூட்டணியில் இருக்கும் கட்சி தலைவர்களே சட்ட ஒழுங்கு சரியில்லை நாங்கள் கூட்டணியில் இருந்தாலும் உண்மை நிலையை சொல்லுவோம், நிர்வாக சீர்கேடு என்று பேட்டி கொடுத்துக் கொண்டிருந்த நேர்மைக்கு அத்தாரிட்டி கம்யூனிஸ்ட்களும், யாருக்கும் நாங்கள் கட்டுப்பட மாட்டோம் என்று ஒருநாளுக்கு நான்கு பேட்டி நான்கிலும் மாற்றி மாற்றி பேசினாலும் அதான் சரியானது என்று தமிழ்நாட்டின் மையம் என்று நினைத்துக்கொண்டு இருக்கும் விசிகவும் ஏனோ இத்துணை கோமாளி தனங்களுக்கு பிறகும், சட்ட ஒழுங்கு தினமும் சந்தி சிரிக்கும் அவலமும், தனியார் மையமாதல் கொள்கைகளையும் கண்டுகொள்ளாமல் கடந்து செல்வது ஏனோ?
பேரம் பேசப்பட்டது சட்ட மன்ற உறுப்பினர்களுக்கா? அல்ல அக்கட்சிகளின் கொள்கைகளுக்கா?
