சமூக வலைதளங்களில் எப்போதுமே தன் கருத்தை எந்தவித தயக்கமும், பயமும் இல்லாம நேரடியாகவும், தெளிவாகவும் சொல்வதில் பெயர் பெற்றவர் நடிகை வினோதினி. அந்த வகையில், சமீபத்தில் தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு நிலையைச் சாடி, எக்ஸ் (X) தளத்தில் அவர் போட்ட ஒரு பதிவுதான் இப்போ இணையத்தையே ரெண்டாகப் பிளந்து வச்சிருக்கு.
ஆட்சி அமைச்சு கொஞ்ச காலம்தான் ஆகுது, அதுக்குள்ள இத்தனை குற்றச் சம்பவங்களா?” என்று ஆரம்பித்து, “சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது” என்கிற ரேஞ்சுக்கு வினோதினி காட்டமாக விமர்சிக்க, இணையம் தீப்பற்றிக் கொண்டது. வழக்கம்போல, தளபதி விஜய் ரசிகர்களும், ஆதரவாளர்களும் வினோதினியை வச்சு செய்ய ஆரம்பிச்சாங்க.
அப்போதான் அந்தப் பக்கம் ஒரு விஜய் ஆதரவாளர் வந்து, “கடந்த 5 வருஷமா என்ன பண்ணிட்டு இருந்தீங்க? அப்போ ஏன் இதைப் பத்திக் கேட்கல?”னு ஒரு சவாலை வீசினார். இது அந்த ஆதரவாளர்கள் தரப்புல இருந்து வர்ற வழக்கமான ‘மறு கேள்வி’ அரசியல் — அதாவது….
முந்தைய ஆட்சியை விட இப்ப இருக்கிற ஆட்சி பெட்டர்னு தானே சொன்னீங்க, அப்புறம் ஏன் பழைய ஆட்சியோடு ஒப்பிட்டு கேள்வி கேட்குறீங்க?” என்கிற கோணத்தில் வந்த தாக்குதல்.
ஆனா, வினோதினி இதைக் கண்டு துளியும் அசரல. கொஞ்சம்கூட யோசிக்காம அந்த ஆதரவாளரை நோக்கி ஒரு கேள்வி கேட்டார் பாருங்க…
அப்படியென்றால், இப்ப நடக்குற ஆட்சி சரியான மாற்றமே இல்லைனு நீங்களே மறைமுகமா ஒப்புக்குறீங்க தானே?”
மறைமுகமாக கூட அல்ல நேரடியாகவே ஒப்புக் கொள்கிறீர்கள் அவ்வளவுதான்! அந்த ஒரு வரிப் பதில், இணையத்துல புயலா கிளம்பியது.
இது ஏதோ சாதாரண வார்த்தை இல்லை, ஒரு தார்க்கிக அம்பு. “முந்தைய அரசு செஞ்சதை விடுங்க, மாற்றம் தர்றேன்னுதானே நீங்க வந்தீங்க? அப்புறம் ஏன் திரும்பவும் பழைய ஆட்சியோடவே ஒப்பிட்டுக்கிட்டு இருக்கீங்க?”ங்கிற அந்த கூர்மையான அரசியல் விமர்சனம் அந்தப் பதிலுக்குள்ள மறைஞ்சிருக்கு. இந்த ஒரு பதிலால, சப்போர்ட் பண்றவங்க போக, நடுநிலையாளர்கள் கூட, “நிஜமாவே இந்த பாயிண்ட் செம”னு வினோதினியை ஆமோதிக்க ஆரம்பிச்சிட்டாங்க. இப்போ இணையம் முழுக்க வினோதினியின் இந்த பதிலை ஆதரித்தும், எதிர்த்தும் பலத்த விவாதங்கள் நடந்துட்டு இருக்கு.
மொத்தத்துல, தளபதி விஜய்யின் அரசியல் பயணம்ங்கிறது ஒரு நாணயத்தோட ரெண்டு பக்கம் மாதிரி. ஒரு பக்கம் நம்பிக்கையோட அவரைத் தூக்கிப் பிடிக்கிற கூட்டம், இன்னொரு பக்கம் “மாற்றம் என்னாச்சு?”னு கேள்வி கேட்குற கூட்டம்.
ஆட்சி மாறியது உண்மைதான், ஆனா அந்த மாற்றம்ங்கிறது மக்களின் அன்றாட வாழ்க்கையில, பாதுகாப்பான சூழல்ல பிரதிபலிக்கணும். அதைத்தான் வினோதினியின் இந்த கேள்வி, எந்தவித ஒளிவுமறைவும் இல்லாம எல்லார் கண்ணுக்கும் முன்னாடியும் கொண்டு வந்து நிப்பாட்டியிருக்கு. மாற்றம்னா என்ன? வெறும் ஆட்சி மாற்றமா, இல்ல வாழ்வியல் மாற்றமா? இதைத்தான் இந்த விவாதம் இப்போ கிளப்பி விட்டுருக்கு!
@VinodhiniUnoffl
