தனது வாக்கு வங்கியை தவெக விடம் இழந்துவிட்ட விசிக அதை திமுக மீதான விமர்சனங்களில் பதிலீடு செய்யமுடியுமென்று நம்புகிறது.
அதனாலே மீண்டும் மீண்டும்
விசிக வை நிரூபிக்க உண்மை என்ற பெயரில், அரசியலில் ஒரு தலைமையை நம்பி நடக்கும் செயல்களை ஊடக வெளியில் வெளிச்சத்திற்கு பரவவிடுகிறது. மேலும் பரவவிடும் அத் தகவல் முன்னுக்கு பின் முரணாக அல்லது மாறி மாறி இருப்பதால் பல சமாளிப்புகளும் தேவைபடுவதை பார்க்க முடிகிறது.
திமுக தோல்வியடைந்தது, அதை ஏற்றுக்கொண்டு தலைவர் முழு பொறுப்பு ஏற்றார். மேலும் தோல்விக்கான காரணம் குறித்து மக்களிடம் கழகம் சென்றுள்ளது. இதை கூட விமர்சனம் செய்யும் தலித் மற்றும் தலித் ஜாதி பற்று வாசிகள் ஏனோ லாபகமாக தலித் ஓட்டுக்கள் எதுவும் கூட்டணிக்கு வரவில்லை என்பதை பேசவில்லை. கூட்டணிக்கு வரவில்லை என்பது ஒருபக்கம் விசிக வுக்கே வரவில்லை என்பதை தான் உண்மை நிலை. இதை பற்றி வாய் தொறந்தால் மாட்டிக் கொள்வோம் என்பதாலையே தொடக்கத்தில் இருந்து திமுகவின் அரசியல் நகர்வுகளை குறிவைத்து இவர்களால் தாக்குதல் நடத்தப்பட்டது.
எது அரசியல் நகர்வு, எதிர் தரப்பின் நோக்கம், தற்போதைய தேவை என்ன? என்பதை கூட புரிந்துக்கொள்ள முடியாத அரசியல் தெளிவற்றவர்கள், இன்று திருமா எது செய்தாலும் அதை ராஜதந்திரம் என்பார்கள். அதை திமுக செய்தால் செய்ய நினைத்தால் அது தப்பு. இது கீழ் இருக்கும் விசிக தொண்டர் முதல் தலைவர் வரை பொருந்தும். தேர்தலில் கூட்டணிக்காக அதிமுகவிடம் கூட்டணி விசிக வைத்த போதும், தேர்தலுக்கு முன்னே விசிக தவெக விடம் கூட்டணி குறித்து பேசிய போதும், அடடா அங்கவே சென்றிருக்கலாமே என்று இப்போது ஏங்குவதும் என்ன நிலை என்பதை அவர்களே உணர வேண்டும்.
ஒரு பேச்சுக்காக, தங்கள் வளர்ச்சிக்காக விசிக அதிமுகவுடன் கூட்டணி வைக்கலாம், ஆனால் இன்றைய தமிழக சூழலில் திமுக அதிமுகவுடன் கூட்டணி குறித்து பேசினால் என்ன தவறு என்று கேட்டால் அவர்களிடம் பதில் உண்டா?
திருமா சொல்லும் கூற்றில் அதிமுக, திமுக இரண்டும் சம்மதப்படுள்ளது. இருவரும் பேசினார்கள் என்பது தான் சொல்லப்பட்டுள்ளது ஆனால் அதிமுக என்ற வார்த்தையை கூட நீங்கள் நீல நீட்டிகளிடம் பார்க்க முடியாது. முழுவதும் திமுக எதிர்ப்பு தன்மையை மட்டுமே எப்போதும் கடைபிடிப்பவர்கள் எப்படி அதிமுகவை விமர்சிப்பார்கள்?
ஒடுக்கப்பட்ட மக்கள் எப்படி அதிமுக
ஜெயலலிதாவை நம்பி வாக்கை கொடுத்து ஏதுமற்று நின்றார்களோ அதே நிலை விஜய்யை நம்பிக்கை தற்போது நிற்கிறார்கள். இதை சொன்னால் எங்கள் பக்கம் மட்டும் தான் ஓட்டு போச்சா? வேற யாரும் விஜய்க்கு போடலையா என்றும் எங்களுக்கு பாடம் எடுக்காதீங்க OBC கிட்ட போங்க என்றும் பதில் வரும். ஆனால் இந்த தேர்தலின் நிலை அறிந்தவர்களுக்கு தெரியும் என்ன நடந்தது என்று.
தலித் வாக்கு பிற இடத்திற்கு சென்று விட்டது இன்று வெளிப்படுத்தினால் தலித் கட்சிகளின் தலைவர்களுக்கு மௌஸ் இருக்காது. மேலும் தலித் மக்களுக்கான அரசியல் விழிப்புணர்வு கிடையாது, இன்னும் அரசியல் படுத்தவில்லை என்ற நிலை வரும், தலித் வாக்கு வாங்கி என்றால் திருமா தான் என்று இருப்பதை தாக்க வைக்க முடியாமல் போகும் இதான் இங்கு பிரச்னை. இதை வெளிடையாக பேச முடியாது பேசினால் தலித் விரோதி பட்டம் கிடைக்கும். அதனால் யாரும் கண்டுகொள்ளாமல் இருப்பதால் தலித் ஜாதி வெறியர்கள் திமுகவை ஏறி அடிக்கத்தான் செய்வார்கள் என்பதே உண்மை.
தலித் சமூகத்தை வைத்து காட்டிய அரசியல் எழுச்சி, விஜய் பிம்பத்தால் அனைத்தும் உடைப்பட்டு போனது அரசியலில் பெரும் இழப்பு தான். அதை ஒப்புக்கொல்லாமல் மாற்றத்தை சரி செய்யாமல், மேல் மட்ட அரசியல் முதல்வர் – துணை முதல்வர் என்று டீல் பேசிக்கொண்டிருந்தால் வாங்கிய 1% ஓட்டும் நிலைத்திருக்காது.
தங்கள் அரசியல் நிலையை மக்களிடம் நிலை நிறுத்த வேண்டும் களப்பணிகள் மூலம், திமுகவின் வெறுப்பின் மூலம் அல்ல. திமுகவை சாடி தங்கள் உண்மையை நிரூபிக்க வேண்டிய அவசியமும் இருக்காது.
யாழ் திலீபன்
