தமிழ்நாட்டு அரசியலில் இப்படி நேரடியாகவே தம் மத நம்பிக்கையைப் பரப்பிய எவரும் அமைச்சரவையிலோ, பேரவைத் தலைமைப் பொறுப்பிலோ இருந்ததாக எனக்கு நினைவில்லை. குன்றக்குடி அடிகளார் போன்ற காவியுடை அணிந்த ஆதீனத்தலைவர்களைக் கூடத் தமிழ்நாடு சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுத்ததில்லை. உத்தரப்பிரதேசம் ஒரு சாமியாரை முதலமைச்சராகத் தேர்ந்தெடுத்ததையெல்லாம் கிண்டலாகப் பார்ப்பவர்கள்தாம் தமிழர்கள்.
ஆனால், நடிகர் விசய் எழுப்பிய தேர்தல் ஆழிப்பேரலையில் யாரைத் தேர்ந்தெடுக்கிறோம் என்ற அக்கறையே இல்லாமல் தமிழ்நாடு கண்னை மூடி விசில் சின்னத்துக்குக் குத்திப் பலரைத் தேர்ந்தெடுத்திருக்கிறது.
சட்டப்பேரவைத் தலைவர் பிரபாகர் ஏற்கனவே அண்ணா திமுகவின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தவர்தான் என்றாலும், அப்போதெல்லாம் அவர் தம் மதப்பரப்புரையை மேற்கொண்டிருந்தது பற்றி அரசியலர் யாரும் குரலெழுப்பவில்லை. அவர் அப்போதும் பரப்புரை மேற்கொண்டிருப்பார் என்றுதான் நான் நினைக்கிறேன். ஆனால், இப்போது, தான் அவைத்தலைவர் என்று வெளிப்படையாகத் தன் பொறுப்பைப் பகிர்ந்து கொண்டே மதப்பரப்புரை செய்கிறார் பிரபாகர். இது கண்டிக்கத்தக்கது.
மதச்சார்பற்ற அரசு என்பது அரசின் எல்லாப் பொறுப்புகளில் இருப்பவர்களுக்கும் பொருந்தும். அது உத்தரப்பிரதேச முதலமைச்சராக இருந்தாலும் சரி, தமிழ்நாட்டு அமைச்சராகவோ சட்டப்பேரவைத் தலைவராகவோ இருந்தாலும் சரி.
பிரபாகர் பற்றிய கூகிள் தரும் தரவுகள் கீழே. இவர் அண்மையில் கத்தோலிக்க ஆயர்கள் மாநாடு ஒன்றில் கலந்து கொண்டு கருக்கலைப்புத் தடைக்கு ஆதரவாகப் பேசியிருக்கிறார். அது அவருடைய தனிப்பட்ட நம்பிக்கையாக இருக்கலாம். ஆனால், அது குறித்து முதலமைச்சரிடம் சொல்லி ஆவன செய்கிறேன் என்று உறுதியளித்திருக்கிறார். இப்போது அது அவருடைய நம்பிக்கை மட்டுமல்ல, அரசியலாகவும் ஆகிறது.
அவரும் அவரை நியமித்த முதலமைச்சரும் இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
நம்பிக்கையா அரசியலா?
தான் சட்டப்பேரவைத் தலைமைப் பொறுப்பில் உள்ளவரை மதப்புரப்புரையில் கலந்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும். அவர் விலகவில்லையென்றால், அவரை நியமித்த முதலமைச்சர் யோச்சுப்பு விசய் அவரைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும். இல்லையேல், அவரும் இந்தப் பரப்புரையில் பங்கேற்கிறார் என்றுதான் பொருள்.
சமயச்சார்பற்ற அரசுகளில் ஆளுமைப்பொறுப்புகளில் இருப்பவர்கள் தத்தம் சமயங்களுக்குச் சார்பாக முடிவெடுப்பவர்கள் என்ற ஐயம் இருப்பது நல்லதல்ல.
பிரபாகர் மட்டுமல்ல, சட்டப்பேரவையில் அமைச்சர் பொறுப்பில் இருக்கும் எவராக இருந்தாலும் அவர்கள் தத்தம் மதங்களின் சார்பில் பரப்புரை நிகழ்த்துபவர்களாக இருந்தால், அவர்கள் பதவி விலக வேண்டும். இல்லையேல், அவர்களும் சங்கிகள்தாம்.
John Christian Devavaram Prabhakar (JCD Prabhakar) is a veteran Indian politician and the Speaker of the Tamil Nadu Legislative Assembly, as well as an active lay evangelist. He has run a personal Bible distribution ministry in Tamil Nadu for over two decades. [1, 2]
Background and Political Career
Began his political career in 1980, initially serving with the AIADMK before joining TVK in January 2026.
Unanimously elected as Speaker of the Tamil Nadu Legislative Assembly on May 12, 2026.
Noted for openly integrating his Christian faith into his public role, famously quoting biblical passages (Job 9:10, Proverbs 3:27, and Mark 12:31) during his address from the Assembly chair. [1, 2]
Evangelism and Public Stances
Runs a long-standing personal Bible distribution initiative that grew from local transit and beach distribution in Chennai to thousands of copies monthly.
Frequently speaks at Christian community events, advocating for minority welfare issues such as church establishment permissions and welfare supports.
Drew significant public and political debate after participating and speaking at a high-profile “March for Life” anti-abortion rally in Chennai hosted by Catholic church organizations, raising discussions around secularism and constitutional roles. [5, 6, 7]
John Christian Devavaram Prabhakar (JCD Prabhakar) is a veteran Indian politician and the Speaker of the Tamil Nadu Legislative Assembly, as well as an active lay evangelist. He has run a personal Bible distribution ministry in Tamil Nadu for over two decades. [1, 2]
