August 13, 2026

Day: August 13, 2026

தமிழ்நாட்டு அரசியலில் இப்படி நேரடியாகவே தம் மத நம்பிக்கையைப் பரப்பிய எவரும் அமைச்சரவையிலோ, பேரவைத் தலைமைப் பொறுப்பிலோ இருந்ததாக எனக்கு நினைவில்லை.  குன்றக்குடி அடிகளார் போன்ற காவியுடை அணிந்த ஆதீனத்தலைவர்களைக் கூடத் தமிழ்நாடு சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுத்ததில்லை.  உத்தரப்பிரதேசம் ஒரு சாமியாரை முதலமைச்சராகத் தேர்ந்தெடுத்ததையெல்லாம் கிண்டலாகப் பார்ப்பவர்கள்தாம் தமிழர்கள். ஆனால், நடிகர் விசய் எழுப்பிய தேர்தல் ஆழிப்பேரலையில் யாரைத் தேர்ந்தெடுக்கிறோம் என்ற அக்கறையே இல்லாமல் தமிழ்நாடு கண்னை மூடி விசில் சின்னத்துக்குக் குத்திப் பலரைத் தேர்ந்தெடுத்திருக்கிறது. சட்டப்பேரவைத் தலைவர் பிரபாகர் ஏற்கனவே அண்ணா திமுகவின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தவர்தான் என்றாலும், அப்போதெல்லாம் அவர் தம் மதப்பரப்புரையை மேற்கொண்டிருந்தது பற்றி அரசியலர் யாரும் குரலெழுப்பவில்லை.  அவர் அப்போதும் பரப்புரை மேற்கொண்டிருப்பார் என்றுதான் நான் நினைக்கிறேன்.  ஆனால், இப்போது, தான் அவைத்தலைவர் என்று வெளிப்படையாகத் தன் பொறுப்பைப் பகிர்ந்து கொண்டே மதப்பரப்புரை செய்கிறார் பிரபாகர்.  இது கண்டிக்கத்தக்கது. மதச்சார்பற்ற அரசு என்பது அரசின் எல்லாப் பொறுப்புகளில் இருப்பவர்களுக்கும் பொருந்தும்.  அது உத்தரப்பிரதேச முதலமைச்சராக இருந்தாலும் சரி, தமிழ்நாட்டு அமைச்சராகவோ சட்டப்பேரவைத் தலைவராகவோ இருந்தாலும் சரி. பிரபாகர் பற்றிய கூகிள் தரும் தரவுகள் கீழே.  இவர் அண்மையில் கத்தோலிக்க ஆயர்கள் மாநாடு ஒன்றில் கலந்து கொண்டு கருக்கலைப்புத் தடைக்கு ஆதரவாகப் பேசியிருக்கிறார்.  அது அவருடைய தனிப்பட்ட நம்பிக்கையாக இருக்கலாம்.  ஆனால், அது குறித்து முதலமைச்சரிடம் சொல்லி ஆவன செய்கிறேன் என்று உறுதியளித்திருக்கிறார்.  இப்போது அது அவருடைய நம்பிக்கை மட்டுமல்ல, அரசியலாகவும் ஆகிறது.  அவரும் அவரை நியமித்த முதலமைச்சரும் இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.  நம்பிக்கையா அரசியலா? தான் சட்டப்பேரவைத் தலைமைப் பொறுப்பில் உள்ளவரை மதப்புரப்புரையில் கலந்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும்.  அவர் விலகவில்லையென்றால், அவரை நியமித்த முதலமைச்சர் யோச்சுப்பு விசய் அவரைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும்.  இல்லையேல், அவரும் இந்தப் பரப்புரையில் பங்கேற்கிறார் என்றுதான் பொருள். சமயச்சார்பற்ற அரசுகளில் ஆளுமைப்பொறுப்புகளில் இருப்பவர்கள் தத்தம் சமயங்களுக்குச் சார்பாக முடிவெடுப்பவர்கள் என்ற ஐயம் இருப்பது நல்லதல்ல. பிரபாகர் மட்டுமல்ல, சட்டப்பேரவையில் அமைச்சர் பொறுப்பில் இருக்கும் எவராக இருந்தாலும் அவர்கள் தத்தம் மதங்களின் சார்பில் பரப்புரை நிகழ்த்துபவர்களாக இருந்தால், அவர்கள் பதவி விலக வேண்டும்.  இல்லையேல், அவர்களும் சங்கிகள்தாம். John Christian Devavaram Prabhakar (JCD Prabhakar) is a veteran Indian politician and the Speaker of the Tamil Nadu Legislative Assembly, as well as an active lay evangelist. He has run a personal Bible distribution ministry in Tamil Nadu for over two decades. [1, 2] Background and Political Career Began his political career in 1980, initially serving with the AIADMK before joining TVK in January 2026. Unanimously elected as Speaker of the Tamil Nadu Legislative Assembly on May 12, 2026. Noted for openly integrating his Christian faith into his public role, famously quoting biblical passages (Job 9:10, Proverbs 3:27, and Mark 12:31) during his address from the Assembly chair. [1, 2] Evangelism and Public Stances...
‘ஏன்டா இதத்தான் நைட் full ஆ முழிச்சிருந்து ஓட்டிட்டு இருந்தியா?’ என்று காலால் எட்டி உதைக்கும் பறவை முனியம்மா போல, தவெக விடிய விடிய, திமுக திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி இருப்பதை, எதிர் கட்சிகள் மட்டுமின்றி, கூட்டணி கட்சிகளே விமர்சிப்பது ஒருபுறம் வேடிக்கையாக இருந்தாலும், ஒரு டிரில்லியன் டாலர் என்ற இலக்கை நோக்கி போய் கொண்டிருந்த மாநிலத்தை, 1.5 டிரில்லியன் டாலர் என்று தலைப்பிட்ட நிதிநிலை அறிக்கையை காணும் பொழுது எவ்வளவு பெரிய பேரிழப்பை தமிழ்நாடு சந்திக்க இருக்கிறது என்பதை நினைத்து வருந்தாமல் இருக்க முடியவில்லை. ஆட்சி பொறுப்பை ஏற்று கொண்டதும், வெள்ளை அறிக்கை என்று நிதித்துறை அமைச்சர் வெளியிட்டதை அடுத்து, அதுகுறித்து பேசிய தங்கம் தென்னரசும், ptr ம் என்ன சொல்லி இருந்தார்களோ, அது தான் உண்மை என்பதை தான் இந்த நிதிநிலை அறிக்கை நிரூபித்திருக்கிறது. ஆனால் அதனால் எல்லாம் தவெகவிற்கு எந்த பாதிப்புமில்லை. ஒரு அரசின் நிதி/கஜானா எப்படி வேலை செய்யும் என்பதை அறியாத பாமர மக்களுக்கு, ‘திமுக அரசு கஜானாவை சுரண்டி எடுத்துக் கொண்டு போய்விட்டது’ என்ற ரீல் நன்றாக சென்று சேர்ந்திருக்கிறது. அவர்கள் சரி, இணையதள தவெக ஆதரவாளர்கள் கருத்து என்னவென்று பார்க்க போனால், இன்னமும் உதயநிதி பேசியது, கைது, தலைவர் ஸ்டாலின் நடு இரவில் தன் வீட்டில் கைலியுடன் அமர்ந்திருப்பதை போட்டு நகைச்சுவை செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். இது தான் தவெக கொண்டு வந்த மாற்றம். இதற்கு முன்பு வரையில் நிதிநிலை அறிக்கை வந்தால், அதை ஆதரித்து அல்லது எதிர்த்து பதிவுகளை காண முடியும். இப்பொழுது உதயநிதி பேசியதில் இரட்டை அர்த்தம் இருக்கிறதா இல்லையா என்பது தான் பேசு பொருள். இந்த அறிக்கை குறித்து பேசுகையில் தோழர் கனகராஜ் ஒரு முக்கியமான புள்ளியை விளக்கினார். ‘இது வரை நிதிதுறை அமைச்சர், நிதித்துறை செயலாளர் பேட்டிகளில், மற்ற அறிக்கையில் சொன்னவற்றையும், இந்த நிதிநிலை அறிக்கையையும் சேர்த்து வைத்துப் பார்த்தால், இந்த அரசு தனியார் துறையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.’ 60 ஆண்டு கால ஊழலை நாங்கள் ஒழிக்க போகிறோம் என்று ஆட்சிக்கு வந்த பாஜக, காங்கிரஸ் நிறுவிய பொதுத்துறை நிறுவனங்களை எப்படி தனியார் மாயம் ஆக்கி கொண்டிருக்கிறதோ, அது போல, 60 ஆண்டு கால திராவிட கட்சிகள் கட்டி வைத்திருக்கும் கோட்டையை தவிடு பொடியாக்கும் வேலையை தான் தவெக அரசு செய்ய துவங்கி இருக்கிறது. மின்சார துறை , போக்குவரத்துக்கு துறை, கலைஞர் கனவு இல்ல திட்டம், சுற்றுலாத்துறைக்கான உட்கட்டமைப்பு மற்றும் திறன் பயிற்சி ஆகிய துறைகளில் தனியார் பங்களிப்பை உட்புகுத்தி இருக்கிறது தவெக அரசு. அதற்கு ஒத்து ஊதும் வகையில் நிதித்துறை செயலாளர், தனியார்மயத்தினால் இன்னும் சிறப்பாக செயல்பட முடியும் என்று வலியுறுத்தி இருக்கிறார். இதில் கூடுதலாக கலைஞர் கனவு இல்ல திட்டதிற்கு புதிய பெயரிட்டு, ஆண்டுக்கு 30,000 பயணாளிகளை குறைந்திருக்கிறது தவெக அரசு. தனியார் வங்கிகள் வருவதற்கு முன்பு, அரசுடைமை வங்கிகளில் அதிக கூட்டமிருக்கும். வங்கிக்கு சென்றால், நேர விரையம் இருக்கும். இப்போதெல்லாம், வங்கிகள் காற்று வாங்குகிறது. அனைத்தும் online ல் செய்து முடித்து விடலாம். உடன் குறைந்த அளவு பண இருக்கை என்று ஒன்று இருக்காது. வட்டி கூடுதலாக இருந்தது. இப்பொது அதெல்லாம் இல்லை. வங்கியில் பணிபுரியும் ஆட்களின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது. இது தான் தனியார்மயத்தின் லட்சணம். இதை தான் தவெக அரசு ஊக்கப்படுத்தி கொண்டிருக்கிறது. தங்கள் வெள்ளை அறிக்கையில் எதையெல்லாம் குற்றமாக முன்னிறுத்தினார்களோ, அதை முன்பிருந்ததை விட இன்னும் அதிகப்படுத்தி இருப்பது தான், இந்த பட்ஜெட்டில் தவெக செய்திருக்கும் சாதனை. வருவாய் பற்றாக்குறை திமுக ஆட்சியை விட ரூ 7000 கோடி அதிகரிப்பு. மூலதனத்திற்கான செலவு திமுக ஆட்சியை விட ரூ 3000 கோடி குறைப்பு. தமிழ்நாடு அரசு வசூலிக்கும் வரி வருவாய் திமுக ஆட்சியை விட ரூ 3000 கோடி குறைப்பு. வருவாய்க்கான செலவினங்கள் திமுக ஆட்சியை விட ரூ 12000 கோடி அதிகரிப்பு. பள்ளிக்கல்வி துறைக்கு திமுக ஆட்சியை விட ரூ 4000 கோடி குறைப்பு. தமிழ் எங்கள் உயிருக்கு சமம் என்று சொன்ன தவெக தமிழ் வளர்ச்சித்துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கி இருக்கிறது என்று சொல்லவேயில்லை என்றிருக்கிறார் தங்கம் தென்னரசு. எந்த வித புதிய திட்டங்களையும் அறிவிக்காமல், ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் 14 திட்டங்களுக்கு பெயர் மாற்றி அதன் பயனாளிகளை குறைத்து, தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பயன் தரும் திட்டங்களை விடுத்தது, பெண்களை அடிமைப்படுத்தும் திருமணம் மற்றும் பிள்ளைபேறுக்கு நிதியை ஒதுக்கி இருக்கும் தவெக அரசு, தமிழ்நாட்டின் சாபக்கேடு. சுமதி விஜயகுமார்