அக்.5-ல் எழும்பூரில் உண்ணாவிரதம்; மற்ற மாநிலங்களைப் போல் ஊதியம் வழங்காவிட்டால் தொடர் போராட்டம்
கோரிக்கைகள்:
தமிழ்நாடு இடை நிலை சுகாதார பணியாளர்களின் நிலுவை தொகை 2023, 2024, க்கான ஊதிய உயர்வு மற்றும் 2023-க்கான ஊக்க தொகை வழங்க வேண்டி கோருதல்…
தமிழ்நாடு இடை நிலை சுகாதார பணியாளர்களின் ஊதிய உயர்வு, காலமுறை பதவி உயர்வு ,பணியிடங்களில் பாதுகாப்பு வழங்கிடக் கோருதல்…
இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் சமூக சுகாதார அதிகாரி என்ற பணியில் இருப்பவர்களுக்கு மாதம் தோறும் 40000 முதல் 70000 வரை சம்பளமும், ஊக்க தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. (எ.கா மகாராஷ்டிரா -55000, ஹரியானா – 70000, மத்தியபிரதேஷ் – 45000, கர்நாடகா – 62000. ஆந்திரபிரதேஷ் – 43000.) அதே போல் தமிழ்நாட்டு இடைநிலை சுகாதார பணியாளர்களுக்கும் வழங்கிட கோருதல்…
தமிழ்நாடு இடைநிலை சுகாதார பணியாளர்களை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி புரிய வைத்து கூடடுதல் பணி சுமை தருவதை கைவிடக் கோருதல்…
ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர் மற்றும் ஈசஞ்சீவனியிலும் CHO என்ற பெயர் இருக்கும் பட்சத்தில், பணி ஆணையிலும் சமூக சுகாதார அதிகாரி (COMMUNITY HEALTH OFFICER) என்ற பெயர் வேண்டும் என்று கோருதல்…
செவிலியர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்புகளில் GNM மற்றும் B.Sc Nursing தகுதி பெற்றவர்களுக்கு உரிய முன்னுரிமை வழங்கவும், அவர்களுக்கான வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும், தகுதிக்கேற்ப பணிநியமனங்களை மேற்கொள்ளவும் அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கோருதல்…
JAS/MNK நிதி HWC மற்றும் சமூக சுகாதார நடவடிக்கைகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
HWC-களின் செயல்பாடுகளை முன்னெடுத்து வரும் MLHP-களின் பங்களிப்பை கருத்தில் கொண்டு, அவர்களின் பணிநிலையை நிரந்தரப்படுத்த (Regularisation) அரசு உரிய நடவடிக்கை எடுக்க கோருதல்…
MLHP-கள் செவிலியர்களாக (Nurses) கருதப்படுகின்றனர். MLHP-களின் நலனை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்குவதற்கான உரிய அரசாணை மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை வழங்கிடக் கோருதல்..
MLHP-களுக்கு வழங்கப்படும் ரூ.1,000 -PBI ஊக்கத்தொகை எந்த சேவைகளின் அடிப்படையில் வழங்கப்படுகிறது என்பதை தெளிவுபடுத்த கோருதல்..
தமிழ்நாட்டிலும் சமூக சுகாதார அதிகாரி என்ற பெயர் மாற்றப்பட்டு அதற்கான சம்பளமும் வழங்குமாறுகேட்டு கோருதல்..
மத்திய அரசின் கொள்கைகளை (ஐந்து ஆண்டுக்கு பின் நிரந்தரம்) செயல்படுத்த கோருதல்
N. சுந்தரி, மாநில தலைவி, இடைநிலை சுகாதார பணியாளர்கள் சங்கம், சென்னை
தமிழ்நாடு இடைநிலை சுகாதார பணியாளர்கள் சங்கம்,7358503178, 8754048479.
