சென்ற வாரம் ஒரு வகுப்பில், சென்னை தான் ஆசியாவின் டெட்ராய்ட் – Asia’s Detroit – என்று அழைக்கப்படுகிறது தெரியுமா என்று மாணவர்களிடம் கேட்டேன்.
உடனே ஒரு மாணவன் எழுந்து ‘போர்ட் (Ford) கம்பெனி தான் இங்கிருந்து போய்விட்டதே” என்றான்.
இது தான் தமிழர்களின் தாழ்வு மனப்பான்மை.
ஆசியாவின் டெட்ராய்ட் என்றால் என்ன பொருள்? ஏன் சென்னை அவ்வாறு அழைக்கப்படுகிறது? அப்படி என்ன சென்னை சாதித்தது என்று கேட்காமல், ஒரு கம்பெனி போய்விட்டதே என்று அங்கலாய்ப்பது ஏன்?
(அமெரிக்கவில் உள்ள டெட்ராய்ட் நகரம் உலகின் மோட்டார் நகரம் என்று அழைக்கப்படுகிறது. போர்டு, ஜெனரல் மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்கள் இங்கு தான் தொடங்கப்பட்டன. அந்த அளவிற்கு சென்னையிலும் வாகன உற்பத்தி நடைபெறுவதால், அது ஆசியாவின் டெட்ராய்ட் என்று அழைக்கப்படுகிறது)
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் வாகனங்கள் மூன்றில் ஒரு பங்கு சென்னையில் தான் உருவாகின்றன.
இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் 60 சதவீத வாகனங்கள் சென்னையிலிருந்து தான் வெளியேறுகின்றன.
ஒரகடம் முதல் ஶ்ரீபெரும்புதூர் வரை உள்ள அறுபது கிமீ வாகன உற்பத்தி பிராந்தியத்தில் ஆயிரக்கணக்கான சிறு, பெரும் நிறுவனங்களும், லட்சக்கணக்கான தொழிலாளர்களும் நேரடியாகவோ மறைமுகமாகவோ பயன்பெறுகின்றனர்.
இதை ஒரு சென்னைவாசியாகவோ, தமிழராகவோ பெருமையாக எண்ணுவதா அல்லது ஒரு நிறுவனம் அது நொடித்துப் போனதால் வெளியேறிதைப் பேசுவதா?
இப்போதும் ஹ்யூண்டாய், நிசான், ரெனே, பி.எம்.டபிள்யூ, அசோக் லைலாண்ட், டிவிஎஸ், ராயல் என்பீல்ட், எம்ஆர்எப் ஆகிய நிறுவனங்கள் இயங்குகின்றன.
இந்தச் செய்திகள் ஜெமினை / ஏ.ஐ.மூலமாக எளிதாகக் கிடக்கின்றன.
ஆனாலும் நாம் விமர்சிக்கிறோம் (critical) என்ற பெயரில் அவநம்பிக்கையோடு (cynical) அனைத்தையும் தட்டிக்கழிக்கிறோம், எள்ளி நகையாடுகிறோம், எட்டி உதைக்கிறோம்.
இது 1967ல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அக்கட்சியால் பதவி இழந்த காங்கிரஸ் கட்சியினரும், கம்யூனிஸ்ட் கட்சியினரும் திட்டமிட்டு உருவாக்கிய மனநிலையாகும்.
மூத்த திருச்சி வேலுச்சாமியிடமும், இளைய ஜி செல்வாவிடமும் இந்த ஒற்றுமையைக் காணலாம்.
இப்போதும் அவர்கள் இருவரும் திமுகவைத் தான் திட்டுகிறார்கள் என்பது இதற்குச் சாட்சி!
விமர்சனம் செய்வோர், நாம் இதுவரை சாதித்தது என்ன என்று எப்போதாவது சொல்லியிருக்கிறார்களா?
சென்னை தான் இந்தியாவின் மருத்துவத்தின் தலைநகரம் என்று நம்மில் யாருக்குத் தெரியும்?
தமிழ்நாடு மென்பொருள் ஏற்றுமதியில் சென்ற ஆண்டு இந்தியாவில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது என்று யார் சொல்வார்கள்?
இந்தியாவில் வேலைக்குப் போகும் பெண்களில் 40 சதவீதம் பேர் தமிழ்நாட்டில் தான் நாம் எப்போது பெருமை கொள்வோம்?
பின்குறிப்பு : திமுக ஆட்சியில் இருக்கும் போது தமிழ்நாடு பொருளாதாரத்தில் முன்னேறுவதும், பிறகு அக்கட்சி தோற்கடிக்கப்படுவதும், அடுத்து வரும் கட்சிகள் தொலைநோக்குப் பார்வை, அரசியல் தெளிவின்மை காரணமாக தவறான முடிவுகளை எடுப்பதும், தமிழ்நாடு வீழ்வதும் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்து சரி செய்வதும் தான் நமது ஐம்பது ஆண்டு வரலாறு என்பதை இந்த ஒப்பாரி சக்திகள் என்றாவது ஒப்புக்கொள்வார்களா?
அமுதன் ஆர் பி
ஆவணப்பட இயக்குநர்
சென்னை
