சிட்னியில் உள்ள பிளாக்டவுன் நகராட்சியில், இராவணனின் உருவத்தை எரிக்கும் நிகழ்ச்சி இந்த ஆண்டும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து, பெரியார்–அம்பேத்கர் சிந்தனை வட்டம் உள்ளூர் மக்களுடன் இணைந்து ஆஸ்திரேலிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் ஒன்றைப் பதிவு செய்தது.
இந்த இராவணன் உருவ எரிப்பு நிகழ்வு, பிறப்பின் அடிப்படையிலான பாகுபாட்டை இரண்டு வகைகளில் வளர்க்கும் நடவடிக்கை என்று அந்தப் புகாரில் குறிப்பிடப்பட்டது:
இனப் பாகுபாடு – தமிழர்கள் பலர் இராவணனைத் தங்கள் இனத்தின் தலைவனாகக் கருதுகின்றனர்.
சாதிப் பாகுபாடு – இந்தியாவின் பிற பகுதிகளில் வாழும் பலர், குறிப்பாகச் சில சமூகங்களைச் சேர்ந்தவர்கள், இராவணனைத் தங்கள் தெய்வமாகக் கொண்டாடுகின்றனர்.
எனவே, இராவணனின் உருவத்தை எரிப்பது மேற்குறிப்பிட்ட இரு பிரிவினருக்கும் எதிரான வன்முறைச் செயலாகக் கருதப்படலாம் என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.
இந்த இரண்டு வாதங்களும் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளக்கூடியவை எனக் கருதி, ஆஸ்திரேலிய மனித உரிமைகள் ஆணையம் (AHRC) இந்தப் புகாரை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தற்போது தெரிவித்துள்ளது. வழக்கு இன்னும் விசாரணையில்தான் உள்ளது. ஆனால், இந்த அளவிற்கு நாம் முன்னேறியிருப்பதே ஒரு பெரிய வெற்றி. பெரியார்–அம்பேத்கர் சிந்தனை வட்டம் நம் மக்களுடன் களத்தில் இறங்கி நடத்திய போராட்டத்திற்கு இது ஓர் உதாரணம்.
இந்த மண்ணில் மட்டுமல்லாமல், உலகின் எந்தப் பகுதியிலும், எந்த வடிவத்தில் பாகுபாடு காட்டப்பட்டாலும் அதை எதிர்க்கும் துணிச்சலை நமக்கும் நமது வருங்காலச் சந்ததியினருக்கும் கொடுத்தவர் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்
PATCA
