பாஜக ஆதரவாளர் மாரிதாஸ் கைது: அண்ணாமலை, சீமான் கண்டனம்!
சமூக வலைதளத்தில் அவதூறு கருத்துகளைப் பதிவிட்டதாக பா.ஜ.க. ஆதரவாளரும் யூடியூபருமான மாரிதாஸ் என்பவரை மதுரை மாநகரக் காவல்துறை கைதுசெய்துள்ளது. மாநில பா.ஜ.க. தலைவர் கே. அண்ணாமலை மற்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இதனைக் கண்டித்துள்ளனர். நடந்தது என்ன? மதுரை அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாரிதாஸ். பா.ஜ.க. ஆதரவாளரான இவர் Maridhas Answers என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை நடத்திவருகிறார். ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களிலும் தீவிரமாக பா.ஜ.க – வுக்கு ஆதரவு கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்.Continue Reading