இந்த நான்கு பெரிய தெர்மல் மின் நிலையங்களை அதன் முழு உற்பத்தி திறனில் இயக்குவதற்கு ஒரு நாளைய நிலக்கரி தேவை சுமார் 60000 டன்கள். ஆனால் தற்பொழுது அதில் சரிபாதி வரத்து குறைந்துள்ளதால் இந்த மின் தட்டுப்பாடு என்க. Ennore Thermal Power Station (ETPS) – 450 MW (2×60, 3×110MW) 2.Mettur Thermal Power Station (MTPS) – 1440 MW (4×210, 1×600MW) North ChennaiContinue Reading

போர் சூழலில் தவிர்க்க முடியாத காரணத்தால் வெளியேறி கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில், இருந்து வருகின்றோம். சென்ற ஆண்டு பொறுப்பேற்ற அரசு தமிழகத்தில் வாழும் இலங்கை தமிழ் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து அதை செயல்படுத்தும் நோக்கில் குழு அமைத்து, குழுவினரும், அதிகாரிகளும் செயல்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இலங்கையில் ஏற்பட்டு இருக்கும் பொருளாதார சிக்கலால், தாயகத்திலிருந்து கடந்த சில நாட்களாக மக்கள் உயிரைContinue Reading

சமையல் எரிவாயு ஒரு உருளையின் விலை 1000 ரூபாயை தாண்டுகிறது. 2001ஆம் ஆண்டு தொடக்கம் முதல் இதுவரை சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஏறுமுகத்தில் இருக்கிறது குறிப்பாக கடந்த 15 மாதங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் 255 ரூபாய் அதிகரித்துள்ளது. தற்போது சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டு 967 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வீட்டுக்கு வந்து வினியோகிக்கும் போது 50 ரூபாய் தர வேண்டியிருக்கும் என்பதால் ஒரு சிலிண்டருக்கு ஆயிரம்Continue Reading

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை பிடித்த நிலையில் அக்கட்சியின் பகவத் சிங் மான் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். பாரதிய ஜனதா வென்ற மற்ற நான்கு மாநிலங்களில் அடுத்த முதல்வரை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. கோவாவில் பிரமோத் சாவன்த்-தும்,மணிப்பூரில் பிரேம் சிங்-ம் முதலமைச்சராக நீடிக்க பாஜக தலைமை முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. ஆனால் உத்தரகாண்ட் தேர்தலில் தோல்வியுற்ற முதலமைச்சர் புஷ்கர்Continue Reading

காங்கிரஸ் கட்சியின் ஜி 23 குழுவிலுள்ள பூபீந்தர்சிங்ஹூடா, குலாம்நபி ஆசாத் ஆகியோர் அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். அதற்கு முன்னதாக ஹூடா, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசியது முக்கியத்துவம் பெறுகிறது. ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் சோனியா காந்தியின் தலைமைக்கும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன . அதிருப்தி உள்ள குலாம்நபி ஆசாத் உள்ளிட்ட ஜிContinue Reading

2024 மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதாவை வலுவாக எதிர்க்க வேண்டுமெனில் கட்சியை பலப்படுத்துவது அவசியம் என காங்கிரஸ் கட்சியின் ஜி-23 தலைவர்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர். கட்சிக்கு அனைத்து தரப்பையும் உள்ளடக்கிய கூட்டுத் தலைமை வேண்டும் எனவும் கூறியுள்ளனர். மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் தொடர்தோல்வியை சந்தித்ததை அடுத்து, கடந்த ஆண்டில் சிறு திருத்தம் கொண்டுவர கோரி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு, மூத்த தலைவர்கள் கபில்சிபல், குலாம் நபிContinue Reading

நேற்று நடந்த மக்களவை பட்ஜெட் கூட்ட தொடரில் உக்ரைனிலிருந்து நாடு திரும்பிய மாணவர்கள் இந்தியாவில் மருத்துவக் கல்வியை தொடர மத்திய அரசு உதவ வேண்டும் என நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து மக்களவையில் திமுகவின் துணைத் தலைவரான கனிமொழி இன்று அவர் தொடுத்த கோரிக்கையில் கூறியிருப்பதாவது: ”உக்ரைனில் மருத்துவம் படித்த ஆயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம், உக்ரைன்-ரஷ்யா போரின் காரணமாக கேள்விக்குறியாகியுள்ளது. 21,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தியா திரும்பியுள்ளனர்.Continue Reading

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட பேரறிவாளன் நளினி முருகன் சாந்தன் ஜெயக்குமார் ராபர்ட் பயாஸ் ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரும் 32 ஆண்டுகளாக இந்த வழக்கில் சிறையில் இருக்கின்றார்கள். இந்த வழக்கில் பேரறிவாளன் 32 ஆண்டுகளாக சிறையில் இருப்பதை கண்டு நீதிபதிகள் நாகேஸ்வரராவ், கவை அடங்கிய அமர்வு அவருக்கு பிணை வழங்க உத்தரவிட்டது. பேரறிவாளனின் 32 ஆண்டுகள் சிறை வாசத்தில் அவருக்கு நீதிமன்றம் பிணை வழங்குவதுContinue Reading

உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தீவிரம் அடைந்து வரும் சூழலில், அந்நாட்டில் சிக்கியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 5,000 மாணவர்கள் தாயகம் திரும்புவதற்கான முழுமையான பயணச் செலவை தமிழ்நாடு அரசே ஏற்கும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் இன்று காலை அறிவித்துள்ளார். நேற்று அதிகாலை தொடங்கி ரஷ்யா – உக்ரைன் எல்லைப் பகுதியில் கடுமையான ராணுவ தாக்குதல் நடைபெற்று வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ரஷ்யContinue Reading

ரஷ்யா உக்ரைன் இடையே போர்  தொடங்கிய நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 101 டாலராக உயர்ந்துள்ளது. போர் தொடங்கியதன் தாக்கம் கச்சா எண்ணெய் விலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் ஒரு பேரலின் விலை 101 டாலராக உயர்ந்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டிற்குப் பின் எட்டு ஆண்டுகள் கழித்து 101 டாலராக உயர்ந்துள்ளது இதனைத் தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலை கடுமையாக உயரும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்தியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் 85 சதவீத கச்சா எண்ணெய் இறக்குமதியை சார்ந்து உள்ளது. கச்சா எண்ணையின் உயர்வால் நாட்டில் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர வழிவகுக்கும் என்றும் இதனால் உற்பத்தி துறை கடுமையாக பாதிக்கப்படும் என்றும் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். பெட்ரோல் டீசல் விலை உயர்வால் போக்குவரத்து கட்டணங்கள் விலை கடுமையாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஒன்றிய  அரசு பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை குறைத்து பிறகும் பெட்ரோல் டீசல் விலையில் பெரிய அளவில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. நாட்டில் பல மாநிலங்களில் தேர்தல் முடிந்துள்ள நிலையில் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்படலாம். கச்சா எண்ணெயின் விலை உயர்ந்துள்ள  நிலையில் பெயிண்ட், பிளாஸ்டிக், டயர்கள்  தயாரிப்புத் துறையில் பெரும் விலை உயர்வை ஏற்படுத்தும். விமானம், பேருந்து, ரயில் போன்றவைகளின் போக்குவரத்து கட்டணங்கள் உயரும்.  இதனால் சமையல் எரிவாயு மற்றும் உலோகங்களின் விலை அதிகரிக்கும் நிலை உள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.  மேலும்,   கச்சா எண்ணெயின் விலை உயர்வு நாட்டில் விலைவாசி மற்றும் உணவுப் பழக்கத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.Continue Reading