காவிரி எல்லைப் பகுதிகளில் கர்நாடக வனத்துறையினரால் அந்தோணிசாமி, பீட்டர் மற்றும் குமார் ஆகிய மூன்று தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட கொடூரச் சம்பவம் சொல்லொணா அதிர்ச்சியையும் மிகுந்த வேதனையையும் அளிக்கிறது. எல்லைப் பகுதிக்கு வேலை நிமித்தமாகவும், தங்களின் வாழ்வாதாரத்திற்காகவும் செல்லும் அப்பாவித் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை “வேட்டையாடுபவர்கள்” என்ற முத்திரைக் குத்தி, எவ்வித விசாரணையுமின்றித் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்வது கர்நாடக வனத்துறையினருக்குப் வழக்கமாகிவிட்டது. கர்நாடக அரசின் இந்த அராஜகப் போக்கிற்கும் மனித உரிமையற்றச் செயலுக்கும் எனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு அரசு உடனடியாக இச்சம்பவத்தில் தலையிட்டு, கர்நாடக அரசிடம் தனது பலமான கண்டனத்தைப் பதிவு செய்ய வேண்டும். இப்படுகொலையில் தொடர்புடைய வனத்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். படுகொலை செய்யப்பட்ட அந்தோணிசாமி, பீட்டர், குமார் ஆகியோரின் குடும்பத்தினருக்குக் கர்நாடக அரசும், தமிழ்நாடு அரசும் தலா ஒரு கோடி நிவாரண உதவி வழங்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு உடனடியாக அரசு வேலை வழங்கப்பட வேண்டும். இச்சம்பவம் குறித்து ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நடுநிலையான விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு, குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம்
இந்தியா
பாஜகவை பிரசாந்த் கிஷோர் வீழ்த்தியதை பலரும் நல்ல மாற்றமாக பார்க்கிறார்கள். ஆனால் பாஜக VS RJD என்று இருந்தது தற்போது மாறக்கூடிய அபாயம்...
காற்று மாசடைதல் உலகின் பெரும் கேடாக அமைந்து, ஆண்டுதோறும் பல இலட்சக்கணக்கான மக்களின் உயிர்களைப் பறித்து வருகிறது. 2023ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்களின்படி உலகில்...
2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தால் நான்கு புதிய தொழிலாளர் குறியீடுகள் நாடாளுமன்றத்தின் மூலம் இயற்றப்பட்டன....
The word ‘bank’ refers to different structures in different fields of geography. For instance, in limnology (the...
Birsa Munda was a tribal freedom fighter, folk hero, and courageous leader who played a crucial role...
பிரதமர் மோடி கடந்த 11 ஆண்டுகளில் 72 நாடுகளுக்கு 151 முறை பயணம் செய்திருக்கிறார். அதாவது 132 மாதங்களில் சராசரியாக ஒரு மாதத்துக்கு...
இந்தியா சனவரி 26ஆம் நாள் 75ஆம் குடியரசு நாளைப் புதுதில்லியிலும், மாநிலங்களின் தலைநகரங்களிலும் சிறப்பான முறையில் விழா எடுக்கப்பட்டது. இந்தியா குடியரசு நாடு...
இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை :-இந்தியாவில் தஞ்சமடைந்திருக்கும் இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்பது, பிரதமர் நரேந்திர மோடியை தில்லியில் சந்தித்தபோது தமிழக...
எண்ணற்ற தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படை கடந்த காலத்தில் கொன்று குவித்தது. தமிழ்நாட்டின் பாரம்பரிய நிலப்பரப்பை இலங்கைக்கு இந்தப் பிரச்சனையை துவக்கி வைத்தது...
