பாஜகவை பிரசாந்த் கிஷோர் வீழ்த்தியதை பலரும் நல்ல மாற்றமாக பார்க்கிறார்கள். ஆனால் பாஜக VS RJD என்று இருந்தது தற்போது மாறக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த தொகுதியில் RJD மூன்றாம் இடம் தள்ளப்பட்டுள்ளது.
இதற்காகவே பாஜக தோற்றதா என்ற கேள்வியும் எழுகிறது. ஏனெனில் பாஜக அறிவித்த வேட்பாளரான அபிஷேக் குமார் சின்கா திடீரென தேர்தலில் போட்டியிடவில்லை என்று பின்வாங்குகிறார். அவருக்கு பதிலாக முன் அனுபவமே இல்லாத 32 வயதான நீரஜ் குமார் சின்காவை போடுகிறது பாஜக.
பங்கிப்பூர் தொகுதியை பொறுத்தவரை அது உயர்சாதியினர் அதிகம் இருக்கும் தொகுதி. காயஸ்தா என்ற உயர்சாதியை சேர்ந்த பாஜக வேட்பாளருக்கு அந்த சமூகத்தினர் ஓட்டு மட்டுமே கிடைத்துள்ளது. நிதிஷ்குமாருக்கு பின்பு பாஜக OBC CM யை நியமித்ததும், வேட்பாளரை மாற்றி டம்மி ஆளை போட்டதும், பிரசாந்த் கிஷோர் தன்னை பார்ப்பனராக அடையாளப்படுத்தி கொண்டதும் பாஜகவின் பிற உயர்சாதியினர் ஓட்டு மொத்தமாக பிரசாந்த் கிஷோருக்கு சென்றுள்ளது. இது போக நீட் போராட்டத்தின் மூலம் OBC, தலித் மக்களின் ஓட்டும் பிரசாந்த் கிஷோருக்கு சென்றுள்ளது. பாஜக டம்மி ஆளை போட்டதால் கிஷோர் தான் பெரிய வேட்பாளர் என்ற முகம் கிடைத்ததால், முஸ்லிம்களும் பாஜகவை வீழ்த்த கிஷோர் சரியான ஆள் என்று RJD க்கு பதில் கிஷோருக்கு மாறியுள்ளனர்.
பாஜகவுக்கு ஒரு மாற்றாக RJD க்கு பதில் பிரசாந்த் கிஷோரை உருவாக்கிவிட்டது பங்கிப்பூர் தேர்தல். இதில் பாஜகவுக்கும் பங்கு இருக்கிறது. இங்கே எப்படி திமுக VS தவெக என்று மாறி அதிமுக காணாமல் போனதோ Same Pattern. பாஜகவும் பிரசாந்த் கிஷோரும் வேறு வேறு இல்லை என்பதை தேர்தல் Vote Bank காட்டியுள்ளது.
ஒரு மாநிலத்தில் தான் இல்லாவிட்டாலும், தன்னுடைய Proxy தான் அந்த இடத்திற்கு வர வேண்டும் என்பது தமிழ்நாட்டை தொடர்ந்து பீகாரிலும் உருவாக்கி இருக்கிறது பாஜக.
யாசிர் RM
