சென்னைப் பல்கலைக்கழக சேப்பாக்கம் வளாகத்தில் முதுகலை பட்டத்திற்கான பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை கடந்த 1960ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. தமிழக வரலாற்றில் மிக முக்கிய பங்கு வகித்த T.V மகாலிங்கம், K.V.இராமன் போன்றோரால் வளர்த்தெடுக்கப்பட்ட இந்த துறையினரால் காஞ்சிபுரம், அரிக்கமேடு,ஆற்பாக்கம், திருவக்கரை, அதியமான் கோட்டை, திருவாமாத்தூர், பாலூர் போன்ற பகுதிகளில் அகழாய்வுகள் செய்யப்பட்டு அறிக்கைகள் வெளியாகியுள்ளன. கடந்த காலங்களில் பல்வேறு ஜாம்பவான்களை உருவாக்கி பெருமை சேர்த்தContinue Reading

நக்கீரன் ஏட்டின் போராளி தாமோதரன் பிரகாஷ் நேற்று (19.09.2022) தலைவாசல் பகுதியில் மாணவியை படுகொலை செய்த பள்ளி நிர்வாகத்தின் உறவினர்களால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். அவருடன் இருந்த போட்டோகிராபர் அஜித்குமார் தாக்கப்பட்டு பற்கள் உடைக்கப்பட்டுள்ளார். எனவே இடதுசாரி கட்சிகள், மக்களாட்சியில் அக்கறையுள்ள கட்சிகள் கூட்டிலிருந்து விலகுவதே படுகொலை செய்யபட்ட அந்த அப்பாவி மாணவிக்கு செலுத்தும் மனசாட்சி ரீதியான அஞ்சலி.**செய்வோம்! செயல்படுவோம்!* 1. கள்ளகுறிச்சி மாவட்டத்தில் கணியாமூர் கிராமத்தில் உள்ள சக்தி மெட்ரிகுலேஷன்Continue Reading

தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சருக்கு வேண்டுகோள் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக பலவிதமான செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ள கல்வியாளர்களும், கல்விச் செயல்பாட்டாளர்களுமாகிய நாங்கள், நமது மாநிலத்தில் பல்வேறு பள்ளிகளில் படித்துக்கொண்டிருக்கும் குழந்தைகளின் தொடர்ச்சியான அதிர்ச்சி மரணங்களைக் கண்டு மிகவும் மன வேதனையடைந்து கீழ்க்கண்ட வேண்டுகோளை தமிழ்நாடு அரசின் மேலான கவனத்திற்கும் நடவடிக்கைக்கும் முன் வைக்க விரும்புகிறோம். பள்ளிகளின் செயல்பாடுகளைக் கண்காணித்து குழந்தைகளின் நலனை உறுதிசெய்து, அவர்களின் உரிமைகளைப் பாதுகாத்திட,Continue Reading

தமிழகத்தில், கடந்த சில மாதங்களில் சட்டவிரோதமாக நடக்கும் கனிமவள கொள்ளை தடுக்கும் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதும்,  கொல்லப்படுவதும், அதன் மீது தமிழக அரசு போதுமான நடவடிக்கை எடுக்காத அவல நிலையே நிலவி வருகிறது. பழனி-காளிப்பட்டியில் பழ.ரகுபதி உள்ளிட்ட பலரும், கோவை – தடாகம் கணுவாயில் மக்கள் மருத்துவர் ரமேஷ் மகள் சாந்தலா மற்றும் மேக் மோகன் , கணேஷ், ஈரோடு – சென்னிமலையில் தமிழ்ச்செல்வன், தூத்துக்குடி – ஸ்ரீContinue Reading

நக்கீரன் இதழின் முதன்மை சிறப்பு நிருபர் தாமோதரன் பிரகாஷ், நக்கீரன்  புகைப்படக் கலைஞர் அஜித்குமார் மீது சமூக விரோதிகள் தாக்குதல் நக்கீரன் நிருபர்களை தாக்கிய, தூண்டிவிட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யவேண்டும்! தமிழக அரசுக்கு தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தல் நக்கீரன் இதழின் முதன்மை சிறப்பு  நிருபர் தாமோதரன் பிரகாஷ்  இன்று (19-09-2022) திங்கள் கிழமை கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி ஸ்ரீநிதி இறப்பு  பிரச்சனை தொடர்பாக தகவல்களைContinue Reading

எதிர்க்கட்சிகள் மீது அமலாக்கத்துறையை ஏவும் மோடி. இன்று பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் முக்கிய புள்ளிகளிடம் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து சினிமா பைனான்சியர், அன்புச்செழியன் தொடர்புடைய 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இன்றைய தமிழ் சினிமா உலகில் பிரபலமானவர் அன்புச்செழியன். இவர் தமிழ் சினிமா தயாரிப்பு மற்றும் சினிமாவுக்கான பைனான்சியராக, பெரிய ஜாம்பவானாக இருந்து வருகிறார். இவர்Continue Reading

எட்டயபுரம் அருகே காதல் திருமணம் செய்த தம்பதியரை வெட்டிக் கொன்ற வழக்கில் பெண்ணின் தந்தை மற்றும் தாயை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள வீரப்பட்டி ஆர்.சி. தெருவை சேர்ந்தவர் முத்துக்குட்டி (50). இவரது மகள் ரேஷ்மா (20), கோவில்பட்டியில் உள்ள ஒரு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் அப்பகுதியைச் சேர்ந்த அவரது உறவினரான வடிவேல் மகன் மாணிக்கராஜ் (26) என்பவரை காதலித்துContinue Reading

கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் பகுதியை சேர்ந்த ராமலிங்கம், செல்வி தம்பதியின் மகள் ஸ்ரீமதி, இவர் கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் +2 படித்து வந்தார். இவர் +1 முழுவதுமே வீட்டில் இருந்து சென்று வந்து கொண்டிருந்தார். 6 ம் வகுப்பில் இருந்து 11ம் வகுப்பு முடிய அப்படி தான் போய் வந்துகொண்டிருந்தார். அவரது வீட்டுக்கும் பள்ளிக்கும், 45 கிலோ மீட்டர் தூரம் இருப்பதால், சிரமமாக இருந்ததால் பள்ளியின் விடுதியில் (SchoolContinue Reading

சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள டி.பி.ஜெயின் கலை, அறிவியல் கல்லூரியை தனியார்மயமாக்கும் முயற்சியைத் தடுத்து நிறுத்த வேண்டும். இக்கல்லூரிக்கு தனி அலுவலரை நியமித்து, அரசு உதவிபெறும் இடங்களுக்கான சேர்க்கையை உடனடியாகத் தொடங்க வேண்டும்.துரைப்பாக்கத்தில் 1972-ம் ஆண்டு முதல் தமிழக அரசின் நிதியுதவியுடன் செயல்படும் டி.பி.ஜெயின் கலை, அறிவியல் கல்லூரியில் உள்ள 10 துறைகளில், ஆண்டுதோறும் 1,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசு கட்டணத்தில் பயில்கின்றனர். சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள ஒரே அரசு உதவிபெறும்Continue Reading

திருநங்கைகள் தமிழ் சமூகத்தில் அங்கீகாரம் தேடி அலையும் ஒரு நாடோடி கூட்டம். இருக்க இடம் கிடையாது , அடையாளம் கிடையாது அங்கீகாரம் கிடையாது. இவர்களின் பிறப்பிற்கான அர்த்தம் என்ன என்பதை தேடி அறிய முயல்வதே இந்த கட்டுரை தொகுப்பு. முதலில் திருநங்கை என்பவர்கள் யார் ? அனைவருக்கும் புரியும் படி கூற வேண்டும் என்றால் உடல் ரீதியாக ஆணாக பிறந்து ஒரு குறிப்பிட்ட பருவத்திற்கு பிறகு தனது உடலில் உணர்வில்Continue Reading