
ஜூன் 7ஆம் தேதி ஆவடி செலிபிரிட்டி பேஷன்ஸ் நிர்வாகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது அதில் “நிதி சுமை, உற்பத்தி சரிவு ஆகியவற்றை காரணம் காட்டி ஜுன் 30ஆம் தேதிக்கு பிறகு தொழிற்சாலை மூடப்பட இருப்பதாக(லாக் அவுட்) அறிவித்தது . ஒரு தொழிற்சாலை லாக் அவுட் செய்வதற்கான எந்த ஒரு முறையான வழிமுறைகளை பின்பற்றாமல் செயல்படுத்தப்படும் இந்த அறிவிப்பை பெண் தொழிலாளர்கள் எதிர்த்தனர்.

செலிபிரிட்டி ஃபேஷன் லிமிடெட் நிறுவனம் பள்ளிக்கரணை அருகில் உள்ள நாராயணபுரம் ,திருமுடிவாக்கம் சிப்காட், ஆவடி வீராபுரம், மற்றும் தாம்பரம் மெப்ஸ் போன்ற இடங்களில் கிளைகளை கொண்டது . நாராயண புரத்தில் உள்ள தொழிலாளர்களை இதே காரணம் காட்டிதான் ஆவடி கிளைக்கு மாற்றம் செய்துள்ளனர். அதில் பல தொழிலாளர்கள் வேலையில் இருந்து நின்றுவிட்டனர். திருமுடிவாக்கம் கிளையிலும் இது போல கடந்த காலங்களில் நிர்வாகம் செயல்பட்டுள்ளது.தற்போது ஆவடி தொழிலாளர்களை தாம்பரம் கிளைக்கு மாற்றுவதாக நிர்வாகம் அறிவித்தது .தொடர்ந்து இவ்வாறு செயல்பட்டு தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டிவிட்டு நிதிசுமையை காரணம் காட்டி கதவடைப்பு செய்வது நிலைமை சீரான தும் மீண்டும் செயல்படுவது என தனது வழக்கமாக கொண்டுள்ளது இப்படி செயல்படுவது இது போன்ற சிறிய நிறுவனங்கள் மட்டும் கிடையாது நோக்கியா ,ஃபாக்ஸ் கான் , போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் மீண்டும் செயல்பட்டு வருவதை காணலாம். 2022 ஆம் மூடப்பட்ட ஃபோர்ட் தொழிற்சாலை அடுத்த ஆண்டு மீண்டும் தனது உற்பத்தியை தொடங்குவதற்கான அறிவிப்புகளை காணலாம்.
செலிபிரிட்டி ஃபேஷன் நிர்வாகத்தின் கடந்த கால செயல்பாடுகளை கணக்கில் கொண்டு பெண் தொழிலாளர்கள் தன்னெழுச்சியாக ஒருங்கிணைந்து ஜுன் 7ஆம் தேதி உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கினர் இரவு பகல் என மழை , கடும் வெயில் போன்றவற்றை பொருட்படுத்தாமல் போராட்டத்தை தொடர்ந்தனர் இந்த கிளையில் தொழிற்சங்க எதுவும் இல்லாததால் கார்மென்ஸ்&ஃபேஷன் ஒர்க்கர்ஸ் பெண் தொழிலாளர் சங்கம் இதில் தலையிட்ட தொழிலாளர் தரப்பில் பேச்சுவார்த்தையில் ஈடடுப்பட்டது தொழிலாளர்கள் ஒற்றுமையுடன் செயல்பட வழிகாட்டியது அதன்பிறகு கழிவறைகளை பயன்படுத்துதல், உணவு பொருட்கள் கொண்டு செல்லுதல் என பல தடைகள் கடந்து போராட்டத்தை தொடர்ந்தனர். சில உள்ளுர் ஆர் எஸ் .எஸ் போன்ற அமைப்புக்கள் போராட்டத்தை கலைக்கும் முயற்சியில் ஈடுப்பட்டனர் தொழிலாளர்கள் அவர்களை ஒற்றுமையாக இருந்து தவிர்த்துவிட்டனர். சில தொழிலாளர் அமைப்புகள் ஆதரவு தெரிவித்தனர்.
தொழிற்சங்கத்துடன் பேச மறுத்து வந்த நிர்வாகம் தொழிலாளர்களின் உறுதியான போராட்டத்தால் பேச்சுவார்த்தையில் ஈடுபட தொடங்கியது தொழிலாளர்களின் கோரிக்கையான ஆறுமாதம் சம்பளம்,போணஸ் தொகை, விடுப்பு நாளுக்கான (EL) தொகை போன்றவையாக இருந்தது. தொழிலாளர் துறை முன்னிலையில் 13 ஆம் தேதி நடைபெற்ற இறுதிகட்ட பேச்சு வார்த்தையில் “மூன்று ஆண்டுகள் பணி அனுபவம் உள்ள தொழிலாளர்களுக்கு ஜூலை 30 ஆம் தேதிக்குள் 45 நாட்கள் சம்பளம் இழப்பீடாக வழங்கப்பட வேண்டும்; குறைந்தது ஒரு வருடம் பணி அனுபவம் உள்ளவர்களுக்கு 15 நாட்கள் சம்பளமும், ஆறு மாத பணி அனுபவம் உள்ளவர்களுக்கு 10 நாட்கள் சம்பளமும் ஜூலை 10 ஆம் தேதிக்குள் வழங்கப்பட வேண்டும்; ஜூன் மாதத்திற்கான முழு சம்பளமும், EL மற்றும் போனஸுடன் சேர்த்து ஜூலை 7 ஆம் தேதிக்குள் வழங்கப்பட வேண்டும் என உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு செயல்படத் தொடங்கிய ஆவடி தொழிற்சாலையில் கிட்டத்தட்ட 700 தொழிலாளர்கள் பணிபுரிந்தனர், அவர்களில் 550 பேர் பெண்கள். தொழிலாளர்கள் மாதத்திற்கு ரூ.12,000 முதல் ரூ.15,000 வரை சம்பாதித்து காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை வேலை செய்தனர். கடந்த கால நிர்வாக செயல்பாட்டிலிருந்து சில குறைந்த பட்ச கோரிக்கைகாளுக்கான உடன்பாட்டை ஏற்படுத்தியதில் பெண்தொழிலாளர்களின் போராட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.
ஒவ்வொரு தொழிற்சங்க போராட்டமும் தனது வர்க்க எதிரிகளையும், வர்க்க ஒற்றுமைக்கான தோழமைகளையும் அடையாளம் காட்டும் அந்த வகையில் இதுவரையில் தொழிற்சங்கம் அனுபவம் இல்லாத தொழிலாளர்களுக்கு தொழிற்சங்க தேவையையும் வலிமையையும் இந்தப் போராட்டம் உணர்திருக்கும் . வர்க்க எதிரிகளான நிர்வாகம்,அரசு , காவல்துறை, மதவாத சக்திகளின் போக்குகளை அடையாளம் காட்டியிருக்கும் . இது போன்று தொழிலாளர் வர்க்கத்தின் பெருபான்மையாக உள்ள நிரந்தர மற்ற தொழிலாளர்களுக்கான தொழிற்சங்கங்கள் மேலும் வலுப்பெறவும் ஒற்றுமையும் ஏற்பட வேண்டும் .தொழிலாளர் வர்க்கத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் சக்திகளாக அவர்களே இருப்பார்கள்.