
முருகன் போர்வையில் சங்கிகள் மதுரையில் நடத்திய சனாதன சதி கூட்டத்தில் ஒரு காட்சி வைக்கப்பட்டதாம்!
பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோரை நாத்திக நரிகள் என்று அழைத்தனராம்!
குருதி கொட்ட மதவெறி சொட்ட அரிப்புகளைச் சொறிந்து கொண்டுள்ளது மதுரையில் கூடி ஓநாய்கள் கூட்டம்.
பெரியார் மூத்த ஆளுமை! அறிஞர் அண்ணா பெரியார் அளித்த பெரும் ஆளுமை, கலைஞரோ இரு ஆளுமைகளின் அடிச்சுவட்டில் ஐந்து முறை தமிழ்நாட்டில் ஆட்சிப் புரிந்த உயர் ஆளுமை. இதைத் தான் இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் கண்ணதாசன் வரிகள் சுட்டுகின்றன.
இவை கவிதை வரிகள் மட்டும் அல்ல வரலாற்று பதிவுகள்!

மதுரையில் கூடிய மதவெறியர்களை விரட்டும் ‘வார்த்தை கம்புகள்’!
பெரியார் யார் ?
ஊன்றிவரும் தடி சற்று நடுங்கக் கூடும் உள்ளத்தின் உரத்தினிலை நடுக்கமில்லை
தோன்றவரும் வடிவினிலே நடுக்கம் துவளாத கொள்கையிலே நடுக்கமில்லை
…….
நீதிமன்றத்தின் நீதிக்கும் நீதி சொல்வார்
தெறிக்கெட்டு வளைத்த தெல்லாம் நிமிர்த்தி வைப்பார்
ஜாதி எனும் நாகத்தைத் தாக்கித் தாக்கி
சாகடித்த பெருமை கைத்தடிக்கே உண்டு
தாக்காத பழமையில்லை
தந்தை நெஞ்சில்
தழைக்காத புதுமையில்லை
தமிழ் நிலத்தில்
அண்ணா யார்?
முல்லையில் மணமிருக்கும்
மொத்தமும் நிறைந்திருக்கும் -என்
அண்ணா
மொழிந்திடும் ஒரு வார்த்தையில்
பகைவரைச் சிரிக்க வைத்தார்
…….
வகையொடும் நூல்கள் தந்தார்
என் அண்ணா
மனவளம் மிகவே கொண்டார்
நாட்டிற்கு ஒருவரிடி
நற்றமிழ் அறிஞரடி
கேட்டவர் அறிவாரடி
என் அண்ணா
கீழ்க் குணம் அறியாரடி
கலைஞர் யார்?
சதாவதானத்திறமை
நிதானப் புத்தி நேரிய பார்வை
நின்று கண்டறிந்து பெருவழி
செல்லல்
சதாவதானத் தனிப்பெரும் திறமை
தன்னையறிந்து பிறர் உளம் நோக்கல்
நதியென ஓடி நாளெல்லாம் உழைத்தல்
அதிசியச் சொற்களின்
ஆய்வது கூர்மதி
அன்பர் நலத்திலும் அக்கறை செலுத்துதல்
இலக்கண மென்றால்
இலக்கியம் அவரே!
கருணாநிதியின் தனித்தமிழ் அரசு
பல நாள் நிலைக்கப் பக்குவம் பெற்றது
வாழிய நண்பர்
வாழிய அமைச்சர்
வாழிய கலைஞர்
வாழிய தமிழர்
கவிஞர் அடிக்கடி சொல்லும் சொல்
கவிஞன் வாக்குப் பலிக்கும் என்பது
இது மூடநம்பிக்கை அல்ல
தமிழ்நாட்டின் நாடிப் பிடித்து
பாடிய நல் நம்பிக்கை
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் ஆட்சி நீட்சிப் பெற்று நிலைத்திருக்கும்
கவிஞர் கண்ணதாசன்
குருதி குடிக்க வரும் வாலறுந்த ஓநாய்கள்
பற்றியும் கூறாமல் இருப்பாரா என்ன!
இழிவான மொழி யெல்லாம் கக்கி வீசி
இழவுக்கு வந்தவளை அறுப்பார் தாலி!
தாலி அறுக்க வந்த கூட்டம் ஓடட்டும்
முருகன் வேடங்கள் களையட்டும்
சனாதனம் சாயட்டும்
திராவிடம் வெல்லட்டும்
பேரா. மு. நாகநாதன்