
கடந்த சில வருடங்களாகவே டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் தேர்வு மதிப்பீடு முறையாக நடத்தப்படவில்லை என பல குற்றச்சாட்டுகள் மாணவர்கள் மத்தியில் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மாணவர்கள் பலமுறை நிர்வாகத்திடம் புகாரளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது .
இது தொடர்பாக ,சில தினங்களுக்கு முன்பு அம்பேத்கர் சட்டப் பலக்லைக்கழகத்தில் படித்துவரும் மாணவர் வேண்டுமென்றே கிரிமினாலஜி மற்றும் தண்டனைவியல் பாடத்தில் தோல்வி அடையச்செய்ததாகவும் தான் தேர்ச்சிபெறும் அளவிற்கு நன்றாக எழுதியதாகவும் தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளார் .
மாணவர்கள் நீதிகேட்டு போராடினால் சஸ்பன்ட் செய்யப்படுகின்றனர்
கடந்தவருடம் ஆகஸ்ட் 7 ஆம் நாள் தேர்வு முறைகேடுகள் குறித்து பலமுறை சரியான வழிமுறைகளை பின் பற்றி புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் .இதனால், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களில் 9பது பேர் இடைனீக்கம் செய்யப்பட்டனர் .மேலும் ,போரட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்களை பெற்றோர்களிடம் புகாரளித்தும் தேர்வுகளில் தோல்வியடைய செய்து அச்சுறுத்தியதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர் .
தேர்வு மறுமதிப்பீட்டின் மூலம் பணவசூலிப்பு
மாணவர்கள் செமஸ்டர் தேர்வுகள் முதல் தடவை எழுதும் பொழுது பெரும்பான்மையான மாணவர்கள் தோல்வி அடைவதாகவும் பின் , மறு மதிப்பீடில் பெரும்பான்மையான மாணவர்கள் தேர்ச்சி பெறுவதாகவும் தெரிவிக்கின்றனர். பெரும்பான்மையான மாணவர்கள் மறுமதிப்பீட்டில் தேர்ச்சி பெறும் பொழுது எப்படி தோல்வி அடைய முடியும் ,பெரும்பான்மையான மாணவர்கள் மறுமதிப்பீடு செய்யும்போது தேர்ச்சிப் பெறுகிறார்கள் என்றால் வேண்டுமென்றே மாணவர்களை தோல்வியடைய செய்கிறீர்களா என மாணவர்கள் அடுக்கடுக்காக கேள்வியை வைத்துள்ளனர் .
இது மாணவர்களின் மறு மதிப்பீட்டின் மூலம் பணம் வசூலிக்கப்படும் முயற்சியாக செய்துவருகின்றனர் என மாணவர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர் .
மேலும்,மறுமதிப்பீட்டிற்கு ஒரு தாளுக்கு ரூ.400 மற்றும் விடைத்தாள்களின் ஜெராக்ஸ் நகலுக்கு ரூ.500 வசூலிக்கப்படுவதாகவும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) விண்ணப்பத்தின் மூலம் விடைத்தாள் நகலை பெறுவதால் செலவு குறையும் என்று மாணவர்கள் தெரிவித்தனர்.
யுஜிசி வழிமுறைகளை பின்பற்றவில்லை
மறுமதிப்பீடு செய்தால் தேர்ச்சிமுடிவுகள் வெளியிடுவதற்கு தாமதமாக்கப்படுகிறது , இதனால் அடுத்த தேர்விற்கு தயாராவதற்கு பிரச்சனையாக இருப்பதாகவும் யுஜிசி வரையறைக்கு புறம்பாகவுள்ளது என குறிப்பிடுகின்றனர். பல்கலைக்கழக மானிய குழுவின் வழிகாட்டுதலின்படி அவர்களின் மதிப்பெண்கள் தேர்ச்சி அல்லது தோல்வி எதுவாக இருந்தாலும் அனைத்து மாணவர்களுக்கும் மறுமதிப்பீடு கிடைக்க செய்ய வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விட்டுள்ளனர் . மேலும் ,யுஜிசி வழிகாட்டுதலின் பிரிவு இரண்டின் துணை பிரிவு ஐந்து மாணவர்கள் தங்கள் விடைத்தாள்களை சரியான நேரத்தில் மறு சரிபார்ப்பு அல்லது மறு மதிப்பீடு செய்வதற்கும் மதிப்பீடு செயல்முறை தொடர்பான ஏதேனும் குறைகளை தீர்ப்பதற்கும் நியாயமான விதிகளுக்கு உரிமை உண்டு என்று கூறுகிறதது என தெரிவித்தனர் .
வினாத்தாள் எடுக்கும் முறையில் முரண்கள்
ஒவ்வொரு முறையும் வினாத்தாள்கள் கேட்கப்படும் கேள்விகள் குறிப்பிட்ட பாடத்தில் மட்டுமே கேட்கப்படுகிறது , மற்ற பாடங்களுக்கு சமமான முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை , அதிக முக்கியத்துவம் வாய்ந்த சில பகுதிகளுக்கு கூட முக்கியத்துவம் கொடுக்காமல் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் அனைத்து கேள்விகளிலும் கேட்கப்படுகிறது என மாணவர்கள் தெரிவித்துள்ளனர் .இதனால் மாணவர்கள் தேர்வுகளில் தேர்ச்சிபெற முடியாமல் தடுக்கப்படுகிறது என கூறுகின்றனர் .
எனவே , இதனை கவனத்தில்கொண்டு மாணவர்களின் பிரச்னையை தீர்த்துவைக்க கோரி தமிழக அரசுக்கு மாணவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர் .