ரஷ்ய ரூபிளின் பெறுமதி உயர்வு!- குகன் யோகராஜா

ரஷ்யாவின் நாணயமான ரூபிள், என்றுமில்லாதவாறு பெறுமதியில் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக உலகநாடுகள் பலவற்றின் நாணயங்களின் பெறுமதி வீழ்ந்துவரும் நிலையில், அமெரிக்கா மற்றும் நேட்டோவின் எதிர்பார்ப்புக்களை உடைத்து ரஷ்ய ரூபிளின் பெறுமதி அதிகரித்திருப்பதாகவும், உக்ரைன் மீதான இராணுவ நடவடிக்கையை காரணங்காட்டி, ரஷ்யாவை பொருளாதார ரீதியிலும், இராணுவ ரீதியிலும் மண்டியிட வைக்க எடுக்கப்பட்ட பாரிய முயற்சிகள் ஒவ்வொன்றாக தோல்வியடையும் நிலையில் ரூபிளின் பெறுமதி அதிகரிப்பானது அமெரிக்காவுக்கும், நேட்டோவுக்கும் பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.

உக்ரைன் மீதான இராணுவ நடவடிக்கைகளை ரஷ்யா ஆரம்பித்ததை தொடர்ந்து ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் மேற்குலகத்தால் விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளையடுத்து, ரஷ்யா மேற்கொண்ட நடவடிக்கைகளே இன்று ரூபிளின் பெறுமதியை உயர வைத்துள்ளதாக கருதப்படுகிறது.

  1. ரஷ்யாவில் வட்டிவீதத்தை அதிகரித்தமை…
  2. ரஷ்ய வங்கிகளில் ரூபிளின் புழக்கத்தை தாராளமாக இருக்கும்படி பார்த்துக்கொண்டமை…
  3. ரூபிளை வேறு நாணயங்களுக்கு மாற்றுவதை கட்டுப்படுத்தி வைத்தமை…
  4. ரஷ்யாவிலிருந்து பணம் வெளிநாடுகளுக்கு செல்வதை கட்டுப்படுத்தியமை…
  5. ரஷ்ய எரிவாயு / பெட்ரோலிய விற்பனைக்கான பணத்தை ரூபிளில் தருவித்தமை…
  6. அதிகளவிலான எரிவாயு / பெட்ரோலியம் ஏற்றுமதி, ஆனால் குறைவான இறக்குமதி…

போன்றவற்றை ரஷ்யா கடுமையாக கடைப்பிடித்தமையே ரூபிளின் இன்றைய பெறுமதி உயர்வுக்கான பிரதான மூலோபாயங்களாக அதிபர் புதின் கையாண்டுள்ளமை, அமெரிக்க / மேற்குலக நாடுகளை அதிர்ச்சியில் தள்ளியுள்ளது.

உலகளாவிய ரீதியில் இவ்வாண்டில் பெறுமதி உயர்வை சந்தித்த உலக நாணயமாக ரூபிள் விளங்குவது குறிப்பிடத்தக்கது!

குகன் யோகராஜா.