கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் பகுதியை சேர்ந்த ராமலிங்கம், செல்வி தம்பதியின் மகள் ஸ்ரீமதி, இவர் கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் +2 படித்து வந்தார். இவர் +1 முழுவதுமே வீட்டில் இருந்து சென்று வந்து கொண்டிருந்தார். 6 ம் வகுப்பில் இருந்து 11ம் வகுப்பு முடிய அப்படி தான் போய் வந்துகொண்டிருந்தார். அவரது வீட்டுக்கும் பள்ளிக்கும், 45 கிலோ மீட்டர் தூரம் இருப்பதால், சிரமமாக இருந்ததால் பள்ளியின் விடுதியில் (School Hostel) தங்கி படிக்கலாம் னு முடிவெடுத்து, ஜூலை 1 ம் தேதி முதல் hostel இல் தங்கியும் படிக்கிறார் ஸ்ரீமதி. இந்த நிலையில் தான் கடந்த 13.07.2022 புதன்கிழமை அன்று காலை சரியாக 6.19 மணிக்கு ஸ்ரீமதியின் தாய்க்கு தொலைபேசி அழைப்பு வந்தது. '' உங்க பொண்ணு மாடி ல இருந்து கீழ விழுந்து இறந்துட்டா, நாங்க கள்ளக்குறிச்சி அரசு மருத்துவனை ல சேர்த்துருக்கோம். நீங்க வாங்க அப்படினு சொல்லிருக்கங்க". பின் ஸ்ரீமதியின் தாயாரும் பதட்டத்தில், அக்கம் பக்கம் உள்ளவர்களை அழைத்து கொண்டு, அந்த மருத்துவமனைக்கு விரைந்து பொய் கொண்டு இருக்கிறார்கள். அந்த 20 நிமிடத்திற்குள் அடுத்த ஒரு அழைப்பு வருகிறது. '' உங்க பொண்ணு இறந்து போய்ட்டாங்க நீங்க வந்து Body அ வாங்கிக்கோங்கன்னு சொல்லிட்டு போனை வச்சிறாங்க". அடுத்து ஸ்ரீமதியின் தாயார் கிட்ட யாருமே சரியான தகவலை கொடுக்கவில்லை அப்படின்னும். பள்ளி தரப்பிலையும் ஒன்னும் சொல்லல நான் திரும்ப அந்த தாளாளர் நம்பருக்கு கால் பண்ணினேன். PHONE Switch off னு வந்திருக்கு, பின் அந்த மருத்துவமனை டாக்டர் கிட்ட விசாரிக்கிறாங்க, "உங்க பொண்ணு இங்க இறந்துதாம்மா கொண்டு வந்தாங்க" அப்படின்னு டாக்டர் தரப்புல பதில் சொல்றாங்க, பின் அந்த அம்மா அழுது புலம்பி என் பொண்ண பார்க்கணும்னு சொன்னாங்க, அதற்கு மருத்துவமனை தரப்பும் அனுமதிக்கல அதையும் மீறு அந்த பொண்ணு பிணவறையில் இருந்தத போய் பார்த்து இருக்காங்க.
அதுக்கப்புறம் தாயார் செல்வி தன் பொண்ணு படிச்ச ஸ்கூல் ல போய் பார்க்க போறாங்க, முதல்ல அனுமதிக்கவில்லை அப்புறம் போராடி உள்ள போய் பாக்குறாங்க. தன் பொண்ணு விழுந்த இடத்தை காண்பிக்க சொல்லி கேக்குறாங்க. “இந்த இடத்தில தான் ன்னு சொல்லும்போது, இங்கே எந்த இரத்த கரையுமே இல்லையே எப்படி என் பொண்ணு மாடியில் இருந்து கீழே குதிச்சு தான் இறந்தான்னு சொல்றீங்க”. என் மகளுக்கு எந்த பிரச்சனையுமே இல்லையே நல்லா படிக்கிற பொண்ணு +1 இல் 492 மார்க் வாங்கி இருக்கா, +2வில் 560க்கு மேல எடுப்பேன்னு சொல்லி இருந்தா, அப்படித்தான் hostel தங்கி படிக்கேன் மா-னு சொல்லி என் பொண்ண நான் இங்க தங்கி படிக்க அனுமதிச்சேன். என் பொண்ணுக்கு தற்கொலை பண்ற அளவுக்கு எந்த பிரச்சனையுமே இல்லைன்னு ஸ்ரீமதி தாய் சொல்றாங்க. அதற்கு அப்புறம் தான் அந்த வழக்கு சூடு பிடிக்க தொடங்குது. #ஸ்ரீமதி #Justiceforsrimathi னுலாம் காட்டுத் தீ யா பரவுது. மக்கள் நிறைய பேர் சமூக உடக்கங்கள் ல இந்த விஷயத்தை பரப்பினாங்க, இதை நம்மால் வலைதளங்கள் ல பார்க்க முடிந்தது.

அடுத்து தற்கொலை கடிதம் இந்த பொண்ணு எழுதி வச்சதா போலீஸ் தரப்பில் வெளியிடறாங்க, அந்த Letter இல் டீச்சர் ரெண்டு பேரும் என்னை படிக்கலன்னு சொல்லி திட்டினாங்க. அது எனக்கு ரொம்ப Pressure ஆ இருக்குதுன்னு சொல்லி அந்த காரணத்திற்காகத்தான் நான் தற்கொலை பண்ணினேன்னு சொல்லி அந்த கடிதமும் வெளியாகுது. அந்த கடிதத்தை பார்த்து மாணவியோட பெற்றோர், என்ன சொல்றாங்க அப்படின்னா “இது என் பொண்ணோட கையெழுத்தே இல்ல” தொடர்ந்து இந்த மாணவியோட பெற்றோர். என் பெண்ணோட மரணத்துல மர்மம் இருக்குதுன்னு சொல்றாங்க. இதை தொடர்ந்து மாணவியோட மரணம் சந்தேகம் மரணம் சொல்லி Case File பண்ணி வைத்து விசாரித்து வருகிறார்கள்.
13.07.22, 14.07.22, 15.07.22 ஆம் தேதிகளில் தொடர்ந்து கள்ளக்குறிச்சி, சின்ன சேலம், போன்ற பகுதிகள்ல சின்ன சின்ன போராட்டங்கள் நடைபெற்றது. சின்ன சாலை மறியல் போராட்டம் எல்லாம் நடைபெற்றது.இதைத்தொடர்ந்து சக்தி பள்ளி, சின்னசேலம், கள்ளக்குறிச்சி, போன்ற பகுதிகள்ல காவல்துறையினர்கள் குவிக்கப்படுகிறார்கள்,
இந்த போராட்டம் ஆனது நான்கு நாள் கழித்து 17.07.22 அன்று பள்ளியை முற்றுகையிடும் போராட்டம் அப்படின்னு இருந்த காவல்துறைக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது என்னவென்றால், திடீர் னு சாலை மறியலில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் பள்ளி வளாகத்தினுள், வன்முறையில் ஈடுபட்டனர். அங்கு இருந்த நிறைய பொருட்கள் பஸ், கம்ப்யூட்டர் லேப், கெமிஸ்ட்ரி லேப், ஸ்கூல் போர்டு, வகுப்பறைகள், உள்ளிட்ட எல்லா பொருட்களும்
நீங்க வந்து Body அ வாங்கிக்கோங்கன்னு சொல்லிட்டு போனை வச்சிறாங்க. அடுத்து ஸ்ரீமதியின் தாயார் கிட்ட யாருமே சரியான தகவலை கொடுக்கவில்லை அப்படின்னும். பள்ளி தரப்பிலையும் ஒன்னும் சொல்லல நான் திரும்ப அந்த தாளாளர் நம்பருக்கு கால் பண்ணினேன். PHONE Switch off னு வந்திருக்கு, பின் அந்த மருத்துவமனை டாக்டர் கிட்ட விசாரிக்கிறாங்க, உங்க பொண்ணு இங்க இறந்துதாம்மா கொண்டு வந்தாங்க அப்படின்னு டாக்டர் தரப்புல பதில் சொல்றாங்க, பின் அந்த அம்மா அழுது புலம்பி என் பொண்ண பார்க்கணும்னு சொன்னாங்க, அதற்கு மருத்துவமனை தரப்பும் அனுமதிக்கல அதையும் மீறு அந்த பொண்ணு பிணவறையில் இருந்தத போய் பார்த்து இருக்காங்க. அதுக்கப்புறம் தாயார் செல்வி தன் பொண்ணு படிச்ச ஸ்கூல் ல போய் பார்க்க போறாங்க, முதல்ல அனுமதிக்கவில்லை அப்புறம் போராடி உள்ள போய் பாக்குறாங்க. தன் பொண்ணு விழுந்த இடத்தை காண்பிக்க சொல்லி கேக்குறாங்க. இந்த இடத்தில தான் ன்னு சொல்லும்போது இங்கே எந்த இரத்த கரையுமே இல்லையே எப்படி என் பொண்ணு மாடியில் இருந்து கீழே குதிச்சு தான் இறந்தான்னு சொல்றீங்க. என் மகளுக்கு எந்த பிரச்சனையுமே இல்லையே நல்லா படிக்கிற பொண்ணு +1 இல் 492 மார்க் வாங்கி இருக்கா, +2வில் 560க்கு மேல எடுப்பேன்னு சொல்லி இருந்தா, அப்படித்தான் hostel தங்கி படிக்கேன் மா னு சொல்லி என் பொண்ண நான் இங்க தங்கி படிக்க அனுமதிச்சேன். என் பொண்ணுக்கு தற்கொலை பண்ற அளவுக்கு எந்த பிரச்சனையுமே இல்லைன்னு ஸ்ரீமதி தாய் சொல்றாங்க. அதற்கு அப்புறம் தான் அந்த வழக்கு சூடு பிடிக்க தொடங்குது. #ஸ்ரீமதி #Justiceforsrimathi னுலாம் காட்டுத் தீ யா பரவுது. மக்கள் நிறைய பேர் இந்த விஷயத்தை சமூக உடக்கங்கள் ல இந்த விஷயத்தை பரப்பினாங்க, இதை நம்மால் வலைதளங்கள் ல பார்க்க முடிந்தது.
அடுத்து தற்கொலை கடிதம் இந்த பொண்ணு எழுதி வச்சதா போலீஸ் தரப்பில் வெளியிடறாங்க, அந்த Letter இல் டீச்சர் ரெண்டு பேரும் என்னை படிக்கலன்னு சொல்லி திட்டினாங்க. அது எனக்கு ரொம்ப Pressure ஆ இருக்குதுன்னு சொல்லி அந்த காரணத்திற்காகத்தான் நான் தற்கொலை பண்ணினேன்னு சொல்லி அந்த கடிதமும் வெளியாகுது. அந்த கடிதத்தை பார்த்து மாணவியோட பெற்றோர், என்ன சொல்றாங்க அப்படின்னா இது என் பொண்ணோட கையெழுத்தே இல்ல தொடர்ந்து இந்த மாணவியோட பெற்றோர். என் பெண்ணோட மரணத்துல மர்மம் இருக்குதுன்னு சொல்றாங்க. இதை தொடர்ந்து மாணவியோட மரணம் சந்தேகம் மரணம் சொல்லி Case File பண்ணி வைத்து விசாரித்து வருகிறார்கள்.
13.07.22, 14.07.22, 15.07.22 ஆம் தேதிகளில் தொடர்ந்து கள்ளக்குறிச்சி, சின்ன சேலம், போன்ற பகுதிகள்ல சின்ன சின்ன போராட்டங்கள் நடைபெற்றது. சின்ன சாலை மறியல் போராட்டம் எல்லாம் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து சக்தி பள்ளி, சின்னசேலம், கள்ளக்குறிச்சி, போன்ற பகுதிகள்ல காவல்துறையினர்கள் குவிக்கப்படுகிறார்கள்,
இந்த போராட்டம் ஆனது நான்கு நாள் கழித்து 17.07.22 அன்று பள்ளியை முற்றுகையிடும் போராட்டம் அப்படின்னு இருந்த காவல்துறைக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது என்னவென்றால், திடீர் னு சாலை மறியலில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் பள்ளி வளாகத்தினுள், வன்முறையில் ஈடுபட்டனர். அங்கு இருந்த நிறைய பொருட்கள் பஸ், கம்ப்யூட்டர் லேப், கெமிஸ்ட்ரி லேப், ஸ்கூல் போர்டு, வகுப்பறைகள், உள்ளிட்ட எல்லா பொருட்களும் தீக்கிரையாக்கப்பட்டும், அடித்து நொறுக்கப்பட்டும், சேதப்படுத்தப்பட்டது. இவ்வளவு பெரிய அசம்பாவிதம் நடந்த பிறகு தான் அந்த பிரச்சினை பற்றிய தமிழக முழுவதற்கும் தெரிய வந்தது youtube, செய்திகள், எல்லாமே இந்த விஷயத்திற்கு மேல Focus பண்ண ஆரம்பிச்சாங்க.
அதோட டிஜிபி சைலேந்திரபாபு செய்தியாளர்களை சந்தித்து பேட்டி ஒன்று கொடுத்திருக்கிறார். அவர் செய்தியாளர் சந்திப்பில் சொல்லியிருந்ததாவது, பள்ளியின் மீது எந்த தவறும் இல்லை. போராட்டக்காரர்களை வீடியோ காட்சிகள் வைத்து பின்னர் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருக்கிறார். அவரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசி இருந்தார், அதன் பின் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் மாற்றப்பட்டு கள்ளக்குறிச்சி புதிய மாவட்ட ஆட்சியாளராக ஷ்ரவன் ஜடாவத் நியமிக்கப்படுகிறார். பின் கள்ளக்குறிச்சி காவல் கண்காணிப்பாளராக இருந்த செல்வகுமார் மாற்றப்பட்டு புதிய காவல்துறை கண்காணிப்பாளராக பகலவன் நியமிக்கப்படுகிறார். அன்று இரவே பள்ளியில் உள்ள 3 பேர் முதலில் கைது செய்யப்படுகிறார்கள் பள்ளியின் தாளாளர், முதல்வர், செயலர், அதன்பின் இரண்டு ஆசிரியர்களும் சேர்த்து மொத்தம் ஐந்து பேர் கைது செய்யப்படுகிறார்கள்.
அதற்கு அடுத்து கலவரத்தில் ஈடுபட்டதாக கிட்டத்தட்ட 278 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இது போராட்டக்காரர்கள் நடத்திய கலவரம் அல்ல ஏதோ திட்டம் தீட்டி நடத்தப்பட்டது என்று சொல்லுகிறார்கள்.
அதோடு நிறைய பேசுபொருளும் எழுந்தது, உளவுத்துறை அலட்சியம், காவல்துறை மெத்தனப்போக்கு என்றெல்லாம் பரவியது.
அதோடு கள்ளக்குறிச்சி கலவரம் எதிரொலியாக தனியார் பள்ளி கூட்டமைப்பு அனைத்து தனியார் பள்ளிகளையும் காலவரையின்றி மூட வேண்டும் என்ற உத்தரவை வெளியிட்டது. அதன் பின் மாலையில் தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு கள்ளக்குறிச்சி கலவரம் எதிரொலியாக அறிவித்த போராட்டத்தை திரும்ப பெற்றது.
இதோடு பலபேரது கைதுகள் நடைபெற்றது பல வழக்குகள் போடப்பட்டது, இதில் 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் சிறுவர் சீர்திருத்த பள்ளிகளிலும் பல பேர் ஜெயில்களிலும் அடைக்கப்பட்டனர் இதில் காவலர்கள் போராட்டக்காரர்கள் மீது 10 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டனர். தொடர்ந்து பல பேர் whatsapp குரூப் மூலமாக இணைந்ததை கண்டறிந்து அதில் நிறைய பேர் கூட்டு சேர்ந்ததை அறிந்த காவல்துறை அதோட அட்மின் இரண்டு பேரையும் சேர்த்து கைது செய்தனர். தொடர்ந்து மாணவியின் நீதிக்காக நடந்த போராட்டம் கலவரத்தில் முடிந்தது என்பதை பார்த்தோம்.

பெற்றோர் தரப்பில் சொல்லப்பட்டு வந்த, இது கொலைதான் தற்கொலை அல்ல என்ற உறுதியில் இருந்தன இதனை தொடர்ந்து தன் பெண்ணுக்கு நடந்த முதல் கட்ட பிரேத பரிசோதனையில் தங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை எனவும், சென்னை உயர்நீதிமன்றத்தில் எங்கள் தரப்பில் ஒரு மருத்துவர் என் பொண்ணுக்கு இரண்டாம் கட்ட உடற்கூறாய்வுக்கு பக்கத்துல இருக்கணும், அப்படின்னு சொல்லி வழக்கு தொடர்ந்திருந்தார்கள். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எதிர்ப்பு தெரிவித்து, மாணவிக்கு 2ம் கட்ட பிரேத பரிசோதனை அரசு மருத்துவர் வைத்து செய்யலாம் வேணும்னா வீடியோ எடுத்துக்கலாம்னு மனுதாரர் தரப்பில் யாராவது ஒருவர் கலந்துக்கலாம்னு சொல்லி மறு உடற்கூறு ஆய்வுக்கு அனுமதித்தார்கள். இந்த இரண்டாம் கட்ட உடற்கூறாய்வுக்கு இந்த மாணவி தரப்பில் யாரும் பங்கேற்கல அவங்க இந்த வழக்க உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு பண்ணாங்க பின் ஸ்ரீமதியின் உடல் மறு கூராய்வு முடிஞ்சு எட்டாவது நாள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமா நோட்டீஸ் உங்கள் வீடிற்கு அனுப்பப்பட்டது. உங்கள் மகளின் உடல் மருத்துவ ஆய்வு செஞ்சுட்டோம் நீங்க போய் பெற்றுக்கொள்ளலாம் என்று ஸ்ரீமதி குடும்பத்தாருக்கு இந்த நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்த நோட்டீஸ்ல் மாவட்ட துணை வட்டாட்சியர் மஞ்சுளா அவர்கள் தலைமையில் வீட்டில் நோட்டீஸ் ஓட்டுகிறார்கள். “நீதிமன்றம் தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. whatsappஇல் தகவல் கொடுத்தும் உங்கள் பொண்ணு ஸ்ரீமதியின் 2ம் கட்ட பிரேத பரிசோதனைக்கு வந்து கலந்துக்க சொல்லி எங்கள் தரப்பில் தகவல் கொடுத்தோம். உங்க பொண்ணோட Body எப்பனாலும் நீங்க வந்து வாங்கிக்கலாம்னு” நோட்டீஸ் மூலமா சொல்லப்பட்டது.
மாணவியோட பெற்றோர்கள் நான்கைந்து நாளாக சொந்த ஊரிலேயே இல்ல எங்க இருக்காங்க அப்படிங்கறதும் தெரியல இந்த நேரத்துல இந்த வழக்கு விசாரணைக்கு வந்ததாகவும் இந்த வழக்கில் நீதிபதி சொன்னதாவது உங்களுக்கு இந்த வழக்குல ஏதாவது ஆட்சியபனை இருந்தா சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு தெரிவிக்கலாம்னு சொல்லி இந்த வழக்கை தள்ளுபடி செஞ்சிடடுறாங்க.
இதோட 21/7/2022 அன்று மாநில குழந்தைகள் நல ஆணையம் விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல் என்னவென்றால், சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடத்தப்படும் விடுதி பதிவு ( Register ) செய்யப்படவில்லை. இங்கு விடுதி நடத்துவதற்கு தகுதி இல்லை எனவும், இந்த விசாரணையில் நான்கு முதல் ஐந்து வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனையும் அந்த பள்ளியின் நிர்வாகத்திற்கு கொடுக்கலாம் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தனர்.
அதன்பின் அந்த பள்ளியின் உரிமையாளர், செயலாளர் – ரவி அவரின் மகன்கள் சக்தி மற்றும் சரண் ஆகிய இருவருக்கும் பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும், பல பெண்களிடம் அத்துமீறி நடப்பதாகவும், பள்ளிபயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாகவும், பலமுறை அந்த பள்ளியின் உரிமையாளரிடம் சக்தி செய்யும் அத்துமீறல்கள் பற்றி புகார் தெரிவித்ததாகவும், ஊரார் தரப்பில் செய்திகள் கசிந்த வண்ணம் இருக்கிறது. இதில் தற்போது சக்தி, சரண் மற்றும் அவரது நண்பர்கள் இருவர் தலைமறைவாக இருப்பதாகவும் தகவல் வந்த வண்ணம் இருக்கிறது.

23/7/2022 சனிக்கிழமை அன்று காலை அந்த மாணவியின் உடலானது பெற்றோர் கையில் ஒப்படைக்கப்பட்டது. காலை 11 மணிக்கு மேல் மாணவியின் குடும்ப முறைப்படி சாங்கியங்கள் செய்யப்பட்ட மாணவியன் உடல் தகனம் செய்யப்பட்டு ஸ்ரீமதியின் உடல் மண்ணில் புதைக்கப்பட்டது. அதன்பின் அவர் தந்தை செய்தியாளர் சந்திப்பில் என் மகளின் உடல் புதைக்கவில்லை விதைக்கப்பட்டிருக்கிறது என்று கண்ணீர் மல்க கூறியிருந்தார்.

நீதி கேட்டு நடந்த
போராட்டத்தில் பெண்ணில் உடல் தகனம் செய்யப்பட்டது.
மாணவி ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்கும் என எதிர்பார்க்படுகிறது.