Thermobaric குண்டுகளும் தமிழீழமும் உக்ரைனும் – ‘கிணற்று தவளை தமிழ் இனமும்’- க.ஜெயகாந்த்

உலக ஒழுங்கின் புவிசார் அரசியல்,போரியல் நகர்வுகளை புரிந்து கொள்வதில் ‘தமிழ் இனம் ஒரு கிணற்று தவளை’ என்பதை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சொல்லவேண்டும் என்பதால் இந்த பதிவு.

இன்றைய தினம் மேற்குலக ஊடகங்களில் முக்கிய இடத்தை பிடித்த ஒரு செய்தி ‘ ரஷ்யா உக்ரைனுக்கு எதிராக Thermobaric weapons களை உபயோகிக்கிறது’ என்பதுதான்.

• அது என்ன Thermobaric weapons?

இந்த Thermobaric weapons கள் vacuum bombs, fuel-air bombs என்ற பெயர்களிலும் அழைக்கப்படும்.

The weapons come in various sizes, from rocket-propelled grenades designed for close combat, to large versions that can be deployed from planes.

Far more powerful than conventional explosives, thermobaric weapons — also known as fuel-air bombs and vacuum bombs — also have a longer burn time, which increases their destructive capacity.

• இயங்கும் முறை

இதன் முதல் வெடிப்பு, தான் வெடிக்கும் இடத்திலுள்ள ஆக்ஸிஜனை முழுவதுமாக உறிஞ்சும். உடனடியாக இரண்டாவது வெடிப்பு நிகழும். அது மிக பெரிய fire ball ஐயும் shock wave ஐயும் உருவாக்கும்.

The explosives ignite the surrounding air, producing a lethal shock wave and sucking the air from the lungs of anyone in the vicinity.

• இது எப்படி உயிர்களை கொல்கிறது?

What kills is the pressure wave, and more importantly, the subsequent rarefaction [vacuum], which ruptures the lungs.

If the fuel deflagrates but does not detonate, victims will be severely burned and will probably also inhale the burning fuel

இறந்தவர்கள் உடல்களின் மேற்பகுதிகளில் காயங்கள் இருக்காது. அது உடல்களின் உட்பகுதியிலேயே நிகழ்ந்திருக்கும்.

Those at the fringe are likely to suffer many internal, thus invisible injuries, including burst eardrums and crushed inner ear organs, severe concussions, ruptured lungs, and internal organs, and possibly blindness

இனி இந்த பதிவின் மைய புள்ளிக்கு வருகிறேன்.

• இதற்கு முன்பு இந்த Thermobaric weapons போர்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறதா?

வியட்னாமிலும்,ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்க படை பயன்படுத்தியிருக்கிறது.

சோவியத் யூனியன் இதை 80 களில் ஆப்கானிஸ்தானிலும், ரஷ்யா இதை Chechen War இலும் பயன்படுத்தியிருக்கிறது.

பிரிட்டிஷ் படைகளும் ஆப்கானிஸ்தானில் பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன.

• #இறுதி ஈழப்போரிலும் Thermobaric weapons

இறுதிப்போரில் இலங்கை இராணுவம் Thermobaric weapons களை பயன்படுத்தின.

உண்மையில் இந்த ஆயுதங்களை இலங்கை இராணுவம் 2001 இலேயே வாங்கியிருந்தது.

இது தொடர்பான கடுமையான கண்டனத்தை விடுதலை புலிகள் 2001 இலேயே தெரிவித்திருந்தார்கள்.

“We are perturbed over reports that the Sri Lanka government has purchased new infantry weapon system with chemical warheads.

This Russian made rocket propelled ‘thermobaric’ weapon is internationally banned for its lethal toxic effects on combatants and civilians.

The acquisition of this banned weapon by Sri Lanka marks a new and dangerous escalation of the armed conflict in the island.”

  • LTTE Press Release of 16th August 2001

இத்தகைய Thermobaric weapons களை தான் வாங்கியிருப்பதாக இலங்கை இராணுவமும் வெளிப்படையாகவே தெரிவித்திருந்தது.

இது தொடர்பாக Hindu பத்திரிகையில் வந்த செய்தியின் இணைப்பும் படமும் கீழே.

• இலங்கையில் Thermobaric weapons களை பயன்படுத்தும்போது அமைதியாக இருந்த உலக ஒழுங்கும், ஊடகங்களும் உக்ரைனில் அது நடக்கும்போது இப்பொழுதுதான் வரலாற்றிலேயே முதல் முறையாக நடப்பது போல பாவனை செய்வது ஏன்?

இப்படித்தான் புவிசார் நலன் அரசியல் சதுரங்க ஆட்டம் ஆடப்படும்.

நான் முன்னைய பதிவில் குறிப்பிட்டது போல Propaganda என்பது இறையாண்மை அரசுகளின் புவிசார், போரியல் சதுரங்க ஆட்டத்தில் மிக முக்கியமான ஆயுதம்.

Today’s war is four-dimensional.

It is a combination of military, economic, political and propaganda pressure against the enemy.

இப்பொழுது நடக்கும் ரஷ்ய-உக்ரைன் மோதலில் propaganda war இல் மேற்குலகம் ரஷ்யாவை எளிதாக வீழ்த்திவிட்டது.

மேற்குலக ஊடகங்களின் propaganda war இல் ரஷ்யா, சீனாவே தடுமாறுகின்றன என்பதையும் முன்னர் குறிப்பிட்டிருந்தேன்.

ஐரோப்பா முழுக்க ரஷ்யாவிற்கு எதிரான மனநிலையை ஊடகங்கள் கொண்டுவந்துவிட்டன.

இப்பொழுது யாராவது குறுக்கே போய் ‘இல்லை இல்லை இது புவிசார் நலன் அரசியல் சதுரங்க ஆட்டம்’ என விளக்க முடியாது.

• இறையாண்மை அரசுகளின் புவிசார் நலன் நகர்வும் மக்களிடையே உருவாக்கப்படும் உணர்வுபூர்வமான கதையாடலும்

இறையாண்மை அரசுகளின் ஒவ்வொரு நகர்வும் ஏதோ ஒரு புவிசார் நலன், போரியல் அனுகூலத்தை அடிப்படையாக வைத்தே இருக்கும்.

ஆனால் அந்த இலக்கை அடைய, சாமானிய மக்களை ஒரு புள்ளியில் குவிக்க அது உணர்வுபூர்வமான கதையாடல்களை எப்பொழுதும் உருவாக்கும்.

அந்த உணர்வுபூர்வமான கதையாடல்களையே உலக அரங்கில் தனது நகர்விற்கான காரணமாக முன்வைக்கும்.

• தமிழ் இனம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

விடுதலை புலிகளின் ஆயுத போரட்டத்தை பற்றிய விமர்சனங்களை முன்வைக்கும் சில கூமுட்டைகள் பேசும்போது ‘ ஐநாவே சொல்லிவிட்டது. மனித உரிமைகள் அமைப்பே சொல்லிவிட்டது ‘ என்று கக்கத்தில் அறிக்கையை வைத்து கொண்டு பேசுவார்கள்.

மேலே நான் தந்திருக்கும் Thermobaric weapons
பற்றிய உதாரணமே உங்களுக்கு இந்த சதுரங்க ஆட்டத்தை புரியவைக்கும்.

இலங்கையில் இந்த ஆயுதங்கள் பாவிக்கப்பட்ட போது உலக ஒழுங்கு புலிகள் வீழ்த்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தன. அதனால் அமைதியாக இருந்தது.

இன்று உக்ரைனில் பாவிக்கப்படும்போது ரஷ்யாவிற்கு எதிராக தனது குடிமக்களின் ஆதரவை ஒரு புள்ளியில் குவிக்கவேண்டிய தேவை இருக்கிறது. அதனால் வரலாற்றிலேயே முதன் முதலாக நடந்தது போல பாவ்லா செய்கிறது.

• இதன் சாராம்சம் என்ன?

உலக ஒழுங்கின் புவிசார் அரசியலில் சரி, தப்பு என்பதற்கு பொருளில்லை. அல்லது சரி, தப்பு என்பதே இங்கு இல்லை.

உங்களுக்கு தேவையா அல்லது தேவை இல்லையா என்பதுதான் இங்கு எல்லாமே.

உங்களுக்கு தேவையாக இருந்தால் அதுதான் சரி.

சரி, தவறு என்ற உணர்வுரீதியான கதையாடல்களை கட்டியமைப்பது எல்லாம் தனது குடிமக்களின் ஒருமித்த ஆதரவை பெறுவதற்காக அரசுகள் பயன்படுத்தும் வழிமுறைகள்.

ஆனால் உலக ஒழுங்கில் இயங்கும் அரசுகள் தனது நலனுக்கு தேவையா அல்லது தேவையற்றதா என்பதை அடிப்படையாக வைத்துத்தான் தமது நகர்வுகளை தீர்மானிக்கின்றன.

உங்களின் சராசரி மனித உணர்வுகளினூடாக முடிவுசெய்யப்படும் சரி, பிழையினூடாக அல்ல.

க.ஜெயகாந்த்