கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும், என்று தீர்ப்பளித்த கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு பாதுகாப்பு அளிக்க தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் கோரிக்கை வைத்திருக்கிறது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கூட்டாக எழுதிய கடிதத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் மற்றும் துணைத் தலைவர் கார்த்திகேயன், இந்திய பார் கவுன்சில் துணைத் தலைவர் பிரபாகரன் ஆகியோர் இந்த கோரிக்கையை கொடுத்திருக்கிறார்கள் .

தீர்ப்பளித்த மூன்று நீதிபதிகளுக்கும் மத்திய அரசும், கர்நாடக அரசும் போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. கர்நாடக நீதிபதிகளுக்கு எதிராக தமிழகத்தில் பேசியவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்ததற்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்க பட்டுள்ளது. நீதிமன்ற தீர்ப்பில் திருப்தி இல்லாவிட்டால் மேல்முறையீடு செல்ல வாய்ப்பு உள்ளதாகவும், ஆனால் தீர்ப்பளித்த நீதிபதிகளுக்கு அளித்த மிரட்டல் விடுப்பது கண்டனத்துக்கு உரியது என்றும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
