ரஷ்ய-உக்ரைன் போரும் மேற்குலகில் நடப்பவைகளும்

• உக்ரைன் மக்களே போரை நிறுத்த விரும்பினால் கூட , இந்த போர் தொடர்வதைத்தான் மேற்குலகம் விரும்புகிறது என்பதைத்தான் இங்கு நடக்கும் நிகழ்வுகள் கூறுகின்றன.

• மேற்குலக அரசுகளின் நிகழ்ச்சி நிரலின்படியே, சகல Mainstream ஊடகங்களும், சமூக ஊடகங்களும் இயங்குகின்றன.

• மறந்தும் ரஷ்ய- உக்ரைன் போரிற்கான மூல காரணமான GEOPOLITICS மற்றும் NATO விரிவாக்கம் என்பவை பேசுபொருளாக மாறிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றன.

• உக்ரைனின் இறையாண்மைக்காகவும், உக்ரைன் மக்களை பாதுகாப்பதற்காவும்தான் மேற்குலகம் இத்தனை நகர்வுகளையும் செய்கிறது என்ற தோற்றத்தை வெற்றிகரமாக நிறுவியிருப்பதன் மூலம், இந்த Information War இல் மேற்குலகம் எவ்வளவு பலமாக இருக்கிறது என்பதை காட்டியிருக்கிறது.

• உக்ரைன் மக்களை பாதுகாப்பதற்காக உலகெங்கும் உள்ள மக்கள் உக்ரைனிற்கு வந்து ரஷ்ய இராணுவத்துடன் போரிடுமாறு அழைப்பு விடுக்கப்படுகிறது. இவ்வாறு உலகின் மற்ற பாகங்களிலிருந்து வந்து இணையும் மக்களை கொண்ட இந்த படையை foreign legion என அழைக்கிறார்கள். இந்த foreign legionஇல் ‘தன்னார்வலர்கள்’ இணைவதை ஊடகங்கள் glorify செய்து செய்திகளை விடுகின்றன.

• என்னை போன்றவர்கள் இந்த போரின் பின்னே இருக்கும் Geopolitics ஐயும், போரியல் நகர்வையும் பற்றி சக ஐரோப்பியர்களிடம் விளக்குகையில், அபூர்வ சகோதரர்கள் படத்தில் அப்பு தரும் அதே ரியாக்‌ஷனை கொடுக்கிறார்கள்.

க.ஜெயகாந்த்