சமையல் எரிவாயு ஒரு உருளையின் விலை 1000 ரூபாயை தாண்டுகிறது.
2001ஆம் ஆண்டு தொடக்கம் முதல் இதுவரை சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஏறுமுகத்தில் இருக்கிறது குறிப்பாக கடந்த 15 மாதங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் 255 ரூபாய் அதிகரித்துள்ளது. தற்போது சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டு 967 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வீட்டுக்கு வந்து வினியோகிக்கும் போது 50 ரூபாய் தர வேண்டியிருக்கும் என்பதால் ஒரு சிலிண்டருக்கு ஆயிரம் ரூபாய்க்கு மேல் தர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதேபோல 137 நாட்களுக்குப் பிறகு பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது . பெட்ரோல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து 102 ரூ .16 காசுகளுக்கும், டீசல் லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து 92 ரூபாய் 19 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையில் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்ததே, பெட்ரோல் டீசல் விலை ஏற்றத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. உக்ரைன், ரஷ்யா போர் காரணமாக ப்ரெண் கச்சா ஒரு பீப்பாய் 130 டாலர் வரை உயர்ந்த நிலையில், தற்போது 119 டாலரில் வர்த்தகம் ஆகிறது. இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 85 சதவீதத்தை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறது.

2020 மற்றும் 2021 ஆம் நிதியாண்டில் மட்டும் கச்சா எண்ணெய் இறக்குமதி சுமார் 4 லட்சத்து 65 ஆயிரம் கோடி ரூபாயை இந்தியா செலவு செய்திருக்கிறது. நடப்பு 2021 2022 நிதி ஆண்டில் சர்வதேச சூழல் காரணமாக கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்ததால் அதற்கான செலவு சுமார் 7 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டும் என மத்திய அரசு கூறுகிறது.