பிரபஞ்சம் எனும் பிரம்மாண்டம்- ஆன்டனி ஜெபிக்சன்.

மனித வரலாற்றில் பல நூற்றாண்டுகளாக பூமிதான் இந்த பிரபஞ்சத்தின் மையமாக கருதப்பட்டு வந்தது. நாம் வானில் பார்க்கும் அனைத்து நட்சத்திரங்கள், கோள்கள் என அனைத்தும் பூமியை சுற்றி வருவதாக கருதப்பட்டு வந்தது. இந்த கருத்து கடந்த நான்கு நூற்றாண்டுகளில் மாற்றி அமைக்கப்பட்டுவிட்டது.
பூமி ஒரு சாதாரண கோள் என்றும் அது மற்ற அனைத்து கிரகங்களைப் போல
சூரியனை சுற்றி வருகிறது என்றும் நாம் வானில் பார்க்கும் அனைத்து
நட்சத்திரங்களும் ஒரு சூரியன் என்று நிறுவப்பட்டது. அப்படி எனில் நமது
சூரியனும் அனைத்து நட்சத்திரங்கள் போல ஒரு சாதாரண நட்சத்திரம் தான்.
பிறகு நமது பால்வெளி அண்டமே மொத்த பிரபஞ்சம் என்று நினைக்கப்பட்டு வந்தது.

ஆண்டுகள் உருண்டு ஓட நவீன தொலைநோக்கிகள் வந்தபின் நம்
பால்வெளி அண்டமும் ஒரு சிறு துளி என்று கண்டறியப்பட்டது. நம் பால்வெளி
அண்டம் போல் பல கோடி கேலக்ஸிகள் பிரபஞ்சத்தில் உள்ளன.

அப்படியானால் நம் பிரபஞ்சம் எவ்வளவு பெரியது? எவ்வளவு பிரம்மாண்டமானது? வாருங்கள் பார்க்கலாம்.
நமது பிரபஞ்சம் எவ்வளவு பெரியது என்று பார்ப்பதற்கு முன் நம்
சூரியக் குடும்பம் எவ்வளவு பெரியது மற்றும் நமது பால்வெளி அண்டம்
எவ்வளவு பெரியது என்று பார்க்கவேண்டும். நமது சூரியக் குடும்பம் என்பது நமது சூரியன் மற்றும் எட்டுக் கோள்கள் மட்டும் கொண்டது அல்ல, இவை அனைத்தும் சிறு பகுதிதான் .

நமது சூரியனில் இருந்து பூமி 15 கோடி கிலோ மீட்டர் தொலை வில் உள்ளது, கடைசிக் கோளான நெப்ட்யூன் 4.5 பில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இத்தோடு முடிந்துவிடவில்லை இது வெறும் 10% மட்டுமே ஆகும்.

நாம் இன்னும் தொலை தூரம் சென்று பார்த்தால் kuiper belt எனும்
வால்நட்சத்திர கூட்டங்கள் உள்ளன. இது சுமார் 30 முதல் 1000 Astronomical Units
வரை நீண்டு உள்ளது (1Astronomical unit(AU) = Distance between earth and sun) இந்த kuiper belt ல் தான் pluto உள்ளது . Kuiper belt 1000 AU வரை நீண்டு சூரியனை சுற்றி வருகிறது. இன்னும் சென்று பார்த்தால் Heliosphere எனும் சூரியனின் Magnetic field
உள்ளது. இது kuiper beltஐ தாண்டி உள்ளது. இங்குதான் மனிதனால் அனுப்பப்பட்ட voyager வின்கலங்கள் உள்ளன. பிறகு இன்னும் சென்று பார்த்தால் oort cloud எனும்
வால்நட்சத்திரக் கூட்டங்கள் உள்ளன இவை 2 ஒளிஆண்டுகள் தூரம் வரை நீண்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதுதான் இதுவரை கண்டறியப்பட்டு உள்ள
சூரியக்குடும்ப எல்லை . ஆக நமது சூரியக்குடும்பம் இவ்வளவு பெரியது.

நமது அருகில் உள்ள நட்சத்திரக் கூட்டங்களான Alpha centuari , proxima centuari சுமார் 4 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளன. ஆக நாம் proxima centuari க்கு செல்ல ஒளியின்
வேகத்தில் பயனித்தால் அங்கு சென்று சேர 4 ஆண்டுகள் ஆகும்.

நமது பால்வெளி அண்டம் 1லட்சம் ஒளி ஆண்டுகள் அகலம் கொண்டது.
அப்படியானால் ஒளி ஒரு முனையில் இருந்து கடைசி முனை க்கு செல்ல 1
லட்சம் ஆண்டுகள் ஆகும். பிறகு நமது கேலக்ஸியில் 200 முதல் 400 வரை
பில்லியன் நட்சத்திரங்கள் உள்ளன. ஒவ்வொரு நட்சத்திரங்களுக்கும் கிரகங்கள் உள்ளன.

நமது பால்வெ ளி அண்டத்தில் மட்டும் பல பில்லியன் நட்சத்திரங்கள் மற்றும் அவற்றை சுற்றி பல கோள்கள் உள்ளன. நமக்கு அருகில் உள்ள அன்ட்ரொமீடா கேலக்ஸி 2.5 மில்லியன் ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது.

நமது கேலக்ஸி போல பல பில்லியன் கேலக்ஸிகள் இந்த பிரபஞ்சத்தில்
உள்ளன. நமது பூமியில் உள்ள கடற்கரை மணல்களை விட நமது பிரபஞ்சத்தில் அதிக நட்சத்திரங்கள் உள்ளன என்றால் நினைத்து பாருங்கள், நமது பிரபஞ்சம் எவ்வளவு பெரியது என்று.

அப்படியானால் நமது பிரபஞ்சம் எவ்வளவு தான் பெரியது?
நாம் காணும் இந்த பிரபஞ்சம் ( observable universe )சுமார் 93 பில்லியன் ஒளி
ஆண்டுகள் அகலம் கொண்டது. நாம் இதுவரை பார்த்த கேலக்ஸிகளில் மிக
தூரமானது GN-Z 11 எனும் கேலக்ஸி ஆகும். அங்கு இருந்து புறப்பட்ட ஒளி
பூமியை வந்தடை ய 13.4 பில்லியன் ஒளி ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும். ஆக
இவ்வளவு பெரிய பிரபஞ்சத்தில் மையம் என்று எதுவும் கிடையாது. பெரு
வெடிப்பு(Big bang) அனைத்து இடங்களிலும் நடந்து உள்ளதால் அனைத்து இடங்களும்
பிரபஞ்சத்தின் மையப் பகுதிகளே ஆகும்.

நாம் GN-Z 11 இருந்து பார்த்தால் அங்கு
வே று ஒரு Observable universe தெரியும், அதனுடைய எல்லையும் பிற காணும்
பொருட்களும் வேறு விதமாக இருக்கும். எனவே நமது பிரபஞ்சத்துக்கு எல்லை
என்று எதுவும் கிடையாது.

ஒவ்வொரு கேலக்ஸிக்கும் ஒவ்வொரு விதமான observable universe இருக்கும் பிரபஞ்சம் அனைத்து திசை களிலும் எல்லை இன்றி விரிந்துக் கொண்டே இருக்கிறது . நாம் எவ்வளவு முயற்சித்தாலும் அந்த
எல்லையை அடைய முடியாது.

ஏனெனில் பிரபஞ்சம் ஒளியின் வேகத்தை விட வேகமாக விரிவடைந்துக் கொண்டு இருக்கிறது. அப்படியானால் நமது பூமி போன்ற பல கோடி கோள்கள் இருக்கலாம். அங்கும் உயிர்கள் வாழலாம். ஒரு கேலக்ஸிக்கு ஒரு உயிர் உள்ள கிரகம்
என்று கணக்கு போட்டால் கூட இங்கு பல கோடி கோள்கள் உயிர்களை
கொண்டதாக இருக்கலாம்.

எனவே ஒரு பரந்த கடலில் ஒரு சிறு தீவே நாம். நாம் இன்னும் கண்டுபிடிக்க வேண்டியது நிறைய உள்ளன. எனவே நாம் மட்டும்தான் இந்த
பிரபஞ்சத்தில் உள்ளோம், நமக்காக மட்டும்தான் இந்த பிரபஞ்சம் உள்ளது என நினைப்பது எவ்வளவு அற்பமான எண்ணம் . நாம் இருப்பதும் இல்லாததும்
இப்பிரபஞ்சத்திற்கு ஒரு பொருட்டே இல்லை . இந்த பிரபஞ்சத்தில் ஒரு தூசி போன்ற ஒரு கோளில் உள்ள மனிதர்கள் ஆகிய நமக்குள் எத்தனை வேறுபாடுகள், எத்தனை சண்டைகள், எத்தனை ஏற்றத்தாழ்வுகள். இவற்றை களைந்து மானுடகுல முன்னேற்றத்திற்கு நமது சிந்தனையையும், அறிவியல் கண்டுபிடிப்புகளையும் பயன்படுத்தினால் பூவுலகம் முழுக்க மனிதனும் மற்ற உயிர்கள் சிறப்புற வாழலாம்.

ஆன்டனி ஜெபிக்சன்.