ரஷ்யாவின் நாணயமான ரூபிள், என்றுமில்லாதவாறு பெறுமதியில் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக உலகநாடுகள் பலவற்றின் நாணயங்களின் பெறுமதி வீழ்ந்துவரும் நிலையில், அமெரிக்கா மற்றும் நேட்டோவின் எதிர்பார்ப்புக்களை உடைத்து ரஷ்ய ரூபிளின் பெறுமதி அதிகரித்திருப்பதாகவும், உக்ரைன் மீதான இராணுவ நடவடிக்கையை காரணங்காட்டி, ரஷ்யாவை பொருளாதார ரீதியிலும், இராணுவ ரீதியிலும் மண்டியிட வைக்க எடுக்கப்பட்ட பாரிய முயற்சிகள் ஒவ்வொன்றாக தோல்வியடையும் நிலையில் ரூபிளின் பெறுமதி அதிகரிப்பானது அமெரிக்காவுக்கும், நேட்டோவுக்கும் பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. உக்ரைன் மீதானContinue Reading

ரஷ்யா உக்ரைனை அச்சுறுத்தத்தான் போரை துவங்கியது. ரஷ்யா , சீனா , அமெரிக்கா, வடகொரியா நாடுகளிடம் இருக்கும் அணுஆயுதங்களை பயன்படுத்த ஆரம்பித்தால் ,பூமி என்ற ஒரு கிரகமே இருக்காது என்பது உலகறிந்த உண்மை. அதனால் அனைத்து நாடுகளும் சில நாட்கள் அல்லது வாரங்களில் அடங்கிவிடும் என்றே கருதி இருந்தேன். இப்போது இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் நிலைமை மோசமாகி கொண்டே போகிறதே அல்லாமல் தீர்க்கப்படுவதாய் தெரியவில்லை. ரஷ்யா,உக்ரைன் பொது மக்கள் மீதுContinue Reading

உக்ரைன் தலைநகர் கீவ் இன் புறநகர் பகுதியை ரஷ்ய படைகளிடம் இருந்து மீட்டு இருப்பதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்திருக்கிறது. மரியுபோல் நகரில் இரு நாட்டு படைகள் இடையே சண்டை நடைபெற்று வருகிறது. உக்ரைன் மீது ரஷ்ய படைகள் 4வது வாரமாக தாக்குதலைத் தொடர்ந்து வருகின்றனர். தலைநகர் கீவ்வை நோக்கி ரஷ்ய படைகள் முன்னேறி வரும் நிலையில், உக்ரைன் இராணுவத்தினரை சரணடையுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் கீவ்வின் புறநகரான மாக்ரிவ்Continue Reading

• உக்ரைன் மக்களே போரை நிறுத்த விரும்பினால் கூட , இந்த போர் தொடர்வதைத்தான் மேற்குலகம் விரும்புகிறது என்பதைத்தான் இங்கு நடக்கும் நிகழ்வுகள் கூறுகின்றன. • மேற்குலக அரசுகளின் நிகழ்ச்சி நிரலின்படியே, சகல Mainstream ஊடகங்களும், சமூக ஊடகங்களும் இயங்குகின்றன. • மறந்தும் ரஷ்ய- உக்ரைன் போரிற்கான மூல காரணமான GEOPOLITICS மற்றும் NATO விரிவாக்கம் என்பவை பேசுபொருளாக மாறிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றன. • உக்ரைனின் இறையாண்மைக்காகவும், உக்ரைன்Continue Reading

உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தீவிரம் அடைந்து வரும் சூழலில், அந்நாட்டில் சிக்கியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 5,000 மாணவர்கள் தாயகம் திரும்புவதற்கான முழுமையான பயணச் செலவை தமிழ்நாடு அரசே ஏற்கும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் இன்று காலை அறிவித்துள்ளார். நேற்று அதிகாலை தொடங்கி ரஷ்யா – உக்ரைன் எல்லைப் பகுதியில் கடுமையான ராணுவ தாக்குதல் நடைபெற்று வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ரஷ்யContinue Reading

ரஷ்யா உக்ரைன் இடையே போர்  தொடங்கிய நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 101 டாலராக உயர்ந்துள்ளது. போர் தொடங்கியதன் தாக்கம் கச்சா எண்ணெய் விலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் ஒரு பேரலின் விலை 101 டாலராக உயர்ந்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டிற்குப் பின் எட்டு ஆண்டுகள் கழித்து 101 டாலராக உயர்ந்துள்ளது இதனைத் தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலை கடுமையாக உயரும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்தியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் 85 சதவீத கச்சா எண்ணெய் இறக்குமதியை சார்ந்து உள்ளது. கச்சா எண்ணையின் உயர்வால் நாட்டில் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர வழிவகுக்கும் என்றும் இதனால் உற்பத்தி துறை கடுமையாக பாதிக்கப்படும் என்றும் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். பெட்ரோல் டீசல் விலை உயர்வால் போக்குவரத்து கட்டணங்கள் விலை கடுமையாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஒன்றிய  அரசு பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை குறைத்து பிறகும் பெட்ரோல் டீசல் விலையில் பெரிய அளவில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. நாட்டில் பல மாநிலங்களில் தேர்தல் முடிந்துள்ள நிலையில் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்படலாம். கச்சா எண்ணெயின் விலை உயர்ந்துள்ள  நிலையில் பெயிண்ட், பிளாஸ்டிக், டயர்கள்  தயாரிப்புத் துறையில் பெரும் விலை உயர்வை ஏற்படுத்தும். விமானம், பேருந்து, ரயில் போன்றவைகளின் போக்குவரத்து கட்டணங்கள் உயரும்.  இதனால் சமையல் எரிவாயு மற்றும் உலோகங்களின் விலை அதிகரிக்கும் நிலை உள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.  மேலும்,   கச்சா எண்ணெயின் விலை உயர்வு நாட்டில் விலைவாசி மற்றும் உணவுப் பழக்கத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.Continue Reading

கட்டுரையாளர்: சிவரஞ்சன் உக்ரைன் மீது போர் தொடுக்கும் அளவுக்கு ரஷ்யா கோபப்பட்டது ஏன்? இது தொடர்பான பின்னணி தகவல்கள், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க நேட்டோ அமைப்பு தான் முக்கிய காரணம் என கூறப்படுகிறது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. வான்வெளி தாக்குதலில் ஈடுபட்டு உக்ரைன் நாட்டு நகரங்களில் ரஷ்யா குண்டு வீசி வருகிறது. இருநாடுகளுக்கு இடையேயான இந்த போருக்கு முக்கிய காரணமாக ஒன்று உள்ளது. அதாவது நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைய முயற்சித்தது தான் போருக்கு பிள்ளையார் சுழி போட்டுள்ளதாக கூறப்படுகிறது. நேட்டோ என்பது வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு ஆகும். 2ம் உலக போருக்கு பிறகு சோவியத் யூனியன், கிழக்கு ஐரோப்பாவில் இருந்து படைகளை திரும்ப பெற மறுத்தது. இதை முறியடிக்கும் வகையில் நட்பு நாடுகள் இணைந்து உருவாக்கியது தான் இந்த நேட்டோ படைகள். துவக்கத்தில் அமெரிக்கா,பிரிட்டன், பிரான்ஸ், கனடா, இத்தாலி, நெதர்லாந்து, ஐஸ்லாந்து, பெல்ஜியம், லக்சம்பர்க், நார்வே, போர்ச்சுகல், டென்மார்க் நாடுகள் உறுப்பினர்களாக இருந்தன. தற்போது நேட்டோவில் 30 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்த நாடுகளின் ராணுவ வீரர்கள் நேட்டோ படையில் அங்கம் வகிக்கின்றனர். இதில் இணைவதன் மூலம் இக்கட்டான சூழலில் நேட்டோ ராணுவ உதவிகளை பெற முடியும். தொடர்ச்சியாக இந்த அமைப்பில் புதிய நாடுகள் இணைக்கப்பட்டு வருகின்றன. சோவியத் யூனியன் பிரிவு இதற்கிடையே தான் 1991 டிசம்பர் 25ல் சோவியத் யூனியன் 15 நாடுகளாக பிரிந்தது. சோவியத் யூனியனில் அங்கம் வகித்த ஆர்மீனியா, அஜர்பைஜான், பெலாரஸ், ​​எஸ்டோனியா, ஜார்ஜியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், லாட்வியா, லிதுவேனியா, மால்டோவா, ரஷ்யா, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், உக்ரைன், உஸ்பெகிஸ்தான் ஆகியவை தனி நாடுகளாகின.Continue Reading