ஊடகத்துறை வரலாற்றில் மிகவும் சவால் நிறைந்த காலகட்டத்தில் துப்பாக்கி முனைகளின் அச்சுருத்தல்களுக்கு மத்தியில் தனது கருத்துக்களின் ஊடாக உண்மைகளை உரக்கச்சொன்ன மிகவும் துணிச்சல் மிக்க ஊடகப் போராளியாக திகழ்ந்த ஊடகவியலாளர் தர்மரத்தினம் சிவராம். இலங்கையின் மிக முக்கியமான ஊடகவியலாளர்களில் ஒருவரான தராகி என்றழைக்கப்படும் சிவராம் பிறந்த தினம் இன்று. இடதுசாரிக் கருத்துக்களில் நம்பிக்கை கொண்டவராக அறியப்பட்ட சிவராம் தீவிர தேசியவாதத்தைக் கைக்கொள்ளக் காரணமான பயணத்தின் விளைவு சிவராமுடைய எழுத்தின் போக்கைContinue Reading

புலிகள் சமர்ப்பித்துள்ள இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை திட்டத்திற்கும் நீங்கள் அருந்துகின்ற ‘பன்ரா” போன்ற மென்பானங்களில் நிறக் கலவை போத்தலடியில் படியாமலிருப்பதற்கும் என்ன தொடர்பு? (இக்கேள்வியைப் பார்த்தவுடன் ‘ஆஹா! கடைசியாக ஆளுக்கு மூளையில் தட்டிவிட்டது” என எண்ணுவோரை சற்றுப்பொறுமையாக மேற்கொண்டு படிக்கும்படி வேண்டிக் கொள்கிறேன்) புலிகள் பல்வேறு நாடுகளில் ஸ்ரீலங்கா அரசுடன் (ஆறுமுறை) பேசி கிடைத்தபலன் ஒன்றுமில்லை. நீண்டகாலமாக ஸ்ரீலங்கா அரசும் சிங்களத் தேசியவாதிகளும் சர்வதேச சமூகத்திடம் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துவந்தனர்.Continue Reading

இலங்கையில் இன்று நிரந்தர அமைதி ஏற்படுமா, இல்லையா என்பதற்கு புலிகளின் இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத் திட்டம் ஒரு வரலாற்று உரை கல்லாக அமைந்துள்ளது. இதில் காணப்படும் தமிழர் சுயநிர்ணய உரிமை பற்றிய அடிப்படை கருத்தையே சிங்கள தேசம் பெரும் அச்சுறுத்தலாகவும் நசுக்கப்படவேண்டிய சவாலாகவும் கருதி செயல்படுகின்றது. இலங்கை தீவை விட்டு பிரித்தானிய ஏகாதிபத்தியம் வெளியேறிய கணத்திலிருந்து இன்றுவரை இத்தீவின் வடக்கு-கிழக்கில் வாழும் தமிழர்கள் தமது சுயநிர்ணய உரிமையை சிங்களContinue Reading

கடந்த திங்கட்கிழமை கொழும்பில் ஒரு புத்தக வெளியீட்டுக்குச் சென்றேன். சிங்கள கடும் போக்காளர் எஸ். எல். குணசேகர புலிகளின் இடைக்கால தன்னாட்சி அதிகார சபை வரைவை கடுமையாகத் தாக்கி எழுதியுள்ள அந்நூலின் அறிமுக விழாவிற்கு சிங்கள தேசத்தின் ஆங்கிலம் பேசும் மேலாண்மையாளர்களில் பெரும்பாலானோர் வந்திருந்தனர். கூட்டம் முடிந்ததும் இவர்களுள் எனக்குத் தெரிந்த ஒருசிலருடன் நாட்டு நடப்புகளைப்பற்றி பேசிக்கொண்டிருந்தேன். அவர்கள் அங்கு மிகவும் உறுதியாக ஒரு கருத்தை என்னிடம் தெரிவித்தனர். ~கருணாContinue Reading