ரஷ்யா உக்ரைனை அச்சுறுத்தத்தான் போரை துவங்கியது. ரஷ்யா , சீனா , அமெரிக்கா, வடகொரியா நாடுகளிடம் இருக்கும் அணுஆயுதங்களை பயன்படுத்த ஆரம்பித்தால் ,பூமி என்ற ஒரு கிரகமே இருக்காது என்பது உலகறிந்த உண்மை. அதனால் அனைத்து நாடுகளும் சில நாட்கள் அல்லது வாரங்களில் அடங்கிவிடும் என்றே கருதி இருந்தேன். இப்போது இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் நிலைமை மோசமாகி கொண்டே போகிறதே அல்லாமல் தீர்க்கப்படுவதாய் தெரியவில்லை. ரஷ்யா,உக்ரைன் பொது மக்கள் மீதுContinue Reading

உலக ஒழுங்கின் புவிசார் அரசியல்,போரியல் நகர்வுகளை புரிந்து கொள்வதில் ‘தமிழ் இனம் ஒரு கிணற்று தவளை’ என்பதை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சொல்லவேண்டும் என்பதால் இந்த பதிவு. இன்றைய தினம் மேற்குலக ஊடகங்களில் முக்கிய இடத்தை பிடித்த ஒரு செய்தி ‘ ரஷ்யா உக்ரைனுக்கு எதிராக Thermobaric weapons களை உபயோகிக்கிறது’ என்பதுதான். • அது என்ன Thermobaric weapons? இந்த Thermobaric weapons கள் vacuum bombs, fuel-airContinue Reading

கட்டுரையாளர்:  குகன் யோகராஜா ரஷ்யா உக்ரைன் போர் தொடர்ந்து நடந்து வருகிறது. இரு பக்க சேதங்கள் எதிர்பார்க்கப்படவேண்டியவைதான். இந்த சூழலில் 3500 ரஷ்யப்படையினர் கொல்லப்பட்டமை என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகின்றன.எனினும் இந்தச் செய்தியினை மேற்குலக ஊடகங்களே ஒத்துக்கொள்ளவில்லை. இப்படியான செய்திகள் பரப்பப்படுவது, ரஷ்யர்களிடையே தோல்வி மனப்பான்மையை உருவாக்க செய்வதோடு, அதன் மூலமாக அழுத்தங்களை அதிபர் புதினுக்கு கொடுக்கும் முயற்சியே என்பதே மேற்குலக ஊடகர்களின் கருத்து. மேலும்,உக்ரைன் மீதான போரில் பொதுமக்களின் உயிரிழப்புக்கள், அவர்கள் படும்  சிரமங்களை மேற்குலகம் கூடுதலாக வெளியிட்டு வருவதன் காரணம், ஒட்டுமொத்தமான  ரஷ்ய எதிர்ப்பை ஐரோப்பிய மக்களிடையே உண்டாக்குவதன்மூலம், அதிபர் புதின்  அழிக்கப்பட வேண்டியவர் என்ற மனோநிலையை உண்டாக்குவது மட்டுமே. இதே மேற்குலக ஊடகங்கள், ஈராக், லிபியா, எகிப்த், சிரியா, ஆப்கான் மீதான  தாக்குதல்களின்போது, பொதுமக்களின்  அழிவை விடவும், அவர்களின் கஷ்டங்களை  விடவும், அந்தந்த நாடுகளின் தலைமைகள்  கொடூரமானவர்கள் என்ற பிம்பத்தையே மேற்குலக மக்களிடம் விதைத்ததை அவதானித்தால், மேற்குலக ஊடகங்களின் அரசியலும்  மிக நன்றாக புரியும். உதாரணத்துக்கு, ஈராக் மீதான தாக்குதல்களுக்கு, ஈராக் அணுவாயுதம் தயார் செய்கிறது என்பதே முதன்மையான குற்றச்சாட்டு. அப்படி இல்லை என சுயாதீன அமைப்புக்கள் மறுத்திருந்தாலும், ஈராக் சென்று அங்கு  ஆய்வுகளை நடத்திய அமெரிக்க சார்பு ஆய்வுக்குழுக்கள், ஈராக் அணுவாயுதம் தயாரிக்கும்  அறிகுறிகள் தென்படுகின்றன என்றே அறிக்கை அளித்தன. ஐ.நா. சபையின் எதிர்ப்பையும் மீறி  அமெரிக்க / நேட்டோ படைகள் ஈராக்கை  துவம்சம் செய்தன. தாக்குதல் தொடங்கி, அதிபர் சதாம் ஹுசைன் பிடிபடுவதற்கு முன்னரேயே, ஈராக்கில் அணுவாயுதம்  தயாரிக்கும் வசதியே இல்லையென்பது நிரூபணமானது. எனினும்,Continue Reading

உக்ரேன் நாட்டு நேரப்படி வெள்ளிக்கிழமை காலை 4 மணிக்கு, (இந்திய நேரப்படி இன்று காலை 7.30 மணிக்கு) ஏவுகனை தாக்குதல் தொடங்கியது என்று அந்நாட்டின் அதிபர் ஸெலன்ஸ்கி தெரிவித்தார். இன்று காலை தலைநகர்கீவில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக இதில் குடியிருப்பு ஒன்றிலும் தாக்குதல் நிகழ்ந்ததாக செய்தி வெளியாகி உள்ளன. ரஷ்யா குறிப்பிட்டு ராணுவம் மீதும் பொதுமக்கள் தங்கியுள்ள தளங்கள் மீதும் குறிவைத்து தாக்குவதாக அந்நாட்டு ஜனாதிபதி செலஸ்கின் குற்றம் சாட்டியுள்ளார். இதனைContinue Reading

நேற்று அதிகாலை தொடங்கி ரஷ்யா – உக்ரைன் எல்லைப் பகுதியில் கடுமையான ராணுவ தாக்குதல் நடைபெற்று வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ரஷ்ய ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியதோடு அல்லாமல் தரை வழியாகவும் முன்னேறி வருகிறது. உக்ரைனில் இன்று இரண்டாவது நாளாக ரஷ்யாவின் ராணுவம் தாக்குதல் நடந்து வருகிறது. இந்த நிலையில், இன்று காலை அணு விபத்துத் தளத்தை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.. உக்ரைன் தலைநகர்Continue Reading

கட்டுரையாளர்: சிவரஞ்சன் உக்ரைன் மீது போர் தொடுக்கும் அளவுக்கு ரஷ்யா கோபப்பட்டது ஏன்? இது தொடர்பான பின்னணி தகவல்கள், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க நேட்டோ அமைப்பு தான் முக்கிய காரணம் என கூறப்படுகிறது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. வான்வெளி தாக்குதலில் ஈடுபட்டு உக்ரைன் நாட்டு நகரங்களில் ரஷ்யா குண்டு வீசி வருகிறது. இருநாடுகளுக்கு இடையேயான இந்த போருக்கு முக்கிய காரணமாக ஒன்று உள்ளது. அதாவது நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைய முயற்சித்தது தான் போருக்கு பிள்ளையார் சுழி போட்டுள்ளதாக கூறப்படுகிறது. நேட்டோ என்பது வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு ஆகும். 2ம் உலக போருக்கு பிறகு சோவியத் யூனியன், கிழக்கு ஐரோப்பாவில் இருந்து படைகளை திரும்ப பெற மறுத்தது. இதை முறியடிக்கும் வகையில் நட்பு நாடுகள் இணைந்து உருவாக்கியது தான் இந்த நேட்டோ படைகள். துவக்கத்தில் அமெரிக்கா,பிரிட்டன், பிரான்ஸ், கனடா, இத்தாலி, நெதர்லாந்து, ஐஸ்லாந்து, பெல்ஜியம், லக்சம்பர்க், நார்வே, போர்ச்சுகல், டென்மார்க் நாடுகள் உறுப்பினர்களாக இருந்தன. தற்போது நேட்டோவில் 30 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்த நாடுகளின் ராணுவ வீரர்கள் நேட்டோ படையில் அங்கம் வகிக்கின்றனர். இதில் இணைவதன் மூலம் இக்கட்டான சூழலில் நேட்டோ ராணுவ உதவிகளை பெற முடியும். தொடர்ச்சியாக இந்த அமைப்பில் புதிய நாடுகள் இணைக்கப்பட்டு வருகின்றன. சோவியத் யூனியன் பிரிவு இதற்கிடையே தான் 1991 டிசம்பர் 25ல் சோவியத் யூனியன் 15 நாடுகளாக பிரிந்தது. சோவியத் யூனியனில் அங்கம் வகித்த ஆர்மீனியா, அஜர்பைஜான், பெலாரஸ், ​​எஸ்டோனியா, ஜார்ஜியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், லாட்வியா, லிதுவேனியா, மால்டோவா, ரஷ்யா, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், உக்ரைன், உஸ்பெகிஸ்தான் ஆகியவை தனி நாடுகளாகின.Continue Reading