திடீரென அதிகாரத்தில் இருப்பவர் இதைத்தான் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்களா? என் வீட்டிற்கு வெளியே நான் என்ன சாப்பிட வேண்டும் என்று நாளை நீங்கள் முடிவு செய்வீர்களா?” என்று நீதிபதி கூறியுள்ளார். ஒருவர் என்ன சாப்பிட வேண்டும் என்பதை பிறர் முடிவு செய்ய முடியுமா? மக்கள் விரும்பியதை சாப்பிட தடை செய்யமுடியுமா?” என்று வழக்கு ஒன்றில் குஜராத் ஹைகோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது. நான் என்ன சாப்பிடுகிறேனோ, அதைதான் நீயும் சாப்பிடணும்..Continue Reading

இந்த நாட்களில் நடத்தப்படும் உரையாடல்கள் மற்றும் அரசியல் வர்ணனைகள் 2024 தேசியத் தேர்தல்கள் மற்றும் அதன் பிறகு என்ன நடக்கக்கூடும் என்பதில் கவனம் செலுத்துகின்றன. உரையாடல்கள் அனைத்தும் நரேந்திர மோடி, யோகி ஆதித்யநாத், பிரசாந்த் கிஷோர் மற்றும் மம்தா பானர்ஜியின் கூட்டணி கணக்குகளை பற்றியது. ஆனால் உண்மையில் 2024ஐ விட கவனம் செலுத்த வேண்டிய உண்மையான ஆண்டு 2025. அதைப்பற்றி யாரும் பேசுவதில்லை. ஏனெனில் அந்த ஆண்டு “ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கம்” சதம் அடிக்கும் ஆண்டு. ஆர்எஸ்எஸ்ஸின் 100 ஆண்டு கொண்டாட்டங்கள் மற்றும்Continue Reading

மதவெறியை பரப்புவதற்கும் மேலும் சிறுபான்மையினரை தனிமைப்படுத்துவதற்கும் இந்து பண்டிகைகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்று பேராசிரியர் அபூர்வானந்த் கூறுகிறார். டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் அபூர்வானந்த், குர்கானில் தொழுகைக்காக நடத்தப்பட்ட சர்ச்சையை விவரித்த்துள்ளார். கோவர்தன் பூஜைகள் இந்தியாவில் உள்ள இந்தி இதயங்கள் முழுவதிலும் கொண்டாடப்பட்டது.மேலும் வலதுசாரி குழுக்கள் குருகிராமில் உள்ள நமாஸ் தளங்களில் கோவர்த்தன பூஜை நடத்தியததை தொடர்ந்து அங்கு குவிந்த வலது சாரிகள் முஸ்லிம்களுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பி , பொது இடங்களில் தொழுகை நடத்த வேண்டாம் என்று முஸ்லிம்களுக்கு அழைப்பு விடுத்தனர். குர்கான் தொழுகை விவகாரம் :- ஹரியானா மாநிலம் குர்கானில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்திய இடத்தில் வலதுசாரிContinue Reading

உலகமயமாக்கும் வெளித்தோற்றத்தோடு,  சாதி அமைப்பு இறுகிட, இடஒதுக்கீடு நிற்கும் வகையில் அதை குறித்து பேசாமல் மௌனமாய் கடந்து , தகுதி, திறமை பூச்சுக்களோடு இந்துத்துவ தொலைநோக்கை சுமந்தபடி நிற்கிறது தேசிய கல்விக் கொள்கை. சுதந்திர இந்தியாவிற்கு பிந்தைய கால கல்வி என்பது மாணவர்களுக்கு அறிவு மற்றும் திறன்களை வழங்குவதோடு மட்டுமல்லாமல், “தேசத்தைக் கட்டியெழுப்பும்” ஒரு  செயல்முறையை எளிதாக்க பயன்பட்டதாக கருதப்பட்டது. “இந்திய தேசம்” என்ற கருத்தாக்கம், முந்தைய வடிவில் இருந்தContinue Reading

தேசியக் குடியுரிமை பதிவேடு (என்ஆர்சி), குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) அமல்படுத்தினால் முஸ்லிம்கள் தெருக்களில் இறங்கிப் போராடுவார்கள் என அசாதுதீன் ஒவைசி எச்சரித்துள்ளார்.இதை  உத்தரப் பிரதேசத்தின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் தெரிவித்தார். உ.பி.,யின் சட்டப்பேரவைத் தேர்தலுக்கானப் பிரச்சாரம் தொடங்கி விட்டது. அடுத்த வருடம் தொடக்கத்தில் நடைபெற உள்ள தேர்தலுக்காக அகில இந்திய இத்தஹாதுல் முஸ்லிமின் கட்சியின்(ஏஐஎம்ஐஎம்) தலைவர் அசாதுதீன் ஒவைசி பிரச்சாரம் செய்து வருகிறார். இம்மாநிலத்தில் முஸ்லிம்கள் அதிகமாகContinue Reading

எழுத்தாக்கம்: க.இரா. தமிழரசன் இன்றைய சமூக வாழ்வின் அரசியல் , பொருளாதார, பண்பாட்டுப் போராட்டங்கள் போன்றவற்றைப் புரிந்து கொள்ள , அவை தொடர்பான கருத்துகள் எவ்வாறு வளர்ந்து வந்தன ; எங்கிருந்து வருகின்றன என்பதைத் தெரிந்து கொண்டு அதை உள்வாங்கிக் கொள்ள வேண்டியது அவசியம். இதைத் தனது தத்துவத்தின் வறுமை என்ற நூலில் கார்ல் மார்க்ஸ் விரிவாக எழுதியிருப்பார். வறுமையின் தத்துவத்தை எழுதிய புருதோன் போலவே நம் கண்களுக்கு  தோழர்.Continue Reading

எழுத்தாக்கம் : யாழினி ரங்கநாதன் லவ் ஜிஹாத்’, ‘போதைப்பொருள் ஜிஹாத்’, ‘லேண்ட் ஜிஹாத்’ வரிசையில் ‘மார்க்ஸ் ஜிஹாத்’ எனப் பேசி பேராசிரியர் ஒருவர் சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறார். இந்தியா இப்போது ‘ஜிஹாத்’ விவாதத்தில் சிக்கியிருக்கிறது போல. ‘லவ் ஜிஹாத்’, ‘போதைப்பொருள் ஜிஹாத்’, ‘லேண்ட் ஜிஹாத்’, ‘யுபிஎஸ்சி ஜிஹாத்’ என எழுந்த சர்ச்சைகளின் பட்டியலில் நீண்டுகொண்டே செல்கிறது. ஏற்கெனவே ‘லவ் ஜிஹாத்’ சர்ச்சை முடியாமல் தொடர்ந்துகொண்டிருக்கும் நிலையில், சமீபத்தில் கேரள மாநிலContinue Reading