எழுத்தாக்கம்: யாழினி ரங்கநாதன் ஆப்கானிஸ்தான் நாட்டில், 20 ஆண்டுகளுக்கு பிறகு, ஆட்சியைக் கைப்பற்றி உள்ள தலிபான் அமைப்பினர், தற்காலிக அரசு அமைத்தும், இதுவரை பதவி ஏற்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். ஆப்கனை கைப்பற்றிய தலிபான்கள் :- தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தானில், சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்கப் படைகள் வெளியேறியதை அடுத்து, ஆட்சி அதிகாரத்தை தலிபான் அமைப்பினர் கைப்பற்றி உள்ளனர். இதை அடுத்து ஆப்கன் அதிபராக இருந்த அஷ்ரப்Continue Reading

கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் இருந்த அமெரிக்க வீரர்களின் கடைசி அணி காபூல் விமானநிலையத்தில் இருந்து நேற்று புறப்பட்டது. இங்கிலாந்தும்.  அமெரிக்காவும் ஆப்கானிஸ்தானில் தங்கள் இராணுவத்தை அதிகாரப்பூர்வமாக நேற்றிரவு காபூல் விமான நிலையத்தில் இருந்து வெளியேற்றின. அமெரிக்க பாதுகாப்பு துறை வெளியிட்ட செய்தியில், காபூலில் அமெரிக்க படைகளின் நடவடிக்கை முடிந்ததன் அடையாளமாக, கடைசி அமெரிக்க வீரராக மேஜர் ஜெனரல் கிறிஸ் டோனாஹியூ நேற்று சி-17 ரக விமானம் ஒன்றில் புறப்பட்டுள்ளார்Continue Reading

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தாலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு இராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தாலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலையும் கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து ஆப்கனில் நடந்த ஆயுதப் போரில் தாலிபான்கள் வென்றுள்ளதாக ஆப்கன் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிபர் அஷ்ரப் கானி, ஆப்கன் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார். ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்காவுக்கான தூதரக அதிகாரிகளும் வெளியேறியுள்ளனர்.Continue Reading

  ஆப்கானிஸ்தானின் இரண்டாவது பெரிய நகரமான கந்தஹாரை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இதன் மூலம் மொத்தம் உள்ள 34 மாகாண தலைநகரங்களில் 12 தலைநகரங்கள் தலிபான்கள் வசம் சென்றுள்ளன. கந்தஹார் தலிபான் வசம் சென்றதை அடுத்து, அரசு அதிகாரிகள் விமானம் மூலம் அங்கிருந்து தப்பிச் சென்றிருப்பதாக தெரியவந்துள்ளது. அதே போல் தலைநகர் காபூல் அருகே உள்ள மூன்றாவது பெரிய நகரமான ஹீரத்தையும் தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அடுத்தடுத்து முக்கியContinue Reading