பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவிக்கு ஆபத்து.
பொருளாதார நெருக்கடி, கடன்சுமை என இரட்டை கத்திகள் தன் பதவியை பறிக்க தயாராகி வரும் சூழலில் இந்தியா குறித்து வெளிப்படையாக பாராட்டிப் பேசியிருக்கிறார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்.
அரசை முறையாக வழிநடத்த தெரியவில்லை எனக் கோரி, எதிர்க்கட்சிகள் கொண்டு வரும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெள்ளிக்கிழமை விவாதத்திற்கு வருகிறது.

கூட்டணியில் உள்ள மூன்று கட்சிகள் வெளியேற முடிவெடுத்து விட்டனர். அதோடு இம்ரானின் சொந்தக் கட்சியான தேகிரி கி இன்ஸ் ஆப் எம்பிக்கள், 24 பேர் அரசுக்கு எதிராக திரும்பியுள்ளனர். இதனால் வரும் வெள்ளிக்கிழமை நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் இம்ரான்கான் வெற்றி பெறுவாரா என கேள்வி எழுந்துள்ளது. இச்சூழலில்தான் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை குறித்து பொதுக்கூட்டத்தில் இம்ரான்கான் பாராட்டிப் பேசியிருக்கிறார்.
அமெரிக்காவுடன் குவாட் அமைப்பில் இருந்தாலும் ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள தடையை மீறி மக்களின் நலனுக்காக கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியாவின் முடிவு மிகவும் சிறப்பானது என இம்ரான் கான் கூறியுள்ளார்.

ரஷ்யாவின் மீது தடை விதித்த ஐரோப்பிய நாடுகள் இந்தியாவிடம் அவ்வாறு அழுத்தம் கொடுக்க முடியாத அளவிற்கு அச்சம் கொண்டு உள்ளதாக அவர் கூறினார். இந்த கருத்து இம்ரான் கானின் ஆட்சிக்கு மேலும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது . உடனடியாக அவர் பதவி விலக வேண்டும் என பாகிஸ்தான் ராணுவ தளபதி கியூமார் பாஜ்வா வலியுறுத்தியுள்ளார் இந்தச் சூழலில் நடக்க உள்ள இஸ்லாமிய ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாடு பாகிஸ்தான் மக்களின் கவனத்தைப் பெற்றுள்ளது.