ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்

2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது, நாம் எல்லோரும் அறிந்த ஒன்று. 25 நாட்கள் Apollo மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஜெயலலிதா, டிசம்பர் 5 – 2016 ஆம் ஆண்டு மரணம் அடைந்தார். அதன் பின்னர் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பொறுப்பேற்று அப்பணிகளை மேற்கொண்டுவந்தார்

Dramatic Tuesday for TN politics: how OPS revolt unfolded | o panneerselvam  revolts | aiadmk split | panneerselvam against sasikala natarajan | tamil  nadu politics | India News | National News

அதன் பின் பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி 2017 ஆம் ஆண்டு ஓ பன்னீர்செல்வம் முதலமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார். அதன்பின்னர் சசிகலா அந்த பதவிக்காக தேர்வு செய்யப்பட்டதாக சட்டமன்ற குழு உறுப்பினர்கள் தெரிவித்தார்கள். அதன் தொடர்ச்சியாக பிப்ரவரி மாதம் 7 ஆம் தேதி நேரடியாக ஜெயலலிதா நினைவிடம் சென்ற ஓ பன்னீர்செல்வம், அங்கு செய்தியாளர்கள் சந்திப்பில் சந்தித்து கட்சி தனக்கு சரியான மரியாதை கொடுக்கவில்லை என்றும் தன்னை வற்புறுத்தி ராஜினாமா செய்ய வைத்ததாகவும், தனக்கு ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருக்கிறது என அறிவித்து தனது தர்மயுத்தத்தை துவங்கினார்.

அதன் பின்னர் நடந்த பல்வேறு அரசியல் மாற்றங்களும் நமக்கு அறிந்ததுதான் இந்த நிலையில் ஓ பன்னீர்செல்வம் அவர்களின் பிரதான கோரிக்கையாக இருந்தது, ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிப்பதற்கான அமைப்பு உருவாக்க வேண்டும். அதில் ஒன்று சிபிஐ ஆக இருக்க வேண்டும் அல்லது ஒரு நீதியரசர் கீழ் வரவேண்டும் என்று அவர் தெரிவித்தார். அதன் படியாக ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கையை ஏற்று அப்போதே அதிமுக அரசு உருவாக்கியதுதான் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம்.

இறைவா,என் சகோதரர் ஓபிஎஸ்க்கு,வேதனையைத் தாங்கும் சக்தியைக் கொடு” – ஈபிஎஸ்  இரங்கல்….! - Dinasuvadu Tamil

அந்த ஆணையம் இன்று வரை 154 பேரிடம் விசாரணை செய்து இருக்கிறது மற்றொரு புறத்தில் விசாரணைக்கு ஏற்கனவே ஆஜரான மருத்துவர்கள் எஞ்சி இருக்கக்கூடிய நபர்களிடம் சசிகலா தரப்பு குறுக்கு விசாரணையும் செய்திருக்கிறது. இதற்கிடையே கடந்த காலங்களில் ஓ பன்னீர்செல்வம் துணை முதலமைச்சராக இருந்த கால கட்டத்தில் அவர் ஆஜராக வேண்டுமென்று ஆறுமுகசாமி ஆணையம் அவருக்கு சம்மன் கொடுத்திருந்தது. ஏறத்தாழ எட்டு முறை அந்த சம்மன் அவருக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்த எட்டு முறையும் பல்வேறு காரணங்களை ஓ பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜராவதற்கு கால அவகாசம் கேட்டது.
மற்றொரு தரப்பை சசிகலா மற்றும் ஆணையம் தரப்பில் அந்த விளக்கம் கேட்கப்பட்டது. அதற்கான கால அவகாசம் மாற்றி அமைக்கப்பட்டது.

ஆனால் இதற்கு இடைப்பட்ட நிலையில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் விசாரணை பதிவுகளை சரியாக செய்யவில்லை என்றும் குறிப்பாக மருத்துவப் பதிவுகளை சரியாக செய்யவில்லை என்று அப்பல்லோ மருத்துவமனை நீதிமன்றத்தை நாடி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக இந்த விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

2021 டிசம்பர் அந்தத் தடை நீக்கப்பட்டு, 2022 ஜனவரி மாதத்திலிருந்து ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் செயல்பட துவங்கியிருக்கிறது. 12வது முறையாக ஆணையத்திற்கு இந்த கால அவகாசம் நீட்டிப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. இப்படி எல்லாம் இருக்கும் பொழுது ஓ பன்னீர்செல்வம் வாக்குமூலத்தை எப்போது கொடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே இருந்துவருகிறது. கடந்த இரு வாரங்களுக்கு முன்பாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சார்பாக சம்மன் அனுப்பப்பட்டது. அதை ஏற்றுக்கொண்டு இன்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் என்னென்ன சந்தேகங்கள் தனக்கு இருக்கிறது அல்லது அந்த சந்தேகத்திற்கு காரணம் என்ன? என்ற ஒரு பட்டியலை தனது வழக்கறிஞருடன் ஓ பன்னீர்செல்வம் நேரடியாக ஆணையத்திற்கு ஆஜராகினார் அதேபோல சசிகலா உடைய உறவினரான இளவரசியும் இரண்டு நாட்களாக ஆஜராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.