புதுடெல்லி: புதன்கிழமை அன்று நாடாளுமன்றத்தில் நீதிபதிகள் நியமனத்தில் சமூக வேறுபாடு இல்லை என்றும், பெண்கள் மற்றும் பழங்குடியின உறுப்பினர்களுக்கு நியாயமான பிரதிநிதித்துவம் இல்லை என்றும் திமுக எம்.பி தயாநிதி மாறன் தெரிவித்தார்.
Live Law இன் படி , உச்ச நீதிமன்றத்திற்கு பட்டியலிடப்பட்ட சாதியினரைச் சேர்ந்த ஐந்து பேர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும், “ஒரு குறிப்பிட்ட சமூகம்” மட்டுமே முழு நீதித்துறை சமூகத்திலும் ஆதிக்கம் செலுத்துவது போல் தெரிகிறது என்றும் மாறன் கூறினார்.
மேலும் பெண்களுக்கு சமமான பிரதிநிதித்துவம் இல்லை என்றும், எஸ்டி சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் கூட உச்ச நீதிமன்றத்தில் நியமிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
லோக்சபாவில் கேள்வி நேரத்தின் போது, BSNL இன் 4G மற்றும் 5G சேவைகள் குறித்த பிரச்சினையை எழுப்பிய போது, ஒரு தனியார் ஆபரேட்டருக்கு அரசாங்கம் ஆதரவளிப்பதாக குற்றம் சாட்டி, பாரதிய ஜனதா கட்சி (BJP) உறுப்பினர்களுடன் மாறன் வார்த்தைப் போரில் ஈடுபட்டார்.
“பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்களுக்கு 4ஜி மற்றும் 5ஜி சேவைகள் வழங்கப்படும் என்று முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் உறுதியளித்திருந்தார். ஆனால் இன்றுவரை 4ஜி சேவையை அவர்கள் தொடங்குவதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை.
உண்மையில் அவர்கள் அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் அதாவது பிரதமரே அங்கு விளம்பரப்படுத்தப்பட்ட புகைப்படங்களில் போஸ்டர் பாய் இருக்கும் ஜியோ நிறுவனத்திற்கு வாடிக்கையாளர்களை இழக்கிறார்கள்” என்று அவர் கூறினார்.
அவரின் இந்த கருத்துக்கள் நாடாளுமன்ற பெஞ்சுகளில் இருந்தவர்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தியது. அங்கிருந்த பாஜக தலைவர்கள் மாறனின் கருத்துக்கள் “நியாயமற்றவை” என்று குற்றம் சாட்டினார்கள்.
இந்த விவகாரத்தில் தலையிட்ட சபாநாயகர் ஓம் பிர்லா, உறுப்பினர்கள் தங்கள் கேள்விகளை அந்தந்த மாநிலங்கள் மற்றும் தொகுதிகள் அல்லது கொள்கை விஷயங்களில் கட்டுப்படுத்துமாறு கேட்டுக் கொண்டார், மேலும் குற்றச்சாட்டுகளை எழுப்புவதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டார்.
மேலும் மாறன் அவர்கள் தன் மீது மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பயன்படுத்திய ஆட்சேபனைக்குரிய வார்த்தைக்கு எதிர்ப்பு தெரிவித்தார். அதனால் பிர்லா அதனை பதிவு செய்ய முடியாது என்று கூறினார்.
நன்றி : The Wire
தமிழாக்கம் : யாழினி ரங்கநாதன்