இந்த தொடரில் இதுவரை சிந்துவெளிக்கு முற்பட்ட காலத்தில் ஆரிய டிஎன்ஏ என அறியப்படும் ‘ஸ்டெப்பி’ இந்தியாவிற்கு வெளியில் கிமு 3000 முதலே கிடைத்திருப்பதையும் ,ஆனாலும் அவை இராக்கிகடியில் கிடைத்த கிமு 2500ஐ சேர்ந்த டிஎன்ஏ மாதிரியுடன் ஒத்துப்போகவில்லை என்பதையும் காட்டி சிந்துவெளி நாகரீக காலத்தில் ஆரிய குடியேற்றம் இந்தியாவில் நிகழவில்லை என்பதை பார்த்திருந்தோம். அதை தொடர்ந்து சிந்துவெளி நாகரீகம் முழுவதும் வீழ்ந்தபின் கிமு 1300 – 1000 வாக்கில் தான்Continue Reading

இதுவரையில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இலக்கிய/ கல்வெட்டு / மானுடவியல் ஆய்வுத் தரவுகளை பார்த்தோம். இக்கட்டுரையில் ஆரியருக்கும் தமிழருக்குமான நுணுக்கமான அரசியலையும் அதில் மக்கள் எவ்வாறு திசைதிருப்ப பட்டனர் என்பதையும் காண்போம். பொதுவாக அனைவருக்குமே பொன்னியின் செல்வன் நாவல் பற்றி தெரிந்திருக்கும். பெரும்பான்மையானோர் அதனை வாசித்து மகிழ்ந்திருப்பர். அந்த முழு நாவலின் சாரமே ஆதித்த கரிகாலனின் கொலையை சுற்றி கட்டமைக்கப்பட்டிருக்கும். பாகுபலி முதல் பாகத்தின் முடிவில் “Why Kattappa killedContinue Reading

கடந்த பாகத்தில் சிந்துவெளியில் ஆரிய குடியேற்றம் நிகழ்ந்த காலத்தையும் அதன்பின் ஆரியத்துக்கான ‘ஸ்டெப்பி’ மரபணுவானது இன்றைய வட இந்தியர்களின் மரபணுவில் எந்தளவுக்கு கலந்துள்ளது என்பதையும் பார்த்தோம். இந்த பதிவில் ‘ஆரிய’ என்கிற சொல் எப்போதிருந்து முதன்முதலாகவும் பெருமைக்குரிய சொல்லாகவும் அடையாளப்படுத்தப்பட்டு வருகிறது என்பதை காண்போம். ஈரானிய கடவுளர்களுக்கும் வேத கடவுளர்களுக்கும் இருக்கும் ஒற்றுமைகள் குறித்து பல்வேறு கட்டுரைகள் இதுவரை வெளிவந்துள்ளன. இன்றைக்கு ‘ஸ்டெப்பி’ மரபணுவைக்கொண்ட இனக்குழுக்களில் இன்றைய ஈரானியர்களும் வடContinue Reading

இதுவரை சங்க இலக்கிய தரவுகளை கொண்டு ஆரியத்தையும் தமிழையும் தனித்தனியாக பார்த்தோம். இந்த பதிவில் சமீபத்தில் வெளியான இராக்கிகடி ஆய்வு முடிவினை கொண்டு ஆரியத்தையும் தமிழையும் கூடவே சிந்துவெளியையும் எவ்வாறு புரிந்துகொள்வது என பார்ப்போம். உலகில் மனிதன் முதன்முதலில் ஓரிடத்தில் தோன்றி தான் உலகம் முழுவதும் பரவியிருக்க முடியும் என்பது அறிவியல் ஏற்றுக்கொண்ட கருத்து. தோன்றிய இடமாக ஆப்ரிக்காவை கூறுவர். ஆனால் ஒரேயொரு முறை மட்டுமே இந்த இடப்பெயர்வு ஆப்ரிக்காவில்Continue Reading

இதுவரை அகநானூறு, சிலம்பு போன்ற நூல்களை கொண்டு ஆரியர்களையும் தமிழர்களையும் ஆராய்ந்தோம். இந்த பதிவில் பதினெண்மேற்கணக்கு நூல்களான பதிற்றுப்பத்து மற்றும் நற்றிணை போன்ற நூல்களில் குறிப்பிடப்படும் ‘ஆரிய’ எனும் சொல்லினை குறித்து பார்ப்போம். பதிற்றுப்பத்து என்பது சங்ககால சேர அரசர்களை பற்றி ஒரு தொகுப்பாக குறிப்பிடும் நூல். ஒவ்வொரு பத்தும் ஒரு சேர அரசரை போற்றி புகழும். சேர மன்னர்களின் தலைமுறையை வரிசைபடுத்தும் நூல் இது. இந்நூலினை கொண்டு ஆராயுங்கால்Continue Reading

சிலப்பதிகாரம் கொண்டு தமிழை இகழ்ந்த ஆரிய மன்னர்கள் சுங்கர்கள் அல்லது கன்வர்களாக தான் இருக்க வேண்டும் என்பதை இதுவரை பார்த்தோம். இந்த படையெடுப்பிற்கு உதவிய நூற்றுவர்கன்னர் எனும் சாதவாகனர்களையும் ஆரிய அரசர்கள் என்றே சிலப்பதிகாரம் பதிவு செய்கிறது. அதனை இந்த பதிவில் காண்போம். “பேரிசை மன்னர்க் கேற்பவை பிறவும்#ஆரிய மன்னர் அழகுற அமைத்ததெள்ளுநீர்க் கங்கைத் தென்கரை யாங்கண்வெள்ளிடைப் பாடி வேந்தன் புக்கு” – நீர்படைக்காதை 21-24 விளக்கம்: சேரன் செங்குட்டுவன்Continue Reading

முதல் பாகத்தில் சிலப்பதிகாரத்திலிருந்து குறிப்பிட்ட சில பகுதியை மட்டுமே பார்த்தோம். இப்பதிவில் முதல் பாகம் நீங்கலாக சிலம்பில் ‘ஆரியர்’ எனும் பெயர் பயின்று வரும் மற்ற சில இடங்களையும் பார்த்துவிடுவோம். “செறிகழல் வேந்தன் தென்றமி ழாற்றல்அறியாது மலைந்த #ஆரிய மன்னரைச்செயிர்த்தொழில் முதியோன் செய்தொழில் பெருக” – நீர்படைக்காதை 5-8. விளக்கம்: வீரக்கழல் செறிந்தவனான வேந்தன்; தென்னக தமிழர்களின் ஆற்றலை அறியாது மலைந்த ஆரிய மன்னரை கொலைத்தொழில் செய்வதில் முதியோனான கூற்றுவனைContinue Reading

கடந்த பதிவில் ஆரியர் குறித்து சிலப்பதிகாரம் கொண்டு பார்த்தோம். இதில் அகநானூறு பாடலில் வரும் ஆரியர்களை குறித்து காண்போம். ” மாரி யம்பின் மழைத்தோற் சோழர்வில்லீண்டு குறும்பின் வல்லத்துப் புறமிளை#ஆரியர் படையின் உடைகவென்நேரிறை முன்கை வீங்கிய வளையே” – அகம் 336 விளக்கம் : வல்லம் என்னும் ஊரின் வெளிப்புறக் காவல்-காட்டில், தோல் கேடயம் அணிந்துகொண்டு மழையின் நீர்த்தாரை விழுவது போல அம்பைச் சொரியும் சோழர் படையை எதிர்த்துப் போரிட்டContinue Reading

 ஆரியம் என ஒன்று இல்லை. அது ஒரு போலி கற்பிதம். கடந்த நூற்றாண்டில் ஏற்பட்ட அரசியல் பிரிவினைவாதம் என்றெல்லாம் ‘இன்று’ பலர் கூறிவருவதால் அதனை ஒரு தொடர் பதிவுகளாக வரலாற்று சான்றுகளுடன் வெவ்வேறு தளங்களில் எழுதுவதாக தீர்மானித்திருக்கிறேன். அதாவது வரலாறு, இலக்கியம் (வடமொழி, தமிழ்), கல்வெட்டியல், நாணயவியல், தொல்லியல், மானிடவியல், மொழியியல், ஆங்கிலேயர் கால கூற்றுகள், கடந்த காலங்களில் ஆரியர்களுக்கே இருந்த ஆரிய தற்பெருமை என ஏறத்தாழ அனைத்து தளங்களிலும்Continue Reading

தமிழ்நாடு சட்டப்பேரவை, 2023 ஆம் ஆண்டின் முதல் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. ஆளுநர் உரை என்பது, தமிழ்நாடு அரசால் தயாரிக்கப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலைப் பெற்று, பிறகு அச்சிடப்பட்டு அவையில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும். அந்த உரையை ஆளுநர் பேரவையில் வாசிப்பது என்பதுதான் சட்டப்பேரவை மரபாகும். ஆனால் தமிழ்நாடு அரசால் அனுப்பப்பட்ட உரைக்கு ஆளுநர் ஒப்புதல் கொடுத்த பின்னர், அச்சிடப்பட்டு பேரவையில் வழங்கப்பட்டிருந்த நிலையில், இன்று ஆளுநர்Continue Reading