தமிழ்நாட்டில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா? மாஃபியாக்கள் ஆட்சியா?

நக்கீரன் இதழின் முதன்மை சிறப்பு நிருபர் தாமோதரன் பிரகாஷ், நக்கீரன்  புகைப்படக் கலைஞர் அஜித்குமார் மீது சமூக விரோதிகள் தாக்குதல்

நக்கீரன் நிருபர்களை தாக்கிய, தூண்டிவிட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யவேண்டும்! தமிழக அரசுக்கு தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தல்

நக்கீரன் இதழின் முதன்மை சிறப்பு  நிருபர் தாமோதரன் பிரகாஷ்  இன்று (19-09-2022) திங்கள் கிழமை கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி ஸ்ரீநிதி இறப்பு  பிரச்சனை தொடர்பாக தகவல்களை சேகரித்து விட்டு சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

தலைவாசல் அருகே நக்கீரன் இதழின் முதன்மை சிறப்பு  நிருபர் தாமோதரன் பிரகாஷ்  சென்ற காரை பின்தொடர்ந்து வந்த  சமூக விரோத கும்பல் அவர் சென்ற கார்மீதும் ,
தாமோதரன் பிரகாஷ் மற்றும் புகைப்படக் கலைஞர் அஜித்குமார் ஆகியோர் மீதும் கடும் கொலைவெறி தாக்குதலை நடத்தியுள்ளனர்.

*சமூக விரோத கும்பலால் தாக்குதலுக்கு ஆளான நக்கீரன் இதழின் முதன்மை சிறப்பு  நிருபர் தாமோதரன் பிரகாஷ் ,புகைப்படக் கலைஞர் அஜித்குமார் இருவரும்  ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.தமிழ்நாட்டில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா?
மாஃபியாக்கள் ஆட்சியா? என்பது தெரியாத அளவிற்கு வன்முறை சம்பவங்கள் நடந்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் காவல்துறையோ எதுவுமே நடக்காதது போல் இருப்பதால் குற்றம் பெருகிறதே தவிர குறைந்தபாடில்லை. 5 நபர்களை காவல்துறை கைது செய்த போதிலும் முழு உண்மையை வெளியே கொண்டு வரவேண்டும்.

நக்கீரன் பத்திரிக்கை நிருபர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

இரா.சா‌.முகிலன்,
ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம்