சுதந்திரத்தை பறிக்கும் முதலாளித்துவமும் அடிப்பணிந்து தேசியக்கொடியை வியாபாரமாக்கும் மோடி அரசும்- அஸ்வினி கலைச்செல்வன்

சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுதோறும் தேசியக் கொடியை ஏற்ற வேண்டுமென மோடி தலைமையிலான ஒன்றிய அரசு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தது. சுதந்திர தினம் பற்றி அறியா மூடர் கூடமாக திகழும் சாவர்க்கர் கூட்டம், தியாக உணர்வற்ற, சுதந்திர உணர்வுமற்ற ஒன்றிய அரசு, அதன் பின்னான போராட்டங்கள் பற்றிய புரிதலுமின்றி, பொதுமக்கள் அனைவரையும் சுதந்திர தினத்தைக் கொடியேற்றி கொண்டாட வேண்டும் என்ற அழைப்போடு பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள், குடியிருப்பு பகுதிகள் என உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் அனைத்து இடங்களிலும் இலவசமாக தேசிய கொடிகளை வழங்கி வருகிறது.மேயர், கவுன்சிலர், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சித் தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், செயல் அலுவலர்கள் என அரசு தரப்பிலிருந்தும் தேசியக்கொடி விநியோகம் நடைபெற்று வருகிறது.

ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்களான வங்கி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் அரசு ஊழியர்களின் வருவாயிலிருந்து ரூபாய் 50 கட்டாய பிடித்தம் செய்யப்பட்டு தேசியக் கொடி நாடு முழுதும் வழங்கப்பட்டு வருகிறது. சுதந்திர இந்தியாவில் வலுக்கட்டாயமாக இதுவரை இல்லாத புது புரட்சியை உருவாக்கி விட்டதாக எண்ணி செய்யும் மூட தனத்தில் வியாபார நோக்கமும், முதலாளித்துவ அடிமைகள் கீழ் நாடு சென்று விட்டதையும் அப்பட்டமாக காட்டும் விதமாக சீனாவிலிருந்து அரசால் அங்கீகரிக்கப்பட்ட ரிலையன்ஸ் நிறுவனத்தால் லினன் துணியால் ஆன மூவர்ண கொடியை தயாரித்து வழங்கி வருவது குறிப்பிடதக்கது.
இதுவரை கதரால் ஆன மூவர்ண கொடியை பயன்படுத்தி வந்ததன் காரணம் தெரியாத காந்தியை சுட்டு கொன்ற இக்கூட்டம் திட்டமிட்டு மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகளில் தன்னை மறைத்து கொண்டு தேசப்பக்திமிகு கூட்டமாகவே வெளிப்படுத்த முற்படுகிறது. பிரிட்டிஷ் காலனிய அரசால் 100 ஆண்டுகாலமாக அடிமைப்பட்டு கிடந்த இந்திய நாட்டின் வளங்களை கொள்ளை கொண்டது போலவே உழைப்பும் உற்பத்தி பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டன. அதில் மிக முக்கியமானது ராட்டைகளால் நெய்யப்பட்ட கதர் ஆடைகள். ஆதிக்க நாட்டவர்களால் உற்பத்தி செய்யப்பட்ட லினன், பாலிஸ்டர் துணிகள் அதிக வெப்பநிலை கொண்ட நாடுகளுக்கு உகந்ததல்ல. குளிர், வெப்பம் என அனைத்து தட்பவெப்ப நிலைக்கும் ஏற்ற உடையாகவும் எடை குறைவாகவும், உடுத்துவதற்குமேற்ற கதர் ஆடைகளை பார்த்து வியந்த காலனிய அரசு சூழ்ச்சியின் காரணமாக கதர் ஆடைகளை உடுத்தவும், உற்பத்தி செய்யவும் தடை விதித்தது. கட்டாயத்தின் பேரில் லினன் ஆடைகளை இறக்குமதி செய்தது மட்டுமன்றி தறி ராட்டைகளை இயக்கவும் மீறினால் கட்டை விரலை வெட்டவும் சட்டமியற்றியது. இச்சம்பவத்தை தொடர்ந்தே காந்தி போன்றோர் கதர் ஆடை அணிந்து ராட்டையை சுற்றி அறவழி போராட்டத்தில் ஈடுபட்டார். சுதந்திர போராட்டங்களில் மறைக்கப்பட்ட வரலாற்றில் இதுவும் ஒன்றே.அப்படிப்பட்ட தியாக வரலாற்றை நினைவுகூறும் விதமாகவே கதர் துணியாலான தேசிய கொடியை ஏற்றி மரியாதை செய்து வந்த அரசு, புதுவிதமாக இந்தியர்களின் இச்சுதந்திர தியாகத்தை அச்சுதந்திர தினத்திலேருந்து மழுங்கடிக்க பாலியஸ்டர் துணியால் செய்யப்பட்ட தேசியக்கொடிகளை இலவசமாக வழங்கி பயன்படுத்த செய்வது, அயோக்கியத்தனம்.

பாலியஸ்டர் துணிகளால் செய்யப்பட்ட தேசியக் கொடியை இச்சுதந்திர தினத்தில் பயன்படுத்த அனுமதியளித்திருப்பது தேசபக்தியால் என்று பொதுமக்கள் நினைத்தால் நிச்சயமான முட்டாள்தனம்.

கடந்த ஜூலை, இயந்திரத்தால் அல்லது பாலிஸ்டர் துணியால் தயாரிக்கப்பட்ட தேசியக் கொடிகளின் விற்பனைக்கு சரக்கு மற்றும் சேவை (ஜிஎஸ்டி) வரியில் இருந்து விலக்கு அளிப்பதாக நிதியமைச்சகம் அறிவித்தது. இதற்கு முன்பாக, பருத்தி, பட்டு, கம்பளி அல்லது காதி துணியால் செய்யப்பட்ட தேசியக் கொடிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது. தற்போது பாலிஸ்டர் மற்றும் இயந்திரத்தால் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் தேசியக் கொடிக்கும் ஜிஎஸ்டி-க்கும் விலக்கு அளித்துள்ளது. பாலிஸ்டர், ஃபைபர் மற்றும் நூல் உற்பத்தியில் ஆண்டுக்கு 2.5 மில்லியன் டன் திறன் கொண்டு உலகிலேயே மிகப்பெரிய நிறுவனமாக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு இத்தகைய ஆர்டர்களை அளித்து, ஏழைக்கு விதிவிலக்கும் அளித்துள்ளது.டி.எம்.சி (TMC) தலைவரும் ஆர்.டி.ஐ (RTI) ஆர்வலருமான சாகேத் கோகலே இந்த முழு திட்டத்தையும் ஓர் ‘ஊழல்’ என்று குறிப்பிட்டுள்ளார். இக்காரணத்தை சுட்டிக்காட்டும் அசாமின் ஏஐயுடிஎஃப் தலைவர் அமினுல் இஸ்லாம், மோதி அரசின் இந்த இயக்கத்தை ஒரு ‘முரண்பாடு’ என்று அழைக்கிறார்.

தேசபக்தி என்பதை மூலதனமாக்கி தேசியக்கொடி விற்பனையின் மூலம் மிகப்பெரிய வியாபாரத்தை நடத்தி முதலாளித்துவ ஜால்ராவாக செயல்படும் பாசிச அரசு, அம்பானி அதானிகளின் கைக்கூலியாக இருப்பது யாருடைய நலனுக்காக என்பதை இந்தியர்கள் சிந்திக்க வேண்டும். தனியார் துறை வளர்ச்சியும், பொது துறை நிறுவனங்களின் வீழ்ச்சியும் முதலாளித்துவ சார்பு அரசால் நாட்டின் வளங்கள் கொள்ளை போனது போலவே இன்றும் சுரண்டப்படுகிறோம் என்றறியப்படாமலேயே நரி தந்திரமாக பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டு வருகிற சூழலில் முதலாளித்துவ வர்க்கத்தின் கீழ் அடிமையாக்கப்படுகிற கொடுமை நிகழ்ந்து வருகிறது.

தேச விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுக்காத கூட்டம், தேச விடுதலைப் போராட்டத்தை காட்டிக் கொடுத்து, மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்து, தேசப்பிதா மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்று, 1998 வரை தங்களது கட்சி அலுவலகங்களில் கூட தேசியக்கொடியை ஏற்றாத, இன்று வரை தேசிய கொடியால் முகம் துடைத்து, இதே பாசிச பாஜக நிர்வாகிகள் காந்தியின் திருவுருவ படத்தை சுட்டும் வெறி தீரா கூட்டம்,இந்நாள் வரை தேசியக்கொடியை ஏற்றுக் கொள்ளாத தேச துரோகி சாவர்க்கரின் வாரிசுகள் தேச பக்தியின் பெயராலே வலைவிரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

வர்க்கப் போராட்டமே நிரந்தர தீர்வு

சூழ்ச்சி நிறைந்த மதவெறி பாசிச சக்திகளிடமிருந்து தேசத்தை மீட்போம்!சுதந்திரம் பாதுகாப்போம்!!

அஸ்வினி கலைச்செல்வன்