எதிர்க்கட்சிகள் மீது அமலாக்கத்துறையை ஏவும் மோடி.

இன்று பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் முக்கிய புள்ளிகளிடம் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனை தொடர்ந்து சினிமா பைனான்சியர், அன்புச்செழியன் தொடர்புடைய 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

தர்பார் நஷ்டமும்.. ரஜினி கோபமும்.. அன்புச்செழியன் வீட்டில் நடந்த ரெய்டுக்கு  இப்படி ஒரு பின்னணியா? | Darbar may be the reason behind Income Tax Raid in  financier Anbu ...

இன்றைய தமிழ் சினிமா உலகில் பிரபலமானவர் அன்புச்செழியன். இவர் தமிழ் சினிமா தயாரிப்பு மற்றும் சினிமாவுக்கான பைனான்சியராக, பெரிய ஜாம்பவானாக இருந்து வருகிறார். இவர் தமிழ் சினிமாவில் நூற்றுக்கணக்கான படங்களை எடுத்ததும் இல்லாமல், படங்களை வெளியீடு செய்வது, தமிழ் சினிமாவுக்கு முதலீடு செய்வது என தமிழ் சினிமாவையே பிரதான தொழிலாக செய்து வருகிறார் அன்புச்செழியன். தற்போது இவருக்கு சொந்தமான மதுரை மற்றும் சென்னை வீடுகள், அலுவலகங்கள் மற்றும் திரையரங்குகள் ஆகிய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். வருமானவரித்துறையினர் காலை 6 மணிமுதல் கிட்டத்தட்ட 40க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். இவர் வருமான வரியில் முறைகேடு செய்யப்பட்டதாக, கடந்த 2015, 2018 மற்றும் 2020ம் ஆண்டுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த 2020ம் ஆண்டில் நடந்த வருமான வரித்துறை சோதனையின்போது 300 கோடி ருபாய், கணக்கில் வராத வருமானம் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் 77 கோடி ருபாய் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது மதுரையில், காமராஜர் சாலையில் உள்ள அவரது பண்ணை வீட்டில் மற்றும் மதுரை கீரத்துறையில் உள்ள மற்றொரு இல்லத்திலும், மதுரை தெற்கு வாசல் வீதியில் உள்ள அவரது அலுவலகங்கள், அதேபோல் மதுரை செல்லூர் பகுதியில் உள்ள “கோபுரம் சினிமா” போன்ற இடங்களில் வருமான வரித்துறையினர் அதிகாலையில் இருந்து சோதனை நடத்தி வந்தனர். இந்த சோதனையானது இவர் எந்தெந்த படத்திற்கு எவ்வளவு முதலீடு செய்துள்ளார். எத்தனை படங்களை எடுத்துள்ளார், இதில் எவ்வளவு வருமானங்களை ஈட்டியுள்ளார் என்பதை முதற்கட்ட சோதனையாக நடத்தி வந்தனர். அதில் எந்த அளவுக்கு வருமானவரி முறைகேடு செய்துள்ளார் என்பதற்கான ஆய்வுகள் நடத்தப்படுகின்றன.

ஏற்கனவே, சோனியா காந்தி, ராகுல் காந்தி தொடர்புடைய National Herald நிறுவனத்தின் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

பண மோசடி வழக்கில் விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், National Herald Delhi அலுவலகத்தில் இந்த சோதனையை அமலாக்கத்துறையினர் நடத்தி வருகின்றனர். National Herald பணமோசடி புகாரில், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறார்கள். இதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் தங்கள் போராட்டங்கள் மூலம் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இதனை தொடர்ந்தும் விசாரணை நடந்து வருகிறது.

National Herald Case Explained: Why are Gandhis under scanner?

இந்த National Herald விவகாரத்தில், ஆதாரங்கள், ஆவணங்கள் ஆகியவற்றை சேகரித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருப்பதாக சொல்லி வருகிறார்கள்.

Delhi உள்ளிட்ட நகரங்களிலே, National Herald நிறுவனத்திற்கு பல்வேறு சொத்துக்க்கள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் சோதனைசெய்து முறைகேடுகளை மேலும் ஆதாரத்துடன் வெளிகொணரவேண்டும் என அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகிறார்கள். ஏற்கனவே மல்லிகா அர்ஜுன் கார்க்கே உள்ளிட்ட பல்வேறு காங்கிரஸ் தலைவர்களிடமும் விசாரணை நடந்தது குறிப்பிடத்தக்கது, தற்போது அமலாக்கத்துறை அடுத்தகட்ட விசாரணையையும் நடத்தி வருகின்றது.

Modi takes on Gandhis on Rahul's turf, accuses Sonia of practising  'politics of anger' | Political Pulse News,The Indian Express

மத்திய அரசு தொடர்ச்சியாக இது போன்று வருமானவரி ஆய்வுகளை நடத்துவது தனது எதிரிகளை அச்சுறுத்துவதற்காகவே என்பது நாம் கவனிக்க வேண்டிய முக்கிய விடயம்.