பீகார் (பாட்னாவில்) நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் அமித்ஷா “இன்றைய பிரதமர் மோடி தான், அடுத்த 2024ம் ஆண்டுக்கான பிரதமரும் அவரே! என்று அமித்ஷா பேச்சு.

பாஜக முக்கிய தலைவர்களில் ஒருவரும் உள் துறை அமைச்சருமான அமித் ஷா இரண்டு நாட்கள் பயணமாகப் பீகார் மாநிலத்திற்குச் சென்று உள்ளார். இதனிடையே பாட்னாவில் நடைபெற்ற இரண்டு நாள் கூட்டுத் தேசிய செயற்குழு கூட்டத்தின் நிறைவு அமர்வில், அமைச்சர் அமித் ஷா தலைமையில் நேற்று நடைபெற்றது. அமித் ஷா தலித்துகள், பழங்குடியினர், ஓபிசி பிரிவினர் என நலிவடைந்த பிரிவினரை முன்னேற்றப் பிரமதர் மோடி முன்னெடுத்துள்ள திட்டங்கள் தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு அமைச்சர் அமித் ஷா பாஜக தொண்டர்களிடம் கேட்டுக் கொண்டார். அமித் ஷா அந்தக் கூட்டத்தில் பேசினதை குறித்து பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் ஊடகங்களிடம் பகிர்ந்து கொண்டதாவது,

2024 தேர்தலுக்கும் தயாராக வேண்டும் என அவர் வலியுறுத்தினார். தொடர்ந்து மூன்றாவது முறையாகப் பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வரத் தேவையான பணிகளை இப்போதே தொடங்க வேண்டும் என அமித்ஷா தொண்டர்களிடம் கேட்டுக் கொண்டார். மோடி தான் பிரதமர் வேட்பாளர், பீகாரில் 2024 லோக்சபா மற்றும் 2025 சட்டசபைத் தேர்தல்களில் பாஜகவும், JD(U) (ஜேடியு) கட்சியும் இணைந்து போட்டியிடும். இதில் யாருக்கும் எவ்வித சந்தேகமும் வேண்டாம். 2024 தேர்தலைப் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் தான் எதிர்கொள்வோம். அவர் மீண்டும் நாட்டின் பிரதமராக வருவார். 2024 மற்றும் 2025 இல் பீகாரில் ஒன்றாகத் தேர்தலைச் சந்திக்க முடிவு செய்துள்ளோம், அதிலும் கடந்த முறை இருந்ததை விட அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கு தொண்டர்களிடம் அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. தலித்துகள், பழங்குடியினர், ஓபிசி பிரிவினருக்கு அரசு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து உள்ளது. இந்தப் பிரிவினருக்கு அமைச்சரவையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகபட்ச முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது. கிராமங்களில் இருந்து வந்தவர்களுக்கும் அதிக இடம் வழங்கப்பட்டு உள்ளதாக அமித் ஷா குறிப்பிட்டார்.பிரதமர் மோடிக்கு நன்றி சொல்ல வேண்டும். பிரதமர் மோடியால் தான் உரிமை மறுக்கப்படுபவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. அனைத்து தரப்பினரையும் பிரதிநிதித்துவம் படுத்த வேண்டும் என்பதே மோடியின் நோக்கம். பழங்குடியினத்தை சேர்ந்த ஒரு பெண் நாட்டின் உட்சபட்ச பதவிக்குச் சென்றுள்ளார். இதற்கெல்லாம் நாம் பிரதமர் மோடிக்கு நன்றி கூற வேண்டும் என அமித் ஷா பேசினார்” என்றார் பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் ஊடகங்களில் இது குறித்து பேசியுள்ளார்.