ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதல் – அதிர்ந்து போன உக்ரைன் மக்கள்

உக்ரேன் நாட்டு நேரப்படி வெள்ளிக்கிழமை காலை 4 மணிக்கு, (இந்திய நேரப்படி இன்று காலை 7.30 மணிக்கு) ஏவுகனை தாக்குதல் தொடங்கியது என்று அந்நாட்டின் அதிபர் ஸெலன்ஸ்கி தெரிவித்தார்.

இன்று காலை தலைநகர்
கீவில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக இதில் குடியிருப்பு ஒன்றிலும் தாக்குதல் நிகழ்ந்ததாக செய்தி வெளியாகி உள்ளன.

ரஷ்யா குறிப்பிட்டு ராணுவம் மீதும் பொதுமக்கள் தங்கியுள்ள தளங்கள் மீதும் குறிவைத்து தாக்குவதாக அந்நாட்டு ஜனாதிபதி செலஸ்கின் குற்றம் சாட்டியுள்ளார்.

இதனை அடுத்து அவர் தனது உரையில் உக்ரைனுக்கு உதவ வேண்டும் எனவும் ரஷ்யாவின் கொடுமையான தாக்குதலை நிறுத்த வேண்டும் எனவும் மேற்கு நாடுகளை கேட்டுக் கொண்டார். தங்கள் தேசத்தை பாதுகாப்பதில் தாங்கள் தனித்து விடப்பட்டுள்ளோம் உலகின் மிகவும் சக்திவாய்ந்த படைகள் இதனை தொலைவிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கின்றன என்று அவர் வருத்தம் தெரிவித்தார்.