மின் பற்றாக்குறையும் இந்திய பொருளாதாரமும்- பார்த்திபன்.ப

இந்த நான்கு பெரிய தெர்மல் மின் நிலையங்களை அதன் முழு உற்பத்தி திறனில் இயக்குவதற்கு ஒரு நாளைய நிலக்கரி தேவை சுமார் 60000 டன்கள். ஆனால் தற்பொழுது அதில் சரிபாதி வரத்து குறைந்துள்ளதால் இந்த மின் தட்டுப்பாடு என்க.

  1. Ennore Thermal Power Station (ETPS) – 450 MW (2×60, 3×110
    MW)

2.Mettur Thermal Power Station (MTPS) – 1440 MW (4×210, 1×600
MW)

  1. North Chennai Thermal Power Station (NCTPS) 1830 MW (3×210
    MW, 2×600 MW)
  2. Tuticorin Thermal Power Station (TTPS) – 1050 MW (5×210 MW)

மேற்கு வங்காளம், மத்தியபிரதேசம், ஒடிசா, பீஹார், சத்தீஸ்கர், ஜார்கண்ட், தெலுங்கானா, ஆந்திரா, மஹாராஷ்டிரா, சிக்கிம், நாகலாந்து, மேகாலயா மற்றும் உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் சுமார் ஒன்னரை கிலோமீட்டர் ஆழம் கொண்ட திறந்தவெளி நிலக்கரி சுரங்கங்கள் உள்ளன. 1 ஏப்ரல் 2018 ன் படி இந்த சுரங்கங்களின் மொத்த நிலக்கரி இருப்பு சுமார் 3200 கோடி டன்கள் என்று Coal India Limited(CIL) தெரிவிக்கிறது. இந்த சுரங்கங்களின் மூலம் இந்தியா ஆண்டொன்றிற்கு சுமார் 7200 இலச்சம் டன்கள் நிலக்கரியை வெட்டி எடுக்கின்றன. ஆனால் இந்தியாவின் தேவை 1 பில்லியன் டன்கள்(100 கோடி டன்கள்) எனும் நிலையில்; சுமார் பத்து இலட்சம் டன் ஆண்டொண்டிற்கு ஏற்றுமதி செய்து, சுமார் 18 கோடி டன்கள் நிலக்கரியை இறக்குமதி செய்துகொள்கிறது. இதனால் ஆண்டு முழுவதும் நிலக்கரி தட்டுப்பாடு இந்தியா முழுமைக்கும் இருந்துகொண்டேதான் இருக்கிறது.

காற்றாலை, சூரிய மின்சக்தி, மழைக்காலங்களில் நீர் மின்சக்தி மற்றும் நியூக்ளியர் மின்நிலையங்கள் என்று ஓரளவு மின்தேவையை சமாளித்து வருகிறது இதுதான் இந்தியாவின் நிலை. 2020 மற்றும் 2021ஆண்டுகளில் கொரோனவை காரணம் காட்டி மின்தேவைகள் குறைக்கப்பட்டதன் மூலம், இந்த பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்பட்டது. அனால் தற்பொழுது அனைத்து தொழில் நிறுவனங்கள், புதிய கட்டுமானங்கள், வர்த்தக நிறுவனங்கள், கல்வி மற்றும் கிராமப்புற மின் தேவை அதிகரித்துள்ளதால், இந்த நிலக்கரி போதவில்லை எனவே இந்த தட்டுப்பாடு.

இந்திய பொருளாதாரம் நம்முடைய நிலக்கரி தேவையை ஈடு செய்யும் அளவிற்கு வாங்கும்படி தற்பொழுது வளமாக இல்லை என்பதுடன், ஒருவேளை அப்படி வாங்கி சமாளிக்க இந்திய அரசு முடிவெடுக்குமெனில், இன்னும் ஒரே ஆண்டில் இந்தியா இலங்கையை விடவும் பத்து மடங்கு பாதித்து நடுத்தெருவுக்கு வந்துவிடுவது உறுதி!

நாம் முன்பே சொல்லி வந்துள்ளோம் ஒருநாள் இந்திய பொருளாதாரம் காலியாகி நம்மை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுமென்று….. அந்த நாள் மிக அருகில் வந்துவிட்டது போல் தெரிகிறது. காரணம் நம்மிடம் பொருளாதார பற்றாக்குறை இருப்பது ஒருபுறம் இருந்தாலும், சிறந்த பொருளாதார அறிஞர்கள் அமைச்சர்களாக இல்லை என்பதுதான் இன்றைய நிதர்சனம்!

இதையே சொல்லி மாநில அரசுகள் கை கழுவி ஒதுங்கிக்கொள்வதற்கு இல்லை, நிலைமையை சமாளித்தாகவேண்டும் என்று சொல்வோமானால்; அதற்கு சர்வதேச வங்கியில் கடன் வாங்குவதை தவிர நம்மிடம் எந்த யுக்தியும் இல்லை. ஒன்று வேண்டுமானால் சாத்தியம் அது என்னவெனில், இதுவரையில் எந்தெந்த அமைச்சர்கள் அரசு சொத்துக்களை திருடி நகை பணம் நிலம் தொழிற்சாலை பினாமி என்று மாற்றி வைத்துள்ளார்களோ, அதையெல்லாம் அரசு பறிமுதல் செய்து, அதை அரசு சொத்துக்களாக அறிவித்தால், இன்னும் நான்கு ஆண்டுகள் மின்பற்றாக்குறையை சமாளிக்கமுடியும். அதை எந்த அரசும் செய்யாது காரணம் உங்களுக்கே புரியும்.

பார்த்திபன் ப