“வறுமையிலும் கல்வியே நமக்கான ஆயுதம்”- சே.அஸ்வினி.

ஒரு சிற்றூரில் ஒரு சிறு குடும்பம் வாழ்ந்து வருகிறார்கள், வறுமையின் மூலம் தன் குடும்பத்தை நடத்தும் தந்தையின் நிலமையும் வறுமையின் மூலம் எப்படி முன்னேற்றம் அடைகிறார்கள் என்பதனை இக்கதை கூறுகின்றது.

தந்தைக்கு தினக்கூலி நாள் ஒன்றுக்கு ரூபாய் 200 வருமானம். தாய் செங்கல் சூளையிள் வேலை பார்ப்பவள். இவர்களுக்கு இரு குழந்தைகள் .முதல் குழந்தை ஆணாகவும், இரண்டாவது குழந்தை பெண்ணாகவும் பிறக்கின்றார்கள்.

இரு குழந்தைகளும் பள்ளியிள் படித்துக் கொண்டிருக்கிறார்கள், வீட்டில் ஒரு வேளை சாப்பிட்டால் மறு வேளை சாப்பாடு இருப்பது கடினம். பிள்ளைகளுக்கு வறுமையை சொல்லிகாட்டி தாயும் தந்தையும் வழி நடத்தி வருகிறார்கள். பிள்ளைகள் வளர வளர தந்தையின் வருமானம் போதுமானதாகயில்லை, பணம் இல்லாமல் ஒருநாள் மிகவும் கடினமான சூழ்நிலை ஏற்படுகின்றது, தாய்க்கு உடல்நிலை குறைபாடு ஏற்படுகின்றது. தந்தை மருத்துவமனையில் மனைவியை சேர்க்கிறார் தந்தையின் நிலமையை கண்ட மகன் இரவு நேரங்கலில் சுவரொட்டி ஒட்டும் பணிக்கு செல்கின்றான்.இரவு முழுவதும் வேலை செய்துவிட்டு தன் தந்தையிடம் பணம் கொடுக்க வேண்டும் என்று பணத்தை வாங்கி கொண்டு வீட்டிற்கு வருகின்றார் மகன். தந்தையிடம் பணத்தை கொடுக்கின்றார்.

தந்தை மனம் கலங்கி நின்றார். தன் மகன் எப்படி வருமானம் ஈட்டினான் என்பதை நினைத்து மனம் வருந்துகிறார் தந்தை . “உடனே மகன் கூறுகின்றான் பகல் முழுவதும் வேலை செய்துவிட்டு மீண்டும் இரவு முழுவதும் உணவகந்தில் இலை எடுக்கும் வேலையை செய்து எனக்கு நான் கேட்ட புத்தகத்தை வாங்கி கொடுத்தீர் தந்தையே என்று மகன் மிகவும் வருந்தி கூறுகின்றான். .

5- ஆண்டுகளுக்குப் பிறகு சுவரொட்டி ஒட்டும் பணியை செய்து கொண்டிருந்த மகன் வரலாற்றைப் படைக்கும் எழுத்தாளரானான் அவள் தங்கை உதவி எழுத்தாளரானாள்.

உணவகத்தின் இலை எடுத்துக்கொண்டு இருந்த தன் தந்தைக்கு உணவகம் அமைத்து கொடுத்து தந்தையையும் தாயையும் அமர வைக்கின்றான்.

பணம் இல்லையென்று ஊரில் பணம், செல்வாக்கு வாய்ந்த செல்வந்தரிடம் வட்டிக்கு, தந்தை பணம் வாங்குகிறார். மூன்று மாதம் சரியாக வட்டி பணத்தை கட்ட முடிந்தது, அடுத்த இரண்டு மாதம் வட்டி கட்டவில்லை. இரவு நேரம் அனைவரும் உணவு அருந்தி கொண்டு இருக்கிறார்கள். வட்டி கொடுத்த நபர் தந்தையிடம் கோபத்துடன் வட்டி பணம் எங்கயா? என்று கேட்கின்றார். உடனே தந்தை சொல்கின்றார் ஒரு வாரத்தில் தந்துவிடுகிறேன். சொல்லிய உடன் அவர்கள் புறப்பட்டுப் போனார்கள் ” தந்தையின் நிலையையும் வறுமையின் கட்டமைப்பையும் உணர்ந்தார்கள்! பிள்ளைகள்

ஒரு வாரத்திற்குப் பிறகு மீண்டும் வட்டி கொடுத்த நபர் மிகுந்த கோபத்துடன் வட்டி பணம் எங்கே என்று கேட்கின்றார். தந்தை ஐயா நாளை காலை தந்துவிடுகின்றேன் என்றார் , இரவு முழுவதும் தந்தைக்கு தூக்கம் வரவில்லை சிறந்த எழுத்தாளருக்கான விருதினை பெறுவதற்கான விழாவிற்க தன் தந்தைக்கு வட்டி கொடுத்த நபருக்கு அழைப்பு விடுகின்றான். அவர் அவன் விருது வாங்கும் விழாவில் கலந்து கொள்கின்றார் ,

அவன் விருது வாங்குவதை பார்த்துவிட்டு மிகவும் மனம் களங்குகின்றார்
வட்டி கொடுத்த நபர்.

இக்கதையில் நாம் என்ன உணருகின்றோம் என்றாள் “கல்வியே நமக்கான மிகப்பெரிய ஆயுதம் என்பதையும் கல்வி வாயிலாக எதையும் சாதிக்க முடியும் என்பதையும்
உணர வேண்டும்”.

சே.அஸ்வினி