உக்ரைன் மீது 2வது நாளாக ரஷ்யா நடத்தும் போர்: உக்ரேன் தலைநகரில் குண்டுவெடிப்பு

நேற்று அதிகாலை தொடங்கி ரஷ்யா – உக்ரைன் எல்லைப் பகுதியில் கடுமையான ராணுவ தாக்குதல் நடைபெற்று வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ரஷ்ய ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியதோடு அல்லாமல் தரை வழியாகவும் முன்னேறி வருகிறது.

உக்ரைனில் இன்று இரண்டாவது நாளாக ரஷ்யாவின் ராணுவம் தாக்குதல் நடந்து வருகிறது. இந்த நிலையில், இன்று காலை அணு விபத்துத் தளத்தை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..

உக்ரைன் தலைநகர் கீயேவில் உள்ள டார்னிஸ்கி மாவட்டத்தில் ரஷ்ய ஜெட் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாக உக்ரைன் உள்துறை அமைச்சகத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இன்று அதிகாலையில் மத்திய கீயேவில் ஒரு பெரிய குண்டு வெடிப்பை கேட்டதாக நகரில் உள்ள சிஎன்என் குழு தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கி தன் நாட்டு மக்களுடன் காணொளி வாயிலாக இன்று காலை மீண்டும் உரையாற்றினார் அப்போது உக்ரைன் மற்றும் ரஷ்யா மொழிகளில் போரை முடிவுக்குக் கொண்டுவருமாறு ரஷ்யாவிடம் அவர் கேட்டுக்கொண்டார்.