அமெரிக்காவை வீழ்த்துவதற்கான சீனாவின் வியூகம் – 1

இந்த குறுந்தொடரின் தலைப்பை பார்த்து, சிலர் அமெரிக்காவை வீழ்த்தி சீனா முன்செல்லுமா என நினைக்கலாம்.

இதற்கான விடை சீனாவின் மூலோபாயத்தை ( strategy) ஆராய்ந்தால் கிடைக்கும்.

காரணம் சீனாவின் மூலோபாயத்தை ஆழமாக ஆராயப்போனால் நூலாக எழுதும் அளவிற்கு விடயங்கள் உள்ளன.

ஒரு நாடு வல்லாதிக்க நாடாக (great power) பரிணமிக்க விரும்புமாயின் , அதற்கு 2 காரணிகள் மிக அடிப்படையானது.

1 . பலமான பொருளாதாரம் ( economic strength)
2 . இராணுவ வலிமை ( military strength)

இந்த இரண்டையும் அடையாமல் ஒரு நாடு great power என்ற இடத்தை அடையமுடியாது.

இன்றைய உலக ஒழுங்கில் , மேற்கூறிய இரண்டு காரணிகளில் economic strength என்பது மிக முக்கியமானது.

military strength ஐ கட்டியெழுப்புவதற்கான அடிப்படை ஆதாரமே economic strength தான்.

இந்த புள்ளியை மையமாக வைத்தே சீனா காயை நகர்த்துகிறது. அது எப்படி என்பதை பிறகு விளக்குகிறேன்.

  1. சீனாவின் பொருளாதாரம்

இன்றைய உலகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ( Global GDP- nominal value) சீனாவின் பங்கு 15%. அமெரிக்காவின் பங்கு கிட்டத்தட்ட 25%.

ஆனால் PPP அளவுகோலின்படி 2014 லேயே , சீனாவின் GDP அமெரிக்காவின் GDP ஐ தாண்டியாகிவிட்டது.

அமெரிக்காவை விட நாலுமடங்கு அதிக சனத்தொகையுள்ள சீனாவின் பொருளாதாரம் பெரிதாகி கொண்டே போவது இயல்பானது. அடுத்துவரும் 20-30 வருடங்களில் சீனாவின் economic muscles அமெரிக்காவை விட பலமாவதை தடுக்கமுடியாது.

சரி. சீனா தனது முதல் காரணியை கிட்டதட்ட அடைந்துவிட்டது. ஆனால் பொருளாதார பலம் மட்டுமே great power ஆக மாறுவதற்கு போதுமானதா? கிடையாது.

அது அடிப்படை ஆதாரமே ஒழிய முழுமை அல்ல.

ஒரு நாடு emerging great power ஆக உருவாகும்போது ஏற்கனவே களத்தில் இருக்கும் great powers அதை அனுமதிக்காது.

அவர்கள் ஆட்டவிதிகளை மீறி ஆட்டத்தை ஆடுவார்கள். அப்படி ஆட்ட விதிகளை மீறுவதற்கான துணிவை அவர்களுக்கு தருவதே அவர்களின் military strength தான்.

ஏற்கனவே களத்தில் இருக்கும் great powers தங்களின் போரியல் மேலாண்மையை உறுதிபடுத்தும் விதமாக நகர்த்தியிருக்கும் நகர்வுகளை , emerging great power முறியடிக்க வேண்டும்.

அதற்கு முன் ஒரு விடயம். சீனா ஏற்கனவே great power தான். அதை எப்போதோ அடைந்தாகிவிட்டது. எளிமையாக புரியவைப்பதற்காக அதிலிருந்து தொடங்கினேன்.

சீனாவின் இன்றைய இலக்கு அமெரிக்காவின் superpower status அல்லது குறைந்தபட்சம் bipolar system. அதனால் சீனாவை emerging superpower என்றுதான் அழைக்கவேண்டும்.

containment policy ற்கு ஏற்ப அமெரிக்காவின் போரியல் காய்நகர்த்தலுக்கு எதிராக சீனா எத்தகைய போரியல் நகர்வை முன்னெடுக்கிறது என்பதையும் இரண்டாவது காரணிக்கான பந்தியில் இணைத்திருக்கிறேன்.

  1. சீனாவின் military strength

சீனாவின் போரியல்ரீதியான வியூகம் பலபக்கங்களை கொண்டது. இங்கே மிக சுருக்கமாக அதனை விவரிக்கிறேன்.

பின்னாட்களில் இந்த குறுந்தொடரில் தனி பதிவாக தருகிறேன்.

• சீனாவின் இராணுவ பலத்தை விரைவாக நவீன மயப்படுத்துதல் ( rapid modernization) .

The Chinese government is working to make its military stronger, more efficient, and more technologically advanced to become a top-tier force within 30 years.

அவர்களின் தலைவர் Xi Jinping வார்த்தைகளில் சொல்வதானால் “producing a ‘world class force’ that can dominate the Asia-Pacific and “fight and win” global wars by 2049”.

• ஆசிய-பசிபிக் கடல் பிராந்தியத்தில் இருக்கும் அமெரிக்காவின் இராணுவ பிரசன்னத்தை முற்றிலுமாக அகற்றுதல்(கீழே உள்ள படத்தில் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்களை காணலாம்).

emerging superpower ஆக வரவிருக்கும் நாடு முதலில் செய்யவேண்டியது இது.

தனது செல்வாக்கிற்கு உட்பட்ட பிராந்தியத்தில் ( sphere of influence) தனது கட்டுப்பாட்டை முழுமையாக நிறுவுதல் . இதற்கு தடையாக இருப்பது ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க இராணுவத்தின் தளங்கள். குறிப்பாக அமெரிக்காவின் கடற்படை.

உதாரணமாக third Taiwan strait crisis இல் நடந்ததை குறிப்பிடலாம். 1996 இல் தாய்வான் அதனது முதல் ஜனநாயக தேர்தலை நடத்த போவதாக அறிவித்தது .

தாய்வான் தனது இறையாண்மைக்குட்பட்ட நிலப்பகுதி என்பதை உணர்த்தும் விதமாக சீனா தாய்வான் கடல்பரப்பில் இராணுவ ஒத்திகையை அச்சுறுத்தும் விதமாக நடத்தியது.

அமெரிக்கா எதிர்நகர்வாக அதனது இரண்டு carrier strike group ( CSG) ஐ அந்த கடல் பிராந்தியத்திற்கு உடனே அனுப்பியது. அத்தோடு சீனா பின்வாங்க நேரிட்டது.

அன்று சீனாவின் கடற்படை பலவீனமாக இருந்தது. இன்று சீனா அதனது கடற்படையை மிக விரைவாக நவீனமயப்படுத்தி கொண்டிருக்கிறது.

Center for Strategic and International Studies (CSIS) பின்வருமாறு குறிப்பிடுகிறது.

‘New ships are being put to sea at an impressive rate. Between 2014 and 2018, China launched more submarines, warships, amphibious vessels, and auxiliaries than the number of ships currently serving in the individual navies of Germany, India, Spain, and the United Kingdom.

Eighteen ships were commissioned by China in 2016 alone and at least another 14 were added in 2017.

By comparison, the US Navy commissioned 5 ships in 2016 and 8 ships in 2017.

Should China continue to commission ships at a similar rate, it could have 430 surface ships and 100 submarines within the next 15 years.’

ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்கா அதனது Power Projection ஐ செயல்படுத்துவதற்கு ஆதாரமாக இருப்பது அதனது Carrier Strike Group ( CSG).

அமெரிக்காவினுடைய இந்த போரியல் மேலாண்மையை உடைக்க, சீனா தனக்கான Aircraft Carrier களின் எண்ணிக்கையை அதிகரிக்க அவைகளின் கட்டுமானத்தை விரைவுபடுத்தியிருக்கிறது.

• அத்துடன் தனது செல்வாக்குட்பட்ட கடற்பிராந்தியத்தில் அமெரிக்க கடற்படையின் பிரசன்னத்தை முற்றிலுமாக அகற்ற Anti-Access/Area Denial (A2/AD) எனும் military strategy ஐ கையாளுகிறது.

அது என்ன A2/AD?

Anti-Access (A2) of enemy military movement into an area of operations – utilizes attack aircraft, warships, and specialized ballistic and cruise missiles designed to strike key targets.

Area Denial (AD)– denial of enemy freedom of action in areas under friendly control – employs more defensive means such as air and sea defense systems.

தனது A2/AD ஐ நடைமுறைப்படுத்த Aircraft Carriers களை தாக்கியழிக்ககூடிய Anti Ship Ballistic Missile (ASBM) களை உருவாக்கி வைத்திருக்கிறது.

ஒரு ASBM எவ்வளவு தூரம் ஒரு aircraft carrier ஐ வெற்றிகரமாக அழித்தொழிக்கும் என்பதை இதுவரை போர்களங்களில் யாரும் பரீட்சித்தது இல்லை.

சீனா மட்டுமே இதுவரை ASBM ஐ operational நிலையில் வைத்திருக்கும் ஒரே நாடு.

பெரும்பாலான இராணுவ தொழில்நுட்ப வல்லுனர்களும் இந்த ASBM அமெரிக்காவின் Aircraft Carrier களுக்கு பலத்த அச்சுறுத்தலாக இருக்கும் என்பதை ஒப்புக்கொள்கிறார்கள்.

இந்த போரியல் நகர்வெல்லாம் உண்மையிலேயே போர் நடக்கும் என்பதற்கான அர்த்தமா?

நிச்சயம் இல்லை.

• #நவீன அரசுகளின் போரியல் அணுகுமுறை

ஒரு போரை நடத்தி அதில் வெற்றி பெற்றால், அந்த போர் வெற்றியின் ஊடாக எந்த பலன்கள் கிடைக்குமோ அந்த பலன்களை போரியல் நகர்வினூடாக பெறுவதுதான் இன்றைய great power களின் போரியல் அணுகுமுறை.

இந்த போரியல் நகர்வை ஏன் இன்றைய great powers கடைப்பிடிக்க வேண்டிய தேவை இருக்கிறது என்பதை தனியாக விளக்குகிறேன்.

உதாரணத்திற்கு ஒருவேளை சீனாவின் ASBM அமெரிக்காவின் ஒரு Aircraft Carrier ஐ முற்றாக மூழ்கடிக்கக்கூடிய தொழில்நுட்பத்தை கொண்டிருக்குமானால், அமெரிக்கா அந்த இராணுவ வள இழப்பை தவிர்க்கவே முயலும்.

ஒரு Aircraft Carrier இல் இருக்கும் 5000 இற்கும் மேற்பட்ட கடற்படை வீரர்களையும் சுமார் 60 இற்கு மேற்பட்ட போர் விமானங்களையும் இழப்பது சாதாரண விடயமல்ல. இது ஒரு சிறு உதாரணம் மட்டுமே.

ஏனெனில் இங்கு அமெரிக்கா எனும் நாட்டின் இருப்பு (survival) கேள்விக்கு உள்ளாக்கப்படவில்லை.

ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் உள்ள அதனது பிரசன்னமே (presence) கேள்விக்கு உள்ளாக்கப்படுகிறது. அதற்காக அமெரிக்கா பெரிய இராணுவ வள இழப்பை கொடுக்கமுடியாது.

அத்துடன் இதற்கு பதிலடியாக அமெரிக்கா அணு ஆயுதத்தை எடுக்கமுடியாது.

காரணம் சீனாவும் அணு ஆயுத நாடு.

இரு நாடுகள் அணு ஆயுதத்தை கொண்டிருந்தால் அதன் போரியல் சமன்பாடு வேறு என்பதை தனி பதிவாக விளக்கியிருந்தேன். #இதன் இணைப்பு பின்னூட்டத்தில் தந்திருக்கிறேன்.

ஆக சீனா தொடர்ச்சியாக தனது இராணுவ வலிமையை உறுதிபடுத்தினால், காலவோட்டத்தில் ஆசிய பசுபிக் பிராந்தியத்திலிருந்து அமெரிக்கா படிப்படியாக விலகவேண்டிய நிர்ப்பந்தம் உருவாகும்.

இதைத்தான் போர் நடத்தாமலேயே போர் வெற்றியின் பலன்களை அடையும் வகையிலான போரியல் அணுகுமுறை என கூறினேன்.

இது சீனாவிற்கு என்று மட்டுமல்ல. எந்த நாட்டிற்கும் பொருந்தும்.

க.ஜெயகாந்த்

https://m.facebook.com/story.php?story_fbid=107223275437601&id=100084497853103&m_entstream_source=timeline