ரஷ்யாவின் நாணயமான ரூபிள், என்றுமில்லாதவாறு பெறுமதியில் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக உலகநாடுகள் பலவற்றின் நாணயங்களின் பெறுமதி வீழ்ந்துவரும் நிலையில், அமெரிக்கா மற்றும் நேட்டோவின் எதிர்பார்ப்புக்களை உடைத்து ரஷ்ய ரூபிளின் பெறுமதி அதிகரித்திருப்பதாகவும், உக்ரைன் மீதான இராணுவ நடவடிக்கையை காரணங்காட்டி, ரஷ்யாவை பொருளாதார ரீதியிலும், இராணுவ ரீதியிலும் மண்டியிட வைக்க எடுக்கப்பட்ட பாரிய முயற்சிகள் ஒவ்வொன்றாக தோல்வியடையும் நிலையில் ரூபிளின் பெறுமதி அதிகரிப்பானது அமெரிக்காவுக்கும், நேட்டோவுக்கும் பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. உக்ரைன் மீதானContinue Reading

ரஷ்யா உக்ரைனை அச்சுறுத்தத்தான் போரை துவங்கியது. ரஷ்யா , சீனா , அமெரிக்கா, வடகொரியா நாடுகளிடம் இருக்கும் அணுஆயுதங்களை பயன்படுத்த ஆரம்பித்தால் ,பூமி என்ற ஒரு கிரகமே இருக்காது என்பது உலகறிந்த உண்மை. அதனால் அனைத்து நாடுகளும் சில நாட்கள் அல்லது வாரங்களில் அடங்கிவிடும் என்றே கருதி இருந்தேன். இப்போது இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் நிலைமை மோசமாகி கொண்டே போகிறதே அல்லாமல் தீர்க்கப்படுவதாய் தெரியவில்லை. ரஷ்யா,உக்ரைன் பொது மக்கள் மீதுContinue Reading

உக்ரைனில் நடக்கும் அழிவுகளுக்கு உலகம் பொறுப்பேற்க வேண்டும்,இதற்கு மேல் இழப்பதற்கு என்னிடம் உயிர்களும் இல்லை, உணர்வுகளும் இல்லை, இதற்கு மேல் எந்தவித ராஜதந்திர நகர்வுகளின் மீதும் எனக்கு நம்பிக்கை இல்லை, என் நாட்டின் மீது அழிவை திணிக்கும் எந்த அனுசரணைகளும் தேவையில்லை, எதற்கும் உதவாத ஐ.நா மன்றம் கலைக்கப்பட வேண்டும் என நிதர்சனத்திற்கு இறங்கி வந்திருக்கிறார் உக்ரைனிய அதிபர் செலன்ஸ்கி. ரஷ்யா இக்கட்டான சூழலில் சிக்கியிருப்பதென்பதாக பலர் ஆனந்த கூத்தாடுகின்றனர்.Continue Reading

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு ஒரு புதிய உலக ஒழுங்கை நிறுவியது போல் இருந்தது – இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, சர்வதேச ஒப்பந்தங்களில் ஒன்றான ஹெல்சின்கி ஒப்பந்தங்கள் (Helsinki Accords) மற்றும் சோவியத் ஒன்றியத்தின் சரிவு போன்ற நிகழ்வுகளால் உருவாக்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டப் பாதுகாப்புக் கட்டமைப்பு என்பது தகர்க்கப்பட்டது. அந்த உலக ஒழுங்கு அமெரிக்காவின் இராணுவ மற்றும் பொருளாதார வலிமையால் கட்டமைக்கப்பட்டு இயக்கப்பட்டது. அமெரிக்காவின் நட்பு நாடான ஒரு ஐரோப்பியContinue Reading

ரஷ்யாவிற்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டபோது, உலக நாடுகள் ஏன் மேற்கத்திய தேசங்களை ஆதரித்து ஒற்றைக் குடையில் அணி திரளவில்லை? ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர், தைவான் போன்ற சிறிய தேசங்கள் கூட பக்கச்சார்புடன் அணிதிரளும் போது இலத்தீன் அமெரிக்கா, ஆப்ரிக்கா, ஆசியா போன்ற பெரிய பகுதியிலிருந்து ஒரு சிறிய முனகல் கூட கேட்காதது வருத்தமளிக்கவில்லையா? ஏன் இப்படி? இறையாண்மை மிக்க உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் போர்தொடுத்தபோது, மொத்தமுள்ளContinue Reading

மனித வரலாற்றில் பல நூற்றாண்டுகளாக பூமிதான் இந்த பிரபஞ்சத்தின் மையமாக கருதப்பட்டு வந்தது. நாம் வானில் பார்க்கும் அனைத்து நட்சத்திரங்கள், கோள்கள் என அனைத்தும் பூமியை சுற்றி வருவதாக கருதப்பட்டு வந்தது. இந்த கருத்து கடந்த நான்கு நூற்றாண்டுகளில் மாற்றி அமைக்கப்பட்டுவிட்டது.பூமி ஒரு சாதாரண கோள் என்றும் அது மற்ற அனைத்து கிரகங்களைப் போலசூரியனை சுற்றி வருகிறது என்றும் நாம் வானில் பார்க்கும் அனைத்துநட்சத்திரங்களும் ஒரு சூரியன் என்று நிறுவப்பட்டது.Continue Reading

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவிக்கு ஆபத்து. பொருளாதார நெருக்கடி, கடன்சுமை என இரட்டை கத்திகள் தன் பதவியை பறிக்க தயாராகி வரும் சூழலில் இந்தியா குறித்து வெளிப்படையாக பாராட்டிப் பேசியிருக்கிறார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்.அரசை முறையாக வழிநடத்த தெரியவில்லை எனக் கோரி, எதிர்க்கட்சிகள் கொண்டு வரும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெள்ளிக்கிழமை விவாதத்திற்கு வருகிறது. கூட்டணியில் உள்ள மூன்று கட்சிகள் வெளியேற முடிவெடுத்து விட்டனர். அதோடு இம்ரானின் சொந்தக் கட்சியானContinue Reading

மரியுபோல் நகரத்திலுள்ள உக்ரைன் வீரர்கள் சரணடைந்து விட்டு வெள்ளைக் கொடியை உயர்த்தினால் தப்பிக்க வழி செய்வதாக ரஷ்யா கூறி இருக்கிறது. ஆனால் அதற்கு உக்ரைன் திட்டவட்டமாக மறுத்துவிட்டது. உக்ரைனில் முக்கிய நகரங்களில் ஒன்றான மரியுபோலை கைப்பற்ற ரஷ்ய படைகள் தீவிர தாக்குதல் நடத்திவருகின்றனர். உக்ரைனை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு, மரியுபோலை கைப்பற்றுவது ரஷ்யாவிற்கு வியூக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்நிலையில் ரஷ்ய படைகள் அந்நகரத்தை சுற்றி வளைத்துContinue Reading

உக்ரைன் தலைநகர் கீவ் இன் புறநகர் பகுதியை ரஷ்ய படைகளிடம் இருந்து மீட்டு இருப்பதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்திருக்கிறது. மரியுபோல் நகரில் இரு நாட்டு படைகள் இடையே சண்டை நடைபெற்று வருகிறது. உக்ரைன் மீது ரஷ்ய படைகள் 4வது வாரமாக தாக்குதலைத் தொடர்ந்து வருகின்றனர். தலைநகர் கீவ்வை நோக்கி ரஷ்ய படைகள் முன்னேறி வரும் நிலையில், உக்ரைன் இராணுவத்தினரை சரணடையுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் கீவ்வின் புறநகரான மாக்ரிவ்Continue Reading

• உக்ரைன் மக்களே போரை நிறுத்த விரும்பினால் கூட , இந்த போர் தொடர்வதைத்தான் மேற்குலகம் விரும்புகிறது என்பதைத்தான் இங்கு நடக்கும் நிகழ்வுகள் கூறுகின்றன. • மேற்குலக அரசுகளின் நிகழ்ச்சி நிரலின்படியே, சகல Mainstream ஊடகங்களும், சமூக ஊடகங்களும் இயங்குகின்றன. • மறந்தும் ரஷ்ய- உக்ரைன் போரிற்கான மூல காரணமான GEOPOLITICS மற்றும் NATO விரிவாக்கம் என்பவை பேசுபொருளாக மாறிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றன. • உக்ரைனின் இறையாண்மைக்காகவும், உக்ரைன்Continue Reading