ஒரு சிற்றூரில் ஒரு சிறு குடும்பம் வாழ்ந்து வருகிறார்கள், வறுமையின் மூலம் தன் குடும்பத்தை நடத்தும் தந்தையின் நிலமையும் வறுமையின் மூலம் எப்படி முன்னேற்றம் அடைகிறார்கள் என்பதனை இக்கதை கூறுகின்றது. தந்தைக்கு தினக்கூலி நாள் ஒன்றுக்கு ரூபாய் 200 வருமானம். தாய் செங்கல் சூளையிள் வேலை பார்ப்பவள். இவர்களுக்கு இரு குழந்தைகள் .முதல் குழந்தை ஆணாகவும், இரண்டாவது குழந்தை பெண்ணாகவும் பிறக்கின்றார்கள். இரு குழந்தைகளும் பள்ளியிள் படித்துக் கொண்டிருக்கிறார்கள், வீட்டில்Continue Reading

ரஷ்யாவிற்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டபோது, உலக நாடுகள் ஏன் மேற்கத்திய தேசங்களை ஆதரித்து ஒற்றைக் குடையில் அணி திரளவில்லை? ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர், தைவான் போன்ற சிறிய தேசங்கள் கூட பக்கச்சார்புடன் அணிதிரளும் போது இலத்தீன் அமெரிக்கா, ஆப்ரிக்கா, ஆசியா போன்ற பெரிய பகுதியிலிருந்து ஒரு சிறிய முனகல் கூட கேட்காதது வருத்தமளிக்கவில்லையா? ஏன் இப்படி? இறையாண்மை மிக்க உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் போர்தொடுத்தபோது, மொத்தமுள்ளContinue Reading

கட்டுரையாளர்:  குகன் யோகராஜா ரஷ்யா உக்ரைன் போர் தொடர்ந்து நடந்து வருகிறது. இரு பக்க சேதங்கள் எதிர்பார்க்கப்படவேண்டியவைதான். இந்த சூழலில் 3500 ரஷ்யப்படையினர் கொல்லப்பட்டமை என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகின்றன.எனினும் இந்தச் செய்தியினை மேற்குலக ஊடகங்களே ஒத்துக்கொள்ளவில்லை. இப்படியான செய்திகள் பரப்பப்படுவது, ரஷ்யர்களிடையே தோல்வி மனப்பான்மையை உருவாக்க செய்வதோடு, அதன் மூலமாக அழுத்தங்களை அதிபர் புதினுக்கு கொடுக்கும் முயற்சியே என்பதே மேற்குலக ஊடகர்களின் கருத்து. மேலும்,உக்ரைன் மீதான போரில் பொதுமக்களின் உயிரிழப்புக்கள், அவர்கள் படும்  சிரமங்களை மேற்குலகம் கூடுதலாக வெளியிட்டு வருவதன் காரணம், ஒட்டுமொத்தமான  ரஷ்ய எதிர்ப்பை ஐரோப்பிய மக்களிடையே உண்டாக்குவதன்மூலம், அதிபர் புதின்  அழிக்கப்பட வேண்டியவர் என்ற மனோநிலையை உண்டாக்குவது மட்டுமே. இதே மேற்குலக ஊடகங்கள், ஈராக், லிபியா, எகிப்த், சிரியா, ஆப்கான் மீதான  தாக்குதல்களின்போது, பொதுமக்களின்  அழிவை விடவும், அவர்களின் கஷ்டங்களை  விடவும், அந்தந்த நாடுகளின் தலைமைகள்  கொடூரமானவர்கள் என்ற பிம்பத்தையே மேற்குலக மக்களிடம் விதைத்ததை அவதானித்தால், மேற்குலக ஊடகங்களின் அரசியலும்  மிக நன்றாக புரியும். உதாரணத்துக்கு, ஈராக் மீதான தாக்குதல்களுக்கு, ஈராக் அணுவாயுதம் தயார் செய்கிறது என்பதே முதன்மையான குற்றச்சாட்டு. அப்படி இல்லை என சுயாதீன அமைப்புக்கள் மறுத்திருந்தாலும், ஈராக் சென்று அங்கு  ஆய்வுகளை நடத்திய அமெரிக்க சார்பு ஆய்வுக்குழுக்கள், ஈராக் அணுவாயுதம் தயாரிக்கும்  அறிகுறிகள் தென்படுகின்றன என்றே அறிக்கை அளித்தன. ஐ.நா. சபையின் எதிர்ப்பையும் மீறி  அமெரிக்க / நேட்டோ படைகள் ஈராக்கை  துவம்சம் செய்தன. தாக்குதல் தொடங்கி, அதிபர் சதாம் ஹுசைன் பிடிபடுவதற்கு முன்னரேயே, ஈராக்கில் அணுவாயுதம்  தயாரிக்கும் வசதியே இல்லையென்பது நிரூபணமானது. எனினும்,Continue Reading

அமெரிக்கா – சீனா இடையிலான தொடர் போட்டி : இன்றைய உலகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ( Global GDP- nominal value) சீனாவின் பங்கு 15%. அமெரிக்காவின் பங்கு கிட்டத்தட்ட 25%. ஆனால் Purchasing Power Parity (PPP) அளவுகோலின்படி, 2014 லேயே சீனாவின் GDP அமெரிக்காவின் GDP ஐ தாண்டியாகிவிட்டது. அமெரிக்காவை விட நாலுமடங்கு அதிக சனத்தொகையுள்ள சீனாவின் பொருளாதாரம் பெரிதாகி கொண்டே போவது இயல்பானது.  ஒரு புள்ளியில் சீன பொருளாதாரம் அமெரிக்காவை விட பெரிதாகும். பின்னர் இரட்டை மடங்காகும். • இது சீன–அமெரிக்க போட்டியில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்? சீனாவின் பொருளாதாரம் பெரிதாகும்போது அதனது  Research and Development (R&D) இற்கான நிதி, Military expenses என்பவை பெருமளவில் அதிகரிக்கும். அதேநேரத்தில் அமெரிக்கா அதனது R&D , Military  என இரண்டிலும் சீனாவை விட அதிகமாக நிதி ஒதுக்குவதற்கு ( outspend) அதனது பொருளாதாரம் அனுமதிக்காது. அவ்வாறு அமெரிக்காவின் R&D சீனாவோடு போட்டிபோட முடியாத போது , அதனது Edge ஐ இழக்க ஆரம்பிக்கும். இது அமெரிக்கா அதனது technology superiority ஐ இழக்க வழிவகுக்கும்.அதை இழக்கும்போது அமெரிக்கா அதனது military superiority ஐயும் இழக்க ஆரம்பிக்கும். அமெரிக்கா தனது military superiority ஐ இழக்கும்போது, அதற்கான பேரம் பேசும் வலிமையும் குறைந்துவிடும்.Continue Reading

• போரியல் ஆற்றலிற்கும் Survival இற்கும் இடையிலான நெருங்கிய தொடர்பு மனித வரலாற்றில் ஒப்பீட்டளவில் போர்கள் குறைந்த காலகட்டமாக கடந்த 50 வருடங்களை சொல்லலாம். இதற்கான காரணத்தை பெரும்பாலான சாமானிய மக்கள் பின்வருமாறு தங்களது பொதுபுத்தியில் பதிந்து வைத்திருக்கிறார்கள். இன்றைய மனிதன் மேன்மையான எண்ணங்களையும், முற்போக்கான பார்வையையும் கொண்டிருப்பதால் இந்த பெரும் அழிவுகளை ஏற்படுத்தக்கூடிய போர்கள், ஆயுதங்களிலிருந்து உலகம் முற்றாக விடுபட்டுவிட்டதாகவும், அதனால் ஒரு நாடு அதனது போரியல் ஆற்றலை பலப்படுத்துவதை மிகவும் பிற்போக்குத்தனமான செயலாகவும் அவர்களது பொதுபுத்தியில் பதிந்து வைத்திருக்கிறார்கள். • உண்மையில் ஒப்பீட்டளவில் ஏன் போர்கள் குறைவாக உள்ளன? இதற்கான முக்கிய காரணங்களை மிக சுருக்கமாக பின்வருமாறு  குறிப்பிடலாம். •வர்த்தகம் மூலம் இறையாண்மை அரசுகளுக்கு இடையே உருவாகிய economic interdependence •நவீன ஆயுதங்கள் ஏற்படுத்தும் அழிவின் வீச்சு அதிகமானது (destructive power of modern weapons). அதனால் அரசுகள் ஒரு வித தயக்கத்துடனேயே போரை அணுகுகின்றன. •நவீன சமூகங்களிற்கு போரின் மீதான வெறுப்பு அதிகமாக இருப்பது. இதனால் பெரும்பாலான ஜனநாயக அரசுகள் போரை தமது ‘last resort’ ஆக வைத்திருக்க வேண்டிய கட்டாய நிலையில் இருக்கின்றன. ஆனால் சாமானியன் நினைப்பது போல போரியல் ஆற்றலை பிற்போக்குத்தனமான ஒன்றாக இறையாண்மை அரசுகள் அணுகவில்லை. #தங்களது survival இற்கான உயிர் ஆதாரமாக போரியல் ஆற்றலையே இறையாண்மை அரசுகள் கருதுகின்றன. மற்றைய காரணிகள் எல்லாம் அதற்கு பின்னர்தான். போரியல் ஆற்றல் எவ்வாறு உலக ஒழுங்கின் நகர்வுகளை தீர்மானிக்கின்றது என்பது சாமானியனின் கண்ணுக்கு புலப்படுவதில்லை. இதற்கு சிறந்த உதாரணம் இன்றைய ரஷ்யா. •  declining great power என அழைக்கப்படும் ரஷ்யா இந்த பார்வை கடந்த பல வருடங்களாகவே ராஜதந்திர வட்டாரத்தில் இருக்கிறது. ரஷ்யாவின் decline தவிர்க்க முடியாதது என்பதாகவே மதிப்பிடப்படுகிறது. • ஏன் அவ்வாறு மதிப்பிடப்படுகிறது? 1. நீண்டகாலமாக தொடர்ச்சியாக சுருங்கிவரும் ரஷ்யாவின் சனத்தொகை வளர்ச்சி 2. அதனது பொருளாதாரம் தொடர்ச்சியாக Oil and gas ஐ நம்பியிருக்கும் நிலை. அதனது ஏற்றுமதியில் 60% ஐயும் GDPContinue Reading

கட்டுரையாளர்: சிவரஞ்சன் உக்ரைன் மீது போர் தொடுக்கும் அளவுக்கு ரஷ்யா கோபப்பட்டது ஏன்? இது தொடர்பான பின்னணி தகவல்கள், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க நேட்டோ அமைப்பு தான் முக்கிய காரணம் என கூறப்படுகிறது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. வான்வெளி தாக்குதலில் ஈடுபட்டு உக்ரைன் நாட்டு நகரங்களில் ரஷ்யா குண்டு வீசி வருகிறது. இருநாடுகளுக்கு இடையேயான இந்த போருக்கு முக்கிய காரணமாக ஒன்று உள்ளது. அதாவது நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைய முயற்சித்தது தான் போருக்கு பிள்ளையார் சுழி போட்டுள்ளதாக கூறப்படுகிறது. நேட்டோ என்பது வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு ஆகும். 2ம் உலக போருக்கு பிறகு சோவியத் யூனியன், கிழக்கு ஐரோப்பாவில் இருந்து படைகளை திரும்ப பெற மறுத்தது. இதை முறியடிக்கும் வகையில் நட்பு நாடுகள் இணைந்து உருவாக்கியது தான் இந்த நேட்டோ படைகள். துவக்கத்தில் அமெரிக்கா,பிரிட்டன், பிரான்ஸ், கனடா, இத்தாலி, நெதர்லாந்து, ஐஸ்லாந்து, பெல்ஜியம், லக்சம்பர்க், நார்வே, போர்ச்சுகல், டென்மார்க் நாடுகள் உறுப்பினர்களாக இருந்தன. தற்போது நேட்டோவில் 30 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்த நாடுகளின் ராணுவ வீரர்கள் நேட்டோ படையில் அங்கம் வகிக்கின்றனர். இதில் இணைவதன் மூலம் இக்கட்டான சூழலில் நேட்டோ ராணுவ உதவிகளை பெற முடியும். தொடர்ச்சியாக இந்த அமைப்பில் புதிய நாடுகள் இணைக்கப்பட்டு வருகின்றன. சோவியத் யூனியன் பிரிவு இதற்கிடையே தான் 1991 டிசம்பர் 25ல் சோவியத் யூனியன் 15 நாடுகளாக பிரிந்தது. சோவியத் யூனியனில் அங்கம் வகித்த ஆர்மீனியா, அஜர்பைஜான், பெலாரஸ், ​​எஸ்டோனியா, ஜார்ஜியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், லாட்வியா, லிதுவேனியா, மால்டோவா, ரஷ்யா, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், உக்ரைன், உஸ்பெகிஸ்தான் ஆகியவை தனி நாடுகளாகின.Continue Reading

கட்டுரையாளர் :- செந்தில்ராஜ் திரவியம் இந்தியாவின் மிகப்பெரிய தேசிய பங்கு சந்தையில் ஒரு இமாலய  ஊழல் நடந்து இருக்கிறது. ஆனந்த் சுப்பிரமணியன் என்ற பார்ப்பனர்  சித்ரா ராமகிருஷ்ணன் என்ற NSE யின் முதன்மை செயல் அதிகாரி மற்றும் மேலாண்மை இயக்குனரை மத நம்பிக்கையில் வசியம் செய்து தனக்கு வேண்டியதை சாதித்துக் கொண்டிருக்கிறார். ஒரு போலியான ஈ-மெயில் முகவரியை உருவாக்கி இமயமலையில் இருக்கும் யோகியிடம் இருந்து கட்டளைகள் வருவது போன்று இவனே அனுப்பி ஒரு சாதாரண வேலையில் ஆண்டுக்கு 15 லட்சங்கள் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தவன் சித்திரா ராமகிருஷ்ணனின் மூலம்  1.68 கோடிகள் சம்பளத்துக்கு இந்தியாவில் மட்டுமல்ல உலகிலேயே மிகப்பெரிய பங்கு வர்த்தக மையங்களுள் ஒன்றான என் எஸ் சியின் ஆலோசகராக நுழைந்து விடுகிறான்.   அந்நியன் படத்தில் விக்ரம் அம்பி அந்நியன் ரெமோ என்று வேறு வேறு அவதாரம் எடுப்பது போன்ற ஒரு சினிமாத்தனமான நிகழ்வு உண்மையில் நடந்தேறி இருக்கிறது.. பின்னர் ஒரே ஆண்டில் 4.4 கோடி சம்பள உயர்வு பெற்றதும் அல்லாமல் பங்குச் சந்தையின் எந்த நிறுவனங்கள் என்ன செய்யப்போகின்றன என்ற முக்கியமான தகவல்களை வேண்டியவர்களுக்கு கசிய விட்டு, அதன் மூலம் மற்றவர்கள் வாங்கும் முன்னரே குறைந்த விலையில் நிறுவனங்களின் பங்குகளை வாங்கவும் விற்கவும் செய்து பல்லாயிரம் கோடிகளை மர்ம நபர்கள் ஆதாயம் தேடியது பற்றி எல்லாம் இப்போது புலன் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. மதம் மனிதர்களை எப்படி மடையர்களாக்குகிறது என்பதை இந்த நிகழ்வு காட்டுகிறது. கோவில்களில் பூஜை செய்யும் பூசாரிகள் மக்களை ஏமாற்றும் வழக்காமான ஒரு சிறிய பார்முலாவை, பெரிய அளவுக்கு ஒரு தேசிய பங்கு சந்தையில் நிகழ்த்தி இருக்கிறார்கள். கடவுள் இருக்கு என்று சொல்பவன் ஏமாளி. கடவுள் இல்லை என்று சொல்பவன் புத்தி சாலி. நான் கடவுள் என்று சொல்பவன் மிகவும் நாட்டுக்கே மிகவும் ஆபத்தானவன். இந்தியாவின் GDP போன்று ஒன்றரை மடங்கு வர்த்தகம் செய்யும் ஒரு தேசிய பங்குச் சந்தையின் பாதுகாப்பு விதிகள் காற்றில் பறக்க விடப்பட்டிருக்கிறது.. பத்து லட்சம் ரூபாய் ஆலோசனை கட்டணம் பெற்றார் என்ற ஒரே குற்றச்சாட்டின் பெயரில் நூறு நாட்களை சிறையில் கழித்தார் நமது முன்னாள் நிதி அமைச்சர். ஆனால், இந்தியா மீது ஒரு மிகப்பெரிய பொருளாதார போர் செய்து இருக்கிறார்கள் இந்த பார்ப்பனர்கள். அவர்களுக்கு இன்னும் தண்டனைகள் எதுவும் வழங்கப்படவில்லை.  ஒரு கைது நடவடிக்கை கூட இல்லை. குறைந்த பட்ச தண்டனையாக சுயமாக ராஜினாமா செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு லீவு காசை சரண்டர் செய்து பெற்றுக் கொள்ளும் உரிமை மறுக்கப்பட்டிருக்கிறதாம். அடேங்கப்பா எவ்வளவு பெரிய தண்டனை அந்த அம்மையாருக்கு. இதைத்தான் ஆ ராசா ஒவ்வொரு முறையும் குறிப்பிடுகிறார். தலித் என்பதாலேயே இல்லாத ஒரு ஊழலை இந்த பார்ப்பனர்களும் பார்ப்பன மீடியாக்களும் ஊதி பெரிதாக்கி காட்டுகிறார்கள் என்பார். உண்மையில் பார்ப்பனர்களின் ஊழல்கள் பவானி ஜமுக்காளங்கள் போட்டு மூடி மறைக்கப்பட்டு விடுகின்றன. இன்றளவும் ஜெயலலிதாவின் இமாலய ஊழல் எந்த பார்ப்பன மீடியாவிலும் பேசப்படாது. ஆனால் கலைஞர் செய்யாத ஊழலைக் கூட செய்தார் என்று பேசு பொருளாக்குவதே பார்ப்பனர்களின் வேலை. இப்போது நடந்திருக்கும் ஊழல் காங்கிரஸ் ஆட்சியில் நடந்து இருந்தால் இந்நேரம் ஸ்மிரித்தி இராணி, குஷ்பூ போன்றவர்கள் இந்திய பிரதமரின் வீட்டின் முன்னால் போராடிக்கொண்டு இருந்திருப்பார்கள். அவரை ராஜினாமா செய்யச் சொல்லி தங்களது வானர பரிவாரங்களுடன் அவருடைய வீட்டை முற்றுகை இட்டு இந்த உலகையே திரும்பிப் பார்க்க செய்து இருப்பார்கள். இந்தியாவை  செயல்பட விடாமல் செய்து இருப்பார்கள். ஹெச் ராஜா போன்றவர்கள் ஸ்டாலின் வீட்டின் முன் கொடி பிடித்து இவர்களுக்கும் கொள்ளையில் பங்கு என்று பிரச்சாரம் செய்து கொண்டிருப்பார்கள். நல்ல வேளை நாமெல்லாம் மோடியின் அச்சே தினத்தில் ஒரு பிரச்சனையும் இல்லாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இப்போதே இந்த மெகா ஊழலின் பின்னணியில் இருக்கும்  ஆனந்த சுப்பிரமணியனின் என்ற யோகி என்ற கஞ்சனின் நாக்பூர் தொடர்புகள் கண்டறியப்பட்டு தேர்தலில் பேசு பொருளாக்கப்படவேண்டும்.பாஜகவை  வீழ்த்த கிடைத்திருக்கும் ஒரு நல்ல வாய்ப்பை எதிர் கட்சிகள்  பயன்படுத்திக் கொள்ளுமா ? நன்றி : செந்தில்ராஜ் திரவியம்Continue Reading

கட்டுரையாளர்: வசுமதி வசந்தி பிரான்சு தமிழச்சி மற்றும் சாரதா ஆகியோர் செய்து கொண்டிருப்பது என்ன ? பிரான்சு தமிழச்சி மற்றும் சாரதா ஆகியோர் ஒரு youtube channel க்கு அளித்துள்ள பேட்டியில் ஒரு பெண்ணின் பெயரை அவருடைய அனுமதி இல்லாமல் குறிப்பிடுகிறார்கள். அந்த பெண்ணுக்கு பாலியல் ரீதியிலான பாதிப்பு நடந்ததாக குறிப்பிடுகிறார்கள்.  அந்த நபரை எனக்கு தனிப்பட்ட முறையில் நல்ல பழக்கம்.ஆனால் தனக்கு அப்படி எதுவும் நடக்கவில்லை என்றும் இவர்களிடம் தான் எந்த உதவியும் கேட்கவில்லை என்றும் அவர்  கூறுகிறார். ஆக , பிரான்சு தமிழச்சி மற்றும் சாரதா ஆகியோர் ஒரு பெண்ணின் பெயரை அவரின் அனுமதியின்றி பொதுவெளி ஊடகத்தில் அனைவரும் பார்க்கும்படி பயன்படுத்துவது என்பது ஒரு பெண்ணின் வாழ்வில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை அனைவரும் அறிவர். பொதுவாழ்வில் இல்லாமல் தனிப்பட்ட வாழ்வில் இருக்கும் பெண்ணின் பெயரை பொதுவெளியில் குறிப்பிட இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? இது இந்திய அரசியல் சட்டத்துக்கு எதிரானது.   இவ்வாறு பொது இடங்களில் தேவையில்லாமல் தனிப்பட்ட வாழ்வில் இருக்கும் பெண்ணின் பெயரை குறிப்பிடுவதால அந்த பெண்ணின் வாழ்வு கேள்விக்குறியானால் இந்த பிரான்சு தமிழச்சி மற்றும் சாரதா இதற்கு பொறுப்பு ஏற்பார்களா?   இந்த youtube channel க்காவது இந்த அடிப்படையான புரிதலும் ஊடக தர்மமும் நேர்மையும் இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. இதற்காக இதனை ஒளிபரப்பிய youtube channel மீதும் இந்திய குற்றவியல் சட்டத்தின்படி வழக்கு தொடர முடியும். இவற்றை உணர்ந்து இது போன்ற youtube channelகளும் இனியாவது தங்கள் பொறுப்புகளை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும். இந்த பிரான்சு தமிழச்சியால் பாதிக்கப்பட்ட பெண்கள் சிலரை நான் அறிவேன். சில பெண்கள் தற்கொலைக்கு முயன்றதும், அவர்களின் தனிப்பட்ட வாழ்வு பாதிப்புக்கு உள்ளானதையும் அறிவேன். அவர்களின் தனிப்பட்ட வாழ்வில் இருப்பதாலும் அவரவர் குடும்ப அமைப்பில் இருப்பதாலும், சூழ்நிலை காரணமாக தங்களை பொது வெளியில் வெளிப்படுத்தி புகார் அளிக்க விரும்பாத, இயலாத கையறு நிலையில் இருக்கிறார்கள். அவர்களின் இந்த நிலையை தவறாக பயன்படுத்தி பிரான்சு தமிழச்சி மற்றும் சாரதா ஆகியோர் தங்களின் தவறான போக்கை தைரியமாக அச்சமின்றி செய்து வருகிறார்கள். இதை அனைத்து அமைப்புகளும், தோழர்களும் புரிந்து கொள்ள வேண்டுகிறேன். சாது மிரண்டால் காடு கொள்ளாது என்ற பழமொழியை இங்கு நினைவுபடுத்த கடமைப்பட்டுள்ளேன். மற்றும், தோழர் கொளத்தூர் மணியின் அறிக்கையை தொடர்ந்து எனது வழக்கறிஞர் முக்கியமான ஆதாரங்களை யாரிடமும் பகிரக்கூடாது என்று சொன்ன காரணத்தினால்  கொளத்தூர் மணியிடம் எந்த முக்கியமான ஆதாரங்களையும் நான் கொடுக்கவில்லை என்று தன் நிலையை திடீரென தான் முன்பு சொன்னதற்கு எதிராக மாற்றிக் கொண்டுவிட்டார்  இந்த பிரான்சு தமிழச்சி. இதை இவரே‌ live ல் சொல்லியிருக்கிறார். பிரான்சு தமிழச்சி தன்னுடைய தொலைக்காட்சி பேட்டியில் தவறான ஒரு எண்ணிற்கு பெண்களின் நிர்வாண படங்களை அனுப்பியதாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து உள்ளார். அவ்வாறு யார் என்றே தெரியாத பிறிதொரு நபருக்கு அலைபேசியில் பெண்களின் நிர்வாண படங்களை அனுப்புவது குற்றம். இதற்காகவே இவர் தண்டிக்கப்பட வேண்டும். இத்தகைய படங்களை வைத்து எந்த பெண்களாவது மிரட்டப்பட்டிருந்தால் அது வன்மையாக கண்டிக்கத்தக்கது, தண்டனைக்குரியது. இப்படியான படங்களை காவல்துறையின் வழக்கிற்கான தனி பார்வைக்கு ரகசிய பாதுகாப்பு அடிப்படையில் கொடுப்பதுதான் முறையான செயல். அதை அவர் மீறி இருப்பது சட்டப்படி குற்றம். இதற்காகவே பிரான்சு தமிழச்சி கைது செய்யப்பட வேண்டும். தோழர் கொளத்தூர் மணி அவர்களின் தியாகத்தையும்,உழைப்பையும் ஆக்கப்பூர்வமான பணிகளையும் மக்கள் நன்கு அறிவர். இதற்கு துளியும் சம்மந்தமே இல்லாத அவரை அவமதிக்கும் விதமாகவும்,Continue Reading

இன்று ஒரே நாள் காலையில் தமிழ்நாட்டில் பாஜகவினர் மீது மூன்று தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று நள்ளிரவில் சென்னை தி நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். இதன் காரணமாக, செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் திரு. அண்ணாமலை, இதற்கு பின்னால் மிகப் பெரும் சதி இருப்பதாக குற்றம் சாட்டி இதனை தேசிய புலனாய்வு முகமை N.I.AContinue Reading

கிராமப்புறங்களில் இருக்கிற மிகப் பெருவாரியான மக்களுக்கு குறைந்த பட்ச ஊதியத்தை வழங்க கூடிய வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் – 100 நாள் வேலைத்திட்டம் முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அமல்படுத்தப்பட்டது.  அண்மையில் வெளியான தகவல்கள், கடந்த ஆண்டுகளில் எல்லாம் இந்தத் திட்டத்திற்கு வழங்கப்பட்ட நிதி குறைக்கப்பட்டதாகவும், பல நூறு கோடி ரூபாய் அளவிற்கு வேலை செய்பவர்களுக்கான ஊதியம் இன்னும் வழங்கப்படாமல்Continue Reading