மேகதாது பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப்பேரவையில் தனி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேகதாது அணை விவகாரம் தொடர்பான தனி தீர்மானத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேரவையில் தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், காவிரி விவகாரம் தொடர்பாக கடும் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய சூழ்நிலையில் தமிழகம் இருப்பதாகவும், உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி கர்நாடகம் செயல்படுவது அடாவடித்தனம் என்றும்,மேகதாதுவில் நாம் தோல்வியை தழுவினால்? வருங்கால சந்ததி நம்மை சபிக்கும் என்று அவர் கூறினார்.

துரைமுருகனை தொடர்ந்து பேரவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, காவிரி விவகாரத்தில் தமிழக உரிமையை காப்பது எல்லோரின் கடமை என்றும், காவேரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை மதிக்காமல், 16.02.2010 அன்று உச்சநீதிமன்ற இறுதிக்கு தீர்ப்பை மதிக்காமல், தன்னிச்சையாக மேகதாது அணைகட்ட கர்நாடகா நிதி ஒதுக்கியது கண்டிக்கத்தக்கது என்றார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி.

அதன்பின்னர் பாஜக எம்.பி. நயினார் நாகேந்திரன் மேகதாது அணை தொடர்பான தீர்மானத்தை ஆதரித்து பாஜக கட்சி சார்பாக திமுகவின் தீர்மானத்தை முழுமனதோடு ஆதரிப்பதோடும், தனி தீர்மானத்தை முழுமனதாக ஆதரிப்பதுடன் இவ்விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி மத்திய அரசை தனிப்பட்ட முறையில் வலியுறுத்தும், என்று இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழர்களின் நலனை காப்பதற்காக, காவிரி நீர் பெறுவதற்காக தமிழக அரசு எடுத்து வருகின்ற எல்லா முயற்சிகளுக்கும் தமிழக பாரதிய ஜனதா கட்சி தனது முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது என்று கூறினார் அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன்.

காவிரி விவகாரம் தொடர்பான நெடுங்கால போராட்டத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் நிச்சயம் வெல்வார் என காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார். 1974ல் விதிகளை மீறி அணைக்கட்ட கர்நாடகா முயற்சி செய்துள்ளது. அதற்குப் பிறகு 50 ஆண்டுகள் காலாவதியாகிவிட்டது என்று அடம் பிடித்தார்கள். இதையெல்லாம் அப்போதுள்ள நமது மாண்புமிகு முதலமைச்சர்கள் முறியடித்து தமிழகத்தில் உரிமைகளை நிலை நாட்டினார்கள். நான் இதனை முழுமையாக நம்புகிறேன். தமிழக மக்களும் முழுமையாக நம்புகிறார்கள். இந்த 130 ஆண்டுகால பிரச்சனையை நமது மாநில முதலமைச்சர் பெருந்தன்மையோடும். பேராண்மையோடும் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை தமிழக மக்களுக்கு இருக்கிறது. என்று காங்கிரஸ் எம்பி பெருந்தகை தெரிவித்தார்.

தீர்மானத்திற்கு அணைத்து கட்சியினரும் ஆதரவு அளித்த பிறகு இறுதியில் பேசிய முதலமைச்சர் மு க ஸ்டாலின் தமிழக உரிமையில் ஒன்றுபட்டு நின்று உரிமையை நிச்சயம் வெல்வோம் என உறுதியளித்தார்.
அணைக்கு அனுமதிஅளிக்க கூடாது என்று ஒன்றிய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவும், சட்ட ரீதியான நடவடிக்கைகளும், இந்த அரசு நிச்சயமாக எடுக்கும்.அதில் எந்தவித பாகுபாடுகளும் நாங்கள் பார்க்கமாட்டோம் . அணை கட்டக்கூடிய எல்லா முயற்சிகளையம் இந்த அரசு எதிர்க்கும்.தமிழ்நாடு மக்களின் நலனை நிச்சயம் பாதுகாக்கும். தமிழ்நாடு உரிமையில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிற்போம். நிச்சயம் நாம் வெற்றி பெறுவோம்.

காவிரியில் தமிழக உரிமையைக் காக்கும் நோக்கில் முரண்களையும், விமர்சனங்களைக், கடந்து அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து ஆதரித்ததால் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.